12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 30
கேள்வி 30 : இனக்கூட்ட வயதுப் பரவலை விளக்குக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- வயது விகிதம்: ஒரு இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு முந்தைய வயது, இனப்பெருக்க வயது, மற்றும் இனப்பெருக்கத்திற்கு பிந்தைய வயது ஆகியவற்றின் விகிதம் வயதுப் பரவலைக் குறிக்கிறது.
- இனப்பெருக்க நிலை மற்றும் எதிர்கால அளவு: ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு இனக்கூட்டத்தின் இனப்பெருக்க நிலையைக் கண்டறிவதோடு, எதிர்கால இனக்கூட்ட அளவைத் தீர்மானிக்கும் காரணியாகவும் இது அமைகிறது.
- வேகமாக வளரும் இனக்கூட்டம்: இளம் உயிரினங்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படும்.
- நிலைத்த இனக்கூட்டம்: வெவ்வேறு வயதுடைய உயிரினக் குழுக்களின் பரவல் சமச்சீராக இருக்கும்.
- குறையும் இனக்கூட்டம்: முதிர்ந்த உயிரினங்கள் அதிகமாகக் காணப்படும்.


0 Comments