12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 30

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 30

கேள்வி 30 :


அ) கீழ்க்கண்ட வரைபடத்தைக் கண்டறிக.

DNA இரட்டிப்பாதல்

ஆ) இவ்வரைபடத்தை இரட்டிப்பாதல் பிளவாகக் கொண்டு வரைக. அதன் பாகங்களைக் குறிக்கவும்.

இ) DNAஇரட்டிப்பாதல் முறைக்குத் தேவைப்படும் ஆற்றலின் மூலம் யாது ? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் நொதிகள் யாவை?

  • தேவையான ஆற்றலை அளிக்க, டி-ஆக்ஸி-நியுக்ளியோடைடு-டிரைபாஸ்பேட் ஒரு தளப்பொருளாகச் செயல்படுகிறது.
  • இச்செயலில், DNA பாலிமெரேஸ், DNA ஹெலிகேஸ், மற்றும் DNA லிகேஸ் ஆகிய நொதிகள் ஈடுபடுகின்றன.

ஈ) இரண்டு வார்ப்புருவ இழைகளின் துருவத் தன்மை அடிப்படையில் புரதச் சேர்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பிடுக?.

  • வார்ப்புருவாக செயல்படும் இவ்விழை 3' → 5' துருவத்துவம் பெற்றது. எனவே, இதுவே வார்ப்புரு இழை எனப்படும்.
  • 5' → 3' துருவத்துவம் கொண்ட இன்னொரு இழையில் தைமினுக்கு பதில் யுரேசில் உள்ள RNA வரிசைக் காணப்படும். இவ்விழை குறியீட்டு இழை எனப்படும்.
  • இரு இழைகளுமே வார்ப்புருவாக செயலாற்றுமேயானால், RNA-விற்கான குறியீடு இரண்டிலும் வெவ்வேறு வரிசையில் இருக்கும். இதனால் புரதத்தின் அமினோ அமில வரிசையிலும் பாதிப்பு ஏற்படும்.
  • இதனால் DNA ஒரு பகுதியிலிருந்து இரு வேறு புரதங்கள் உற்பத்தியாகி மரபுத்தகவல் பரிமாற்ற நிகழ்முறையில் சிக்கல் ஏற்படுகின்றது.
  • இரு வித RNA மூலக்கூறுகள் ஒரே நேரத்தில் உற்பத்தியாகுமேயானால், RNA-வின் இரு இழைகளும் ஒன்றுக்கொன்று நிகரொத்தாக இருக்கும். எனவே அந்நிலை RNA புரதமாக மொழிபெயர்க்கப்படுவதை தடுக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement