12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 28
கேள்வி 28 : ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
விடை :
| எண் | டி.என்.ஏ. (DNA) | ஆர்.என்.ஏ. (RNA) |
|---|---|---|
| 1 | இரட்டை இழைகளைக் கொண்டது. | ஒற்றை இழையைக் கொண்டது. |
| 2 | டி ஆக்ஸி ரிபோஸ் சர்க்கரை இதில் காணப்படுகிறது. | இதில் ரிபோஸ் சர்க்கரை உள்ளது. |
| 3 | இதில் உள்ள காரங்கள்: அடினைன், குவானைன், சைட்டோசின், தையமின். | இதில் உள்ள காரங்கள்: அடினைன், குவானைன், சைட்டோசின், யூராசில். |
| 4 | அதிக நிலைப்புத்தன்மை மற்றும் குறைவான எதிர்வினையாற்றும் பண்பைக் கொண்டது. இதன் இரு இழைகளும் வெப்பத்தால் பிரிந்தாலும், இயல்பு சூழலில் மீண்டும் இணையும் திறன் கொண்டது. | ஒவ்வொரு நியூக்ளியோடைடிலும் 2' நிலையில் OH குழு இருப்பதால் எளிதில் சிதைகிறது. இது ஒரு எதிர்வினையாற்றும் குழுவாகும். |
| 5 | அதிக நிலைப்புத்தன்மையுடன் மரபியல் தகவல்களைச் சேமிக்கும் பணியைச் செய்கிறது. | வினையூக்கியாகவும் மற்றும் எதிர்வினையாற்றியாவும் செயல்படுகிறது. |


0 Comments