12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 36
கேள்வி 36 : மனித மரபணு தொகுதித் திட்டத்தின் சிறப்பியல்புகள் ஏதேனும் இரண்டினைக் / ஐந்தினைக் குறிப்பிடுக.
விடை :
- மனித மரபணு ஆனது 3 பில்லியன் நியூக்ளியோடைடு கார மூலங்களைக் கொண்டுள்ளது.
- ஒரு மரபணு சராசரியாக 3000 கார மூலங்களைக் கொண்டுள்ளது.
- மிகப்பெரிய மனித மரபணுவான டிஸ்ட்ரோஃபின் (Dystrophin), 2.4 மில்லியன் கார மூலங்களைக் கொண்டுள்ளது.
- மனித குரோமோசோம் அமைப்பில் மரபணுக்கள் பல்வகைத் தன்மையைக் காட்சிப்படுத்துகின்றன.
- தோராயமாக 30000 மரபணுக்கள் மனித ஜீனோமில் காணப்படுகின்றன.
- ஏறக்குறைய 99.9% நியூக்ளியோடைடு கார மூலங்கள் அனைத்து மக்களிடமும் ஒத்தவையாக உள்ளன.
- கண்டுபிடிக்கப்பட்ட மரபணுக்களில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மரபணுக்களின் பணிகள் இன்னும் கண்டறியப்படவில்லை.
- 2 விழுக்காட்டிற்கும் குறைவான மரபணுக்கள் மட்டுமே புரதங்களை குறியீடு செய்கின்றன.
- முதல் குரோமோசோம் 2968 மரபணுக்களைக் கொண்டுள்ளது; அதேபோல் Y குரோமோசோம் 231 மரபணுக்களைக் கொண்டுள்ளது.


0 Comments