12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 32

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 32

கேள்வி 32 : இரு வேறு சிற்றின விலங்குகளுக்கிடையேயான சார்புகள் ஏதேனும் இரண்டினை அட்டவணைப்படுத்துக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

அமென்சலிசம் (Amensalism)

  • சிற்றினம் 1: -
  • சிற்றினம் 2: 0
  • தன்மை: வலிமை வாய்ந்த பெரிய உயிரினங்கள், சிறிய உயிரினங்களின் வளர்ச்சியைத் தடுத்தல்.
  • எடுத்துக்காட்டு: யானையின் கால்களால் அழிக்கப்படும் சிறிய விலங்குகள்.

பகிர்ந்து வாழ்தல் (Mutualism)

  • சிற்றினம் 1: +
  • சிற்றினம் 2: +
  • தன்மை: இரண்டு சிற்றினங்களுக்கும் நன்மை பயக்கும் தொடர்பு.
  • எடுத்துக்காட்டு: முதலைக்கும் பறவைகளுக்கும் இடையேயான தொடர்பு.

உதவிபெறும் வாழ்கை (Commensalism)

  • சிற்றினம் 1: +
  • சிற்றினம் 2: 0
  • தன்மை: உதவி பெறும் உயிரி (சிற்றினம்-1) பலனடைகிறது. விருந்தோம்பி எந்த வகையிலும் பாதிக்கப்படுவது இல்லை.
  • எடுத்துக்காட்டு: உறிஞ்சு மீன் மற்றும் சுறாமீன்.

போட்டி (Competition)

  • சிற்றினம் 1: -
  • சிற்றினம் 2: -
  • தன்மை: ஒரு சிற்றினம் மற்றொன்றின் வளர்ச்சியைத் தடை செய்தல்.
  • எடுத்துக்காட்டு: பறவைகள் உணவுக்காக அணில்களுடன் போட்டியிடுதல்.

ஒட்டுண்ணி வாழ்கை (Parasitism)

  • சிற்றினம் 1: +
  • சிற்றினம் 2: -
  • தன்மை: சிற்றினம்-1 எனப்படும் சிறிய ஒட்டுண்ணி, சிறிய விருந்தோம்பியைப் பாதித்து, அதனால் பலனடைகிறது. ஒட்டுண்ணி விருந்தோம்பியை விடச் சிறியதாக இருக்கும்.
  • எடுத்துக்காட்டு: மனிதனின் உணவு மண்டலத்தில் காணப்படும் அஸ்காரிஸ் மற்றும் நாடாப்புழு.

கொன்று தின்னுதல் (Predation)

  • சிற்றினம் 1: +
  • சிற்றினம் 2: -
  • தன்மை: பெரிய கொன்று தின்னும் உயிரி இரையைக் கொல்கிறது. கொன்று தின்னும் உயிரி இரையை விடப் பெரியதாக இருக்கும்.
  • எடுத்துக்காட்டு: சிங்கம் மானை வேட்டையாடுதல்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement