12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 26

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 26

கேள்வி 26 : வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ அமைப்பைப் பரிசோதனை செய்ததன் மூலம் டி.என்.ஏ இரட்டிப்பாதல், குறியீடு திறன் மற்றும் திடீர் மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் முறை குறித்து என்ன முடிவுகளுக்கு வந்தனர்?


விடை :

  • டி.என்.ஏ இரட்டிப்பாதல் (DNA Replication):
    • இது "பாதிப் பழையன காத்தல் முறை" (Semiconservative Replication) என்று அழைக்கப்படுகிறது.
    • இந்த முறையை வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் முன்மொழிந்தனர்.
  • நிகழும் முறை:
    • டி.என்.ஏ இரட்டிப்பாதலின் போது, ஹைட்ரஜன் பிணைப்புகள் உடைந்து, இரட்டைச் சுருள் பிரிக்கப்படுகிறது.
    • பிரிக்கப்பட்ட ஒவ்வொரு இழையும் புதிய இழை உருவாகுவதற்கான வார்ப்புருவாக (Template) செயல்படுகிறது.
  • இறுதி விளைவு:
    • இதன் விளைவாக உருவாகும் இரண்டு புதிய இரட்டைச் சுருள் டி.என்.ஏ மூலக்கூறுகளில்,
      • ஒன்று பெற்றோர் (பழைய) பாலிநியூக்ளியோடைடு சங்கிலி இழையாகவும்,
      • மற்றொன்று புதிதாக உருவான நிகரொத்த பாலிநியூக்ளியோடைடு சங்கிலி இழையாகவும் இருக்கும்.
  • திடீர் மாற்றம்:
    • நியூக்ளியோடைடு இணைகளில் உள்ள அமினோ அமிலக் குறியீடுகள் மாறுவதால் திடீர் மாற்றம் (Mutation) ஏற்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement