TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-1
தமிழ்நாட்டின் மற்றும் இந்தியாவின் வரலாற்றுக் குறிப்புகள்: வினா விடை தொகுப்பு
வரலாறு மற்றும் ஆவணங்கள்
- தமிழ் வரலாற்று குறிப்பு ஆவணங்களில் முக்கியமாக இருக்க வேண்டிய பெயர்: ஆனந்தரங்கம்.
- இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) அமைந்துள்ள இடம்: புதுடெல்லி.
- 'இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்: ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்.
- டெல்லியிலுள்ள இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகம் நிறுவப்பட்ட ஆண்டு: 1949.
- நவீன இந்தியாவின் முதல் நாணயம் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்ட ஆண்டு: கி.பி. 1862.
- இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்ற ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு: 1935.
- ஆங்கிலேயரால் 1690ல் புனித டேவிட் கோட்டை கட்டப்பட்ட இடம்: கடலூர்.
- 'மாலுமி ஹென்றி' என அறியப்பட்டவர்: போர்ச்சுகீசிய இளவரசர் ஹென்றி.
- வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை அடைந்த ஆண்டு: கி.பி. 1498.
- இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர்: அல்போன்சோ -டி- அல்புகர்க்.
- பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா பின்பற்றிய கொள்கை: "நீலநீர்க்கொள்கை".
- போர்ச்சுக்கீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்ட ஆண்டு: 1556.
- டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு தங்களின் வர்த்தக மையத்தை நிறுவிய இடம்: மசூலிப்பட்டினம்.
- ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவிய ஆண்டு: 1611.
- பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் மெட்ராசை யாரிடமிருந்து குத்தகைக்குப் பெற்றார்: சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர்.
- கல்கத்தாவில் கட்டப்பட்ட கோட்டை 1700ல் அழைக்கப்பட்ட பெயர்: வில்லியம் கோட்டை.
- இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை சூரத் நகரில் நிறுவியவர்: கரோன்.
- பாண்டிச்சேரியில் 'செயின்ட் லூயிஸ் கோட்டை' எனப்படும் கட்டடத்தை கட்டியவர்: பிரான்காய்ஸ்மாட்டின்.
- இருட்டறை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு: 1756.
- பிளாசிப் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: அலிநகர் உடன்படிக்கை.
- பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு: 1764.
- பக்சார் போருக்குப் பிறகு வங்காளத்தில் இரட்டையாட்சி முறையைக் கொண்டு வந்தவர்: இராபர்ட் கிளைவ்.
- ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு: 1749.
- வந்தவாசிப் போரில் (1760) பிரெஞ்சு படையை முற்றிலும் தோற்கடித்த ஆங்கிலேயப்படை தளபதி: ஜெனரல் அயர் கூட்.
- மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை.
- போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர்கள் நியமனம் என்ற கருத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய சட்டம்: 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
- ஐசிஎஸ் (ICS) தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர்: சத்தியேந்திரநாத் தாகூர்.
- இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியவர்: காரன்வாலிஸ் பிரபு.
- துணைப்படைத்திட்டத்தை (1798) இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்: வெல்லெஸ்லி பிரபு.
- வாரிசு இழப்புக் கொள்கையை (1848) கொண்டு வந்தவர்: டல்ஹௌசி பிரபு.
- நிலையான நிலவருவாய் திட்டத்தை 1793ல் கொண்டு வந்த தலைமை ஆளுநர்: காரன்வாலிஸ் பிரபு.
- இரயத்துவாரி முறையை 1820ல் அறிமுகப்படுத்தியவர்கள்: தாமஸ்மன்றோ மற்றும் கேப்டன் ரீட்.
- மகல்வாரி முறை யாருடைய சிந்தனையில் உதித்த திட்டம்: ஹோல்ட் மெகன்சி.
- விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட சந்தால் கலகம் நடைபெற்ற ஆண்டு: 1855-56.
- வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை வெளிப்படுத்த 'நீல் தர்பன்' என்ற நாடகத்தை எழுதியவர்: தீனபந்து மித்ரா.
- மே 1918ல் சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்படக் காரணமான சத்தியாகிரகம் நடைபெற்ற இடம்: பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரான்.
- பாளையக்காரர் முறையை 1529ல் ஏற்படுத்தியவர்கள்: விஸ்வநாதர் (மதுரை நாயக்கர்) மற்றும் அமைச்சர் அரியநாதர்.
- இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர்: பூலித்தேவர்.
- வீரபாண்டிய கட்டபொம்மன் அக்டோபர் 17, 1799 அன்று தூக்கிலிடப்பட்ட இடம்: கயத்தாறு கோட்டை.
- தமிழர்களால் 'வீரமங்கை' எனவும் 'தென்னிந்தியாவின் ஜான்சி ராணி' எனவும் அறியப்படுபவர்: வேலுநாச்சியார்.
- ஆங்கிலேயருக்கு எதிராக 'திருச்சிராப்பள்ளி பிரகடனம்' என்றழைக்கப்பட்ட சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர்கள்: மருது சகோதரர்கள்.
- தீரன் சின்னமலையின் இயற்பெயர்: தீர்த்தகிரி.
- வேலூர் கலகம் நடைபெற்ற ஆண்டு: 1806.
- 1857 பெரும்புரட்சிக்கு உடனடிக்காரணமாக அமைந்தது: எல்பீல்டுரக துப்பாக்கி (கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்).
