12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21 A
கேள்வி 21 A : வேறுபாடுகளை எழுதுக : அ) இயல்பு நோய்த்தடைகாப்பு மற்றும் பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு.
விடை :
| இயல்பு நோய்த்தடைகாப்பு (Innate Immunity) | பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு (Acquired Immunity) |
|---|---|
| ஒவ்வொரு உயிரியும் பிறப்பிலிருந்தே இந்த நோய்த்தடைகாப்பு ஆற்றலைப் பெற்றிருக்கும். | ஒரு உயிரினம் பிறந்த பிறகு தன் வாழ்நாளில் அடையும் நோய்த்தடைகாப்பு. |
| இது இலக்குத் தன்மையற்றது (Non-specific). | இது குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் தன்மை கொண்டது (Specific). |
| இதன் திறன் பரந்த அளவிலானதாக இருக்கும். | இது பல்வகைத் தன்மை (Diversity), சுய மற்றும் அயல் மூலக்கூறுகளைக் கண்டறிதல் (Self and Non-self recognition) மற்றும் நினைவாற்றல் (Memory) ஆகிய பண்புகளைக் கொண்டது. |


0 Comments