12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 29

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 29

கேள்வி 29 : நிலவாழ் உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புகளை விளக்குக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • மண்புழு, நிலவாழ் பிளனேரியாக்கள் போன்றவை வளைதோண்டுதல், சுருளுதல், சுவாசம் போன்ற பிற செயல்பாடுகளுக்காக ஈரப்பதம் மிக்க சூழலைத் தருவதற்காக உடலின் மேற்பரப்பில் கோழையைச் சுரக்கின்றன.
  • கணுக்காலிகளில் சுவாசப் பரப்புகளுக்கு மேல் வெளிப்புறப் போர்வையும், நன்கு வளர்ச்சி பெற்ற மூச்சுக்குழல் மண்டலமும் காணப்படுகிறது.
  • முதுகெலும்பிகளின் தோலில் நன்கு பாதுகாக்கப்பட்ட சுவாசப் பரப்புகளுடன் பல செல் அடுக்குகளும் உள்ளன. இவை நீரிழிப்பைத் தடுக்க உதவுகின்றன.
  • சில விலங்குகள் கழிவு நீக்கத்தின் போது ஏற்படும் நீரிழிப்பை ஈடு செய்ய உணவிலிருந்து நீரைப் பெறுகின்றன.
  • பறவைகள் அதிக உணவு கிடைக்கும் மழைகாலம் துவங்கும் முன்பே கூடுகட்டுதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றன. வறண்ட காலத்தில் பறவைகள் அரிதாகவே இனப்பெருக்கம் செய்கின்றன.
  • ஒட்டகங்கள் நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றன, அவையாவன:
    • தோல் மற்றும் சுவாச மண்டலம் உதவியினால் ஆவியாக்கிக் குளிர வைப்பதன் மூலம்
    • அதிக அடர்த்தியுள்ள சிறுநீரை உருவாக்குவதன் மூலம்
    • அதன் உடல் எடையில் 25% நீரிழப்பைத் தாங்குத் திறன் பெற்றிருப்பதன் மூலம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement