TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-2
பகுதி I: ஆவணங்கள் மற்றும் நிர்வாகம்
- ஆவணக்காப்பகங்கள் மற்றும் குறிப்புகள்:
- 1736 முதல் 1760 வரை பிரெஞ்சு இந்திய உறவுமுறையின் அன்றாட நிகழ்வுகளைக் குறித்தவர்: ஆனந்தரங்கம்.
- ஆசியாவிலேயே பெரிய ஆவணக்காப்பகம்: இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI).
- 'சென்னை பதிப்பாசனம்' என்று அழைக்கப்படும் ஆவணக்காப்பகம் அமைந்துள்ள இடம்: சென்னை.
- சென்னை நாட்குறிப்புப் பதிவுகள் 1917ஆம் ஆண்டு யாரால் வெளியிடப்பட்டது: டாட்வெல்.
- நாணயங்கள் மற்றும் நோட்டுகள்:
- தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்ட, விக்டோரியாவுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர்: மன்னர் ஏழாம் எட்வர்டு.
- ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் முதல் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்ட ஆண்டு: ஜனவரி 1938.
- போர்ச்சுகீசியர்:
- 1487-ல் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த போர்ச்சுக்கீசிய மாலுமி: பார்த்தலோமியோ டயஸ்.
- பார்த்தலோமியோ டயஸை ஆதரித்த போர்ச்சுகல் மன்னர்: மன்னர் இரண்டாம் ஜான்.
- வாஸ்கோடகாமாவை வரவேற்ற கள்ளிக்கோட்டையின் மன்னர்: மன்னர் சாமரின்.
- வாஸ்கோடகாமாவின் கடல் வழியைப் பின்பற்றி 1500-ல் கள்ளிக்கோட்டையை அடைந்தவர்: அல்வாரிஸ் காப்ரல்.
- வாஸ்கோடகாமா இரண்டாவது முறையாக இருபது கப்பல்களுடன் இந்தியா வந்தடைந்த ஆண்டு: 1501.
- போர்ச்சுகீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம்: கொச்சின்.
- 1505-ல் இந்தியாவிலிருந்து போர்ச்சுகீசிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் ஆளுநர்: பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா.
- நவம்பர் 1510-ல் கோவாவை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றியவர்: அல்போன்சோ -டி-அல்புகர்க்.
- அல்புகர்க்கிற்குப் பிறகு கவர்னராக வந்த நினோ-டி-குன்கா 1530-ல் தலைநகரை மாற்றியது: கொச்சியிலிருந்து கோவாவிற்கு.
- இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தியவர்கள்: போர்ச்சுகீசியர்.
- கோவாவில் 'இந்திய மருத்துவ தாவரங்கள்' என்ற நூல் ஓர் ஐரோப்பிய எழுத்தாளரால் அச்சிடப்பட்டது: 1563.
- டச்சுக்காரர்கள் (நெதர்லாந்து):
- நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு: 1602.
- டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் கெல்டிரியா கோட்டையைக் கட்டிய ஆண்டு: 1613.
- ஆங்கிலேயர்:
- ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்திற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் அனுமதிப் பட்டயம் வழங்கிய ஆண்டு: கி.பி. 1600 டிசம்பர் 31.
- ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டை: புனித ஜார்ஜ் கோட்டை.
- பம்பாய் தீவை திருமண சீராகப் பெற்ற இங்கிலாந்து மன்னர்: இரண்டாம் சார்லஸ்.
- சுதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை கிழக்கிந்திய கம்பெனி பெற்ற ஆண்டு: 1698.
- டேனியர்கள் (டென்மார்க்):
- டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கிய ஆண்டு: 1616 மார்ச் 17.
- தரங்கம்பாடியை டேனியர்கள் அழைத்தது: டானஸ்பெர்க்.
- சீகன்பால்கு என்பவரை டென்மார்க்கின் அரசர் அனுப்பிய இடம்: இந்தியா.
- பிரெஞ்சுக்காரர்கள்:
- பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் 1664-ல் யாரால் உருவாக்கப்பட்டது: கால்பர்ட்.
- இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு: பிரான்சு.
- பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவுக்கு அருகே சந்திரநாகூர் என்ற நகரை நிர்மாணிக்க அனுமதி அளித்தவர்: முகலாய ஆளுநர் செயிஸ்டகான்.
- ஸ்வீடன்:
- சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை 1731-ல் நிறுவியவர்: ஜோதன்பர்க்.
- வங்காளம்:
- 1756-ல் நடந்த இருட்டறைத் துயரச் சம்பவத்தில் மூச்சுத் திணறி இறந்தவர்கள்: 123 பேர்.
- பிளாசிப்போர் நடைபெற்ற நாள்: 1757 ஜூன் 23.
- பக்சார் போரில் சுஜா-உத்-தௌலா, இரண்டாம் ஷா ஆலம், மீர்காசிம் ஆகியோரைத் தோற்கடித்த ஆங்கிலப்படைத் தளபதி: ஹெக்டர் மன்றோ.
- அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு: 1765 பிப்ரவரி 20.
- கர்நாடகப் போர்கள்:
- அடையாறு போர் (1746) நடைபெற்றவர்கள்: கர்நாடக நவாப் அன்வாருதீனுக்கும் பிரெஞ்சுப் படைக்கும் இடையே.
- முதல் கர்நாடகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை: அய்- லா - சப்பேல் உடன்படிக்கை (1748).
- ஆம்பூர் போரில் (1749) கூட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டவர்: கர்நாடக நவாப் அன்வாருதீன்.
- ஆற்காட்டை கி.பி. 1751-ல் தாக்கி அதனைக் கைப்பற்றியவர்: ராபர்ட் கிளைவ்.
- இரண்டாம் கர்நாடகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை: பாண்டிச்சேரி உடன்படிக்கை (1755).
- வந்தவாசிப் போரில் (1760) பிரெஞ்சுப் படையை முற்றிலும் தோற்கடித்தவர்: ஜெனரல் அயர் கூட்.
- மூன்றாம் கர்நாடகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை: பாரிசு உடன்படிக்கை (1763).
- ஆங்கிலேய-மைசூர் போர்கள்:
- முதல் ஆங்கிலேய மைசூர் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை: 1769 மதராஸ் உடன்படிக்கை.
- சர் அயர்கூட் ஹைதர் அலியை 1781-ல் தோற்கடித்த இடம்: பரங்கிப்பேட்டை.
- இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை: 1784 மங்களூர் உடன்படிக்கை.
- மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு: 1792.
- வெல்லெஸ்லி பிரபு திப்புவின் மீது போர் தொடுத்த ஆண்டு: 1799.
- மராத்தியப் போர்கள்:
- 1775-ல் ஆங்கிலேயருக்கும் ரகுநாதராவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்: சூரத் ஒப்பந்தம்.
- வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே சால்பை ஒப்பந்தம் கையெழுத்தான நாள்: 1782 மே 17.
- நிர்வாகம் மற்றும் நீதித்துறை:
- 'சிவில் சர்வீஸ்' என்ற வார்த்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி.
- 1860 ஒழுங்கு முறை ஆணையின் மூலம் தேர்வெழுத அதிகபட்ச வயது: 22.
- ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியரான சத்தியேந்திரநாத் தாகூர் தேர்ச்சி பெற்ற ஆண்டு: 1863.
- இராணுவத்தில் இந்தியர்களுக்கான உயர் பதவி: சுபேதார்.
- காரன்வாலிஸ் அமைத்த சரகங்கள் அல்லது தானாக்கள் என்ற காவல் பகுதிகளின் தலைவர்: தரோகா.
- சிவில் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அழைக்கப்பட்ட பெயர்கள்: திவானி அதாலத் மற்றும் பௌஜ்தாரி அதாலத்.
- வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி: சர் எலிஜா இம்பே.
- மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி: சர் திருவாரூர் முத்துசாமி.
- திட்டங்கள்:
- துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்: வெல்லெஸ்லி பிரபு.
- துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு: ஹைதராபாத்.
- நிலையான நிலவருவாய்த் திட்டத்தை 1793-ல் கொண்டு வந்தவர்: காரன்வாலிஸ் பிரபு.
- நிலையான நிலவருவாய்த் திட்டத்தின் வேறு பெயர்கள்: ஜமீன்தாரி, ஜாகீர்தாரி, மல்குஜாரி மற்றும் பிஸ்வேதாரி.
- இரயத்துவாரி முறையை 1820-ல் அறிமுகப்படுத்தியவர்கள்: தாமஸ்மன்றோ மற்றும் கேப்டன் ரீட்.
- இரயத்துவாரி முறையில் நிலத்தின் உரிமை ஒப்படைக்கப்பட்டது: விவசாயிகளின் வசம்.
- மகல்வாரி முறை யாருடைய சிந்தனையில் உதித்தது: ஹோல்ட் மெகன்சி.
- மகல்வாரி முறையில் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது: மகல் அல்லது கிராம விளைச்சலின் அடிப்படையில்.
- விவசாயக் கிளர்ச்சிகள்:
- சந்தால் கலகத்தில் 10,000 வீரர்களை ஒன்றுகூட்டிய சந்தால் சகோதரர்கள்: சித்து மற்றும் கங்கு.
- செப்டம்பர் 1859-ல் நாதியா மாவட்டத்தில் நடைபெற்ற அவுரிப் புரட்சியை நடத்தியவர்கள்: திசம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு சரண் பிஸ்வாஸ்.
- 'நீல் தர்பன்' நாடகத்தை எழுதியவர்: தீனபந்து மித்ரா.
- பாப்னா விவசாய எழுச்சியை யூசுப்சாகி பர்கானாவில் ஆரம்பித்தவர்: கேசப் சந்திரா ராய்.