- 1857 பெரும் புரட்சியை 'முதல் இந்திய சுதந்திர போர்' என விவரித்தவர்: வி.டி. சவார்க்கர்.
- தட்சசீல பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்: அலெக்சாண்டர் கன்னிங்காம்.
- டெல்லியில ஒரு மதரசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர்: இல்துத்மிஷ்.
- இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் மகாசாகனம் என்று அழைக்கப்படுவது: உட்ஸ் கல்வி அறிக்கை (1854).
- 1937 ஆம் ஆண்டு வார்தா கல்வித் திட்டத்தை உருவாக்கியவர்: காந்தியடிகள்.
- சுதந்திர இந்தியக் கல்வி வரலாற்றில் முதல் தேசியக் கல்விக் கொள்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு: 1968.
- அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) தொடங்கப்பட்ட ஆண்டு: 2000-2001.
- ஆங்கிலேயே ஆட்சியின் போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு: 1857.
- சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு: 1929.
- 1874ஆம் ஆண்டு முதன்முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்ட இடம்: குல்டி.
- இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர்: ரிப்பன் பிரபு.
- மதராஸ் அதிகாரப்பூர்வமாக 'சென்னை' என மறுபெயரிடப்பட்டது: ஜூலை 17, 1996.
- ராஜா ராம்மோகன் ராய் முயற்சியினால் சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு: 1829.
- வித்யாசாகரின் முயற்சியால் விதவை மறுமண சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு: 1856.
- தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக போராடிய இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்: டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார்.
- மதராஸ் தேவதாசி சட்டம் நிறைவேற்றப்பட்டது: அக்டோபர் 9, 1947.
- பாறையியல் (Petrology) என்ற சொல் பெறப்பட்ட மொழி: கிரேக்க மொழி.
- முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப் பாறைகள் என அழைக்கப்படுவது: தீப்பாறைகள்.
- நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்ற இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாக விளங்கும் பாறை: படிவுப் பாறைகள்.
- ஒவ்வொரு ஆண்டும் உலக மண் நாளாக கொண்டாடப்படும் நாள்: டிசம்பர் 5.
- பருத்திப் பயிர் நன்கு வளர ஏற்ற மண்: கரிசல் மண்.
- புவியின் வளிமண்டலத்தில் 78% காணப்படும் வாயு: நைட்ரஜன்.
- சம மழையளவுக் கோடு வரைபடத்தில் குறிக்கப்படுவது: ஐசோஹைட்ஸ்.
- காற்றின் அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி: காற்றழுத்தமானி.
- காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் அளவை: பியோபோர்டு அளவை.
- புவியில் உள்ள மொத்த நீரில் நன்னீரின் சதவீதம்: 2.8%.
- தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ள இடம்: புதுடெல்லி.
- சுனாமி (Tsunami) என்ற வார்த்தை வந்த மொழி: ஜப்பானிய சொல்.
- இரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்த ஆண்டு: ஏப்ரல் 26, 1986.
- ஆப்பிரிக்காவை 'இருண்ட கண்டம்' என அழைத்தவர்: ஹென்றி எம்.ஸ்டான்லி.
- ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல பாலைவனம்: சகாரா பாலைவனம்.
- நைல் நதியின் பிறப்பிடமாக உள்ள ஏரி: விக்டோரியா ஏரி.
- ஆஸ்திரேலியா கண்டத்தின் தலைநகரம்: கான்பெரா.
- ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நதி: முர்ரே நதி.
- அண்டார்டிகாவில் அமைக்கப்பட்ட முதல் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையம்: தட்சின் கங்கோத்ரி.
- சம அளவுக்கோட்டுப் படங்கள் ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது: Isoline.
- பணம் என்ற வார்த்தை பெறப்பட்ட ரோம் வார்த்தை: மொனேட்டா ஜுனோ.
- விலைகள் உயர்ந்து பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவது அழைக்கப்படுவது: பணவீக்கம்.
- இந்திய ரூபாயின் குறியீட்டை (₹) வடிவமைத்தவர்: உதயகுமார்.
- 'இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்: டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி.
- திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் செயல்பட துவங்கிய ஆண்டு: 2015 ஜனவரி 1.
- எண்ணெய் மற்றம் இயற்கை வாயு ஆணையம் (ONGC) வரும் தொழில் வகை: மகாரத்னா தொழில்கள்.
- மாநில நிர்வாகத்தின் தலைவர்: ஆளுநர்.
- மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு ஒருவருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது: 35 வயது.
- சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது: 25 வயது.
- உயர் நீதிமன்ற நீதிபதி பதவி வகிக்கும் அதிகபட்ச வயது: 62 வயது.
- இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு: 1955.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கும் குடியுரிமை வகை: ஒற்றைக் குடியுரிமை.
- பிரவாசி பாரதிய தினம் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) கொண்டாடப்படும் நாள்: ஜனவரி 9.
- இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'சமயச்சார்பற்ற' என்ற சொல் சேர்க்கப்பட்ட சட்டத் திருத்தம்: 42 வது சட்டத் திருத்தம் (1976).
- ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள்: டிசம்பர் 10.
- இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு: 1993.
- தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட நாள்: 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 17.
- பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்: போக்சோ (POCSO) சட்டம் 2012.
- அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர்: வி.கே.கிருஷ்ணமேனன்.
- நவீன இந்தியாவில் உச்சநீதிமன்றம் முதன் முதலாக நிறுவப்பட்ட இடம்: கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டை.


0 Comments