TNPSC TRB TET 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 9th Social Science Part-2
பொது அறிவு வினா-விடைத் தொகுப்பு (வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் இதர தகவல்கள்)
வரலாற்றுத் தகவல்கள்
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | புவியில் நுண்ணுயிரிகளின் வடிவில் உயிர்கள் தோன்றியதற்கான சான்றுகள் சுமார் எத்தனை பில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்படுகிறது? | 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் |
| 2 | 542 முதல் 251 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய உயிரினங்கள் எவை? | மீன்களும், ஊர்வனவும், பல்வேறு தாவரங்களும் |
| 3 | ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலம் என்பது எந்த நூற்றாண்டுகளைக் குறிக்கும்? | கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டுகள் |
| 4 | இத்தாலியில் கி.பி. 1471-ல் அமைக்கப்பட்ட, இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் பழமையான அருங்காட்சியகம் எது? | கேபிடோலைன் அருங்காட்சியகம் |
| 5 | இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம் எது? | ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் |
| 6 | சார்லஸ் டார்வின் 'மனிதனின் தோற்றம்' என்ற நூலை எந்த ஆண்டு வெளியிட்டார்? | 1871-ஆம் ஆண்டு |
| 7 | கடந்த காலத்தில் வாழ்ந்த விலங்குகள், தாவரங்களின் எச்சங்கள் குறித்த ஆய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? | புதைபடிவ ஆய்வியல் |
| 8 | மனித மூதாதையர்களான ஹோமினின்கள் இனம் சுமார் எத்தனை மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றினர்? | 7 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் |
| 9 | ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 'லூசி' என்று பெயரிடப்பட்ட உடல் எலும்புகள் எந்த மனித மூதாதையர் இனத்தைச் சேர்ந்தவை? | ஆஸ்ட்ரலோபித்திஸைன் இனம் |
| 10 | கென்யாவின் லோமிக்குவி என்ற இடத்தில் கிடைத்துள்ள கற்கருவிகள் எந்த வகையைச் சேர்ந்தவை? | தொடக்ககாலக் கற்கருவிகள் வகை |
| 11 | ஆப்பிரிக்காவின் ஓல்டுவாய் மலையிடுக்கில் கிடைத்துள்ள கற்கருவிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? | ஓல்டோவான் கருவிகள் |
| 12 | இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் கொண்டிருந்த இடைப் பழங்கற்கால மனிதர்கள் யார்? | நியாண்டர்தால் என்று அழைக்கப்பட்ட மனிதர்கள் |
| 13 | கல்லிலும் எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வச் சிற்பங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? | வீனஸ் |
| 14 | அதிராம்பாக்கத்தின் கீழ்ப்பழங்கற்காலப் பண்பாடு சுமார் எத்தனை மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணக்கிடப்பட்டுள்ளது? | 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது |
| 15 | பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் சுட்ட களிமண்ணாலான சவப்பெட்டி போன்றவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன? | சார்க்கோபேகஸ் |
| 16 | புதிய கற்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு பாகத்தில் உள்ள மெஹர்காரில் முதன்முதலில் பயிரிடப்பட்ட பயிர்கள் எவை? | கோதுமையும் பார்லியும் |
| 17 | மனிதனால் முதன் முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு எது? | நாய்கள் |