- தக்காண கலகம் நடைபெற்ற ஆண்டு மற்றும் மாவட்டம்: 1875ஆம் ஆண்டு பூனா மாவட்டம்.
- சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு: மே 1918.
- 1918-ல் வரிகொடா இயக்கத்தை விவசாயிகள் தொடங்கிய கேடா சத்தியாகிரகம் நடைபெற்ற மாநிலம்: குஜராத்.
- மாப்ளா கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு: 1921.
- பர்தோலி விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த ஆண்டு: 1928.
- பாளையக்காரர்கள்:
- மதுரை நாயக்கர் விஸ்வநாதர் யாரோடு கலந்தாலோசித்து பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார்: அமைச்சர் அரியநாதருடன்.
- கிழக்கு பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் ஆட்சி செய்தவர்: கட்டபொம்மனின் கட்டுப்பாட்டின் கீழ்.
- மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் ஆட்சி செய்தவர்: பூலித்தேவரின் கட்டுப்பாட்டின் கீழ்.
- வீரபாண்டிய கட்டபொம்மன்:
- ஜெகவீரபாண்டியனுக்குப் பின் பாளையக்காரரானவர்: வீரபாண்டிய கட்டபொம்மன்.
- கட்டபொம்மனின் மனைவி பெயர்: ஜக்கம்மாள்.
- கட்டபொம்மன் தனது அமைச்சர் சிவசுப்பிரமணியத்துடன் இராமநாதபுரத்தில் கலெக்டரை சந்தித்த ஆண்டு: 1798.
- கட்டபொம்மனைக் கைது செய்து கம்பெனியிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை ராஜா: விஜயரகுநாத தொண்டைமான்.
- கட்டபொம்மன் கயத்தாறு கோட்டையில் தூக்கிலிடப்பட்ட நாள்: அக்டோபர் 17, 1799.
- வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள்:
- சிவகங்கையின் இராஜா முத்து வடுகநாதர் கொல்லப்பட்ட போர்: காளையார் கோவில் போர்.
- வேலுநாச்சியார் திண்டுக்கல் அருகில் விருப்பாச்சியில் யார் பாதுகாப்பில் வாழ்ந்தார்: கோபால நாயக்கர்.
- வேலுநாச்சியாரின் தற்கொலைத் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்த படைத்தளபதி: குயிலி.
- மருது சகோதரர்களின் பெற்றோர்: பொன்னாத்தாள் மற்றும் மூக்கைய்யா பழனியப்பன்.
- 'சிவகங்கை சிங்கம்' என அழைக்கப்பட்டவர்: சின்ன மருது.
- திருச்சிராப்பள்ளி அறிக்கை என அழைக்கப்பட்ட கூட்டமைப்பை உருவாக்கியவர்கள்: சிவகங்கையின் மருது பாண்டியர்.
- மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்ட நாள்: 1801 அக்டோபர் 24.
- ஊமைத்துரை மற்றும் செவத்தையா தூக்கிலிடப்பட்ட இடம்: பாஞ்சாங்குறிச்சியில்.
- தீரன் சின்னமலை:
- தீரன் சின்னமலையின் இயற்பெயர்: தீர்த்தகிரி.
- இறுதிப் போரின் போது தீரன் சின்னமலையைக் காட்டிக் கொடுத்த சமையற்காரர்: நல்லப்பன்.
- வேலூர் கலகம் (1806):
- வேலூர் கலகத்திற்கான உடனடி காரணமாக அமைந்த புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தியவர்: அக்னியூ.
- வேலூர் கலகத்தின் போது வேலூர் கோட்டையில் ஏற்றப்பட்ட கொடி: புலி உருவம் பொறித்த திப்புவின் கொடி.
- 1857 பெரும்புரட்சி:
- 1857 பெரும்புரட்சிக்கு உடனடிக் காரணமாக அமைந்த துப்பாக்கி: எல்பீல்டுரக துப்பாக்கி.
- 1857 மார்ச் 29-ல் பாரக்பூரில் தனது உயரதிகாரியைச் சுட்டுக் கொன்ற இளம் சிப்பாய்: மங்கள் பண்டே.
- டெல்லிக்கு வந்த மீரட் சிப்பாய்கள் இந்தியாவின் பேரரசராக அறிவித்தவர்: இரண்டாம் பகதூர்ஷா.
- குவாலியரில் படையைத் தலைமையேற்று வழிநடத்திய தாந்தியா தோபேவுடன் இணைந்தவர்: இராணி லட்சுமிபாய்.
- கல்வி:
- வேதம் என்ற சமஸ்கிருத சொல் பெறப்பட்ட சொல்: வித்.
- சாணக்கியர் தனது அர்த்தசாஸ்திரத்தை தொகுத்ததாகக் கூறப்படும் இடம்: தட்சசீல பல்கலைக்கழகம்.
- முஸ்லீம்கள் நிறுவிய தொடக்கப் பள்ளியின் பெயர்: மகதப்.


0 Comments