12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18

கேள்வி 18 : மூன்று வகை புதைபடிவமாக்கல் வகைகளை விவரி.


விடை :

  1. எஞ்சிய உடல் பகுதிகள் (Preserved Remains):
    • விலங்குகளின் கடினமான பாகங்களான எலும்புகள், பற்கள், மற்றும் ஓடுகள் ஆகியவை பூமியின் அடுக்குகளில் பாதுகாக்கப்படுகின்றன.
    • கடல்வாழ் விலங்குகளின் எலும்புகள் மற்றும் ஓடுகள் கடலின் உப்புத்தன்மை காரணமாக கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன.
    • இதற்கு எடுத்துக்காட்டாக, சுமார் 22,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கம்பளி மாம்டூத் யானைகள் சைபீரியாவில் படிவமாகக் கிடைத்துள்ளன.
  2. கல்லாதல் (Permineralization):
    • விலங்குகள் இறந்த பிறகு, அவற்றின் உடல் பாகங்களில் உள்ள வெற்றிடங்களில் இரும்பு பைரைட்டுகள், சிலிகா, கால்சியம் கார்பனேட், மெக்னீசியம் பைகார்பனேட்டுகள் போன்ற கனிம உப்புகள் படிந்து நிரப்பப்படும் அல்லது பதிலீடு செய்யப்படும் முறை கல்லாதல் எனப்படுகிறது.
  3. இயற்கையான அச்சுகளும் வார்ப்புகளும் (Molds and Casts):
    • இறந்த விலங்குகளின் உடல்கள் மென்மையான சேற்றுப் போன்ற பகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி அழியாத பதிவுகளை (Imprints) உருவாக்குகின்றன. இது பின்னர் கடினமாகி கல்லாக மாறுவதே அச்சுகள் (Molds) எனப்படுகின்றன.
    • இந்த அச்சுகளின் உட்புறம் உள்ள வெற்றிடங்கள் கனிம உப்புகளால் நிரப்பப்படும்போது, அவை வார்ப்புகளாக (Casts) உருவாகின்றன.
  4. கோப்ரோலைட்டுகள் (Coprolites):
    • இவை விலங்குகளின் கடினமாக்கப்பட்ட மலப்பொருட்களாகும். இவை கோப்ரோலைட்டுகள் எனப்படும் சிறு உருண்டைகளாகக் காணப்படுகின்றன.
    • இவற்றை ஆய்வு செய்வதன் மூலம், முந்தைய காலத்தில் வாழ்ந்த விலங்குகளின் உணவுப் பழக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement