12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 31

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 31

கேள்வி 31 : வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகளை விளக்குக.


Answer for obtaining full marks :

  • இனக்கூட்டத்தின் வளர்ச்சி ஒரு தனித்துவமான குறிப்பிட்ட வடிவங்களில் அமைகிறது. வரைபடத்தில் இதனை வரையும் போது J வடிவ வளர்ச்சி மற்றும் S வடிவ வளர்ச்சி (சிக்மாய்டு) என இரு வடிவங்கள் கிடைக்கின்றன.

'J' வடிவிலான வளர்ச்சி வடிவம்

  1. ஒரு இனக்கூட்டத்தின் அளவு விரைந்து பெருகிக் கொண்டிருக்கும்போது, சுற்றுச்சூழல் தடை அல்லது திடீரெனத் தோன்றும்கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகியவற்றால் வளர்ச்சி விகிதம் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது.
  2. இவை J வடிவிலான வளர்ச்சியைக் கொடுக்கின்றன.
  3. மழைக்காலங்களில், நிறைய பூச்சி வகைகளின் எண்ணிக்கை உடனடியாக அதிகரிக்கும், மழைக்காலங்களின் முடிவில் அவை மறையும்).

S வடிவிலான வளர்ச்சி வடிவம் (சிக்மாய்டு வடிவம்)

  1. சில இனக்கூட்டங்களில் தொடக்கத்தில் உயிரினங்கள் எண்ணிக்கை மிக மெதுவாகவும், பின் வேகமாகவும் உயர்ந்து, பின்பு சுற்றுச்சூழல் தடைகளின் அதிகரிப்பால் மெதுவாகக் குறைந்து வளர்ச்சி வேகம் சமநிலையை எட்டி தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.
  2. இவ்வகை வளர்ச்சி S வடிவத்தைக் கொடுக்கின்றது.

Answer for Slow Learners :

இனக்கூட்டத்தின் வளர்ச்சி வடிவங்கள் :

J-வடிவ வளர்ச்சி:

இனக்கூட்டம் மிக வேகமாகப் பெருகி, சுற்றுச்சூழல் தடையால் திடீரென வீழ்ச்சியடையும். (எ.கா: மழைக்காலப் பூச்சிகள்).

S-வடிவ வளர்ச்சி (சிக்மாய்டு):

தொடக்கத்தில் மெதுவாகவும், பின் வேகமாகவும் வளர்ந்து, இறுதியில் சுற்றுச்சூழல் தடையால் சீரான சமநிலையை அடையும்.

Previously Asked Questions As follow :

  1. வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகளை விவரிக்கவும். March-2026 (Zoology)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement