12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 35
கேள்வி 35 : முதன் முதலாக உருவான மரபுப்பொருள் ஆர்.என்.ஏ தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது - காரணங்ளுடன் நிரூபிக்க.
விடை :
- ஒரு மாதிரி செல்லில் DNA-வை விட RNA-வின் அளவு 10 மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், செல்லின் செயல்பாடுகளில் RNA-வின் பரந்துபட்ட பங்களிப்பாகும்.
- RNA, மரபணுப் பொருள் மற்றும் வினையூக்கி ஆகிய இரண்டு பணிகளையும் ஆற்றும் திறனைக் கொண்டுள்ளது.
- 1986-ல், வால்டன் கில்பெர்ட், பூமியின் முதல் மரபணுப்பொருள் RNA தான் என்று கூறினார்.
- உயிரின வாழ்க்கையின் முக்கியச் செயல்களான வளர்சிதை மாற்றம், மொழியாக்கம் (Translation), மற்றும் பிளவுறுதல் (Splicing) போன்ற அனைத்தும் RNA-வைச் சுற்றியே நடைபெறுகின்றன.
- லெஸ்லி ஆர்ஜெல், பிரான்சிஸ் பிரிக், மற்றும் கார்ல் வோயஸ் ஆகியோர், RNA உலகம் (RNA World) என்ற கருத்தை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம், வாழ்வதற்கும் இரட்டிப்பாதலுக்கும் தேவையான அனைத்து மூலக்கூறுகளிலும் RNA ஒரு வினையூக்கியாகச் செயல்பட்டது என நிறுவப்பட்டது.
- வைரஸ்களில் RNA மரபணுப் பொருள் என்பதைப் பிரன்கெல்-கான்ராட் மற்றும் சிங்கர் (1957) ஆகியோர் TMV (Tobacco Mosaic Virus) வைரஸைக் கொண்டு விளக்கினர்.
- 2006-ல் நோபல் பரிசு பெற்ற ஆன்ட்ரியு பையர் மற்றும் கிரேக் மெல்லோ ஆகியோர், உயிர்களில் RNA ஒரு வேதியியல் செயல்மிகு உட்பொருளாக உள்ளது என்ற கருத்தை முன்வைத்தனர்.


0 Comments