12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 16
கேள்வி 16 : பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?
பாலியல் தொடர்பு மற்றும் இரத்தத்தின் மூலம் பரவும் நோய்த்தொற்று முறைகள்:
- பாதுகாப்பற்ற உடலுறவு: பால்வினை நோய்த்தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் இத்தொற்று பரவுகிறது.
- பகிர்ந்து பயன்படுத்துதல்: நோயாளி பயன்படுத்திய உட்செலுத்து ஊசிகள் மற்றும் அறுவை சிகிச்சைக் கருவிகளைப் பகிர்வதன் மூலம் தொற்று பரவலாம்.
- இரத்தம் செலுத்துதல்: தொற்றுள்ளவரின் இரத்தத்தைப் பெறுபவருக்கு இத்தொற்று பரவுகிறது.
- தாயிடமிருந்து சேய்க்கு: தொற்று கொண்ட தாயிடம் இருந்து கருவில் உள்ள சேய்க்கும் இத்தொற்று பரவ வாய்ப்புள்ளது.


0 Comments