| 18 | பண்டைய எகிப்தில் பாரோவின் கீழ் மாகாணங்களை ஆளும் நிர்வாகி எவ்வாறு அழைக்கப்பட்டார்? | விசியர் |
| 19 | எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பாதுகாக்க பயன்படுத்திய நாட்ரன் உப்பு எதன் கலவையாகும்? | சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் பை கார்பனேட் |
| 20 | கிஸா பிரமிடுகள் எந்த காலக்கட்டத்தில் கட்டப்பட்டன? | கி.மு. 2575 - 2465க்கும் இடைப்பட்ட காலத்தில் |
| 21 | நரியின் தலையைக் கொண்டுள்ள இறப்பின் கடவுளாக எகிப்தியர்களால் கருதப்பட்ட கடவுள் எது? | அனுபிஸ் கடவுள் |
| 22 | எகிப்தியர்கள் எந்த தாவரத்தின் தண்டிலிருந்து தாள்களைத் (காகிதத்தை) தயாரித்தனர்? | பாப்பிரஸ் என்ற காகித நாணல் தாவர தண்டிலிருந்து |
| 23 | மூன்று மொழிகளில் எழுதப்பட்ட ரோசெட்டா கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்த பிரெஞ்சு அறிஞர் யார்? | பிராங்குவா சம்போலியன் |
| 24 | மெசபடோமியாவின் வடபகுதி மற்றும் தென்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டன? | வடபகுதி அஸிரியா என்றும், தென்பகுதி பாபிலோனியா என்றும் |
| 25 | எந்த அக்காட் நகரம் பிற்காலத்தில் பாபிலோன் என்று அழைக்கப்பட்டது? | அக்காடியர்களின் அக்காட் நகரம் |
| 26 | அரேபியப் பாலைவனங்களிலிருந்து குடிபெயர்ந்த அமோரைட்ஸ் மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? | பாபிலோனியர்கள் |
| 27 | கியூனிபார்ம் ஆவணங்கள் கொண்ட புகழ் பெற்ற நூலகத்தை உருவாக்கிய அஸிரிய அரசர் யார்? | அஸுர்பனிபால் |
| 28 | பண்டைய மெஸபடோமியாவில் மதில்சுவர்களால் சூழப்பட்ட சுமேரிய நகரங்களின் மத்தியில் காணப்பட்ட பிரமிட் வடிவ கோவில்கள் எவை? | சிகுராட்கள் |
| 29 | சுமேரியர்களின் தானியத்திற்கான பெண்தெய்வத்தின் பெயர் என்ன? | நின்லின் |
| 30 | மெசபடோமியாவில் அன்பு மற்றும் வளமைக்கான பெண்தெய்வமாக விளங்கியது எது? | இஸ்டார் என்ற பெண்தெய்வம் |
| 31 | நீர் கடிகாரத்தையும், சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியையும் உருவாக்கியவர்கள் யார்? | சுமேரியர்கள் |
| 32 | சீனாவில் தொல் பழங்காலத்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக அறியப்படும் மனிதர்கள் யார்? | பீகிங் மனிதன் மற்றும் யுவான்மாவோ மனிதன் |
| 33 | 'சுவர்கத்தின் புதல்வர்' என்ற பட்டத்தைக் கொண்டிருந்த சீனாவின் முதல் பேரரசர் யார்? | ஷி ஹுவாங் டி |
| 34 | கி.மு. 130-ல் பட்டுப் பாதையைத் திறக்க வழிவகுத்த சீனப் பேரரசர் ஹு டி-யின் தூதர் யார்? | ஜாங் குயென் |
| 35 | 'கேனன்ஸ் ஆஃப் மெடிசின்' என்ற சீனாவின் பழமையான மருத்துவ நூலை எழுதியவர் யார்? | மஞ்சள் பேரரசர் |
| 36 | "குடும்ப வாழ்க்கை சீர்திருத்தப்பட்டால் தேச வாழ்வு முறைப்படுத்தப்பட்டுவிடும்" என்று குறிப்பிட்ட சீனத் தத்துவஞானி யார்? | கன்பூசியஸ் |
| 37 | நாடு முழுவதும் பயணம் சென்று ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறிய மற்றொரு சீன தத்துவ ஞானி யார்? | மென்சியஸ் |
| 38 | சீனப் பெருஞ்சுவர் விரிவாக்கப் பணிகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து எந்த நூற்றாண்டு வரை நீடித்தன? | கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரை |
| 39 | சிந்துசமவெளி நாகரிகத்தின் முக்கியமான நகரங்களில் குஜராத்தில் அமைந்துள்ள நகரங்கள் எவை? | தோலாவிரா, லோதல் மற்றும் சுர்கொடா |
| 40 | செம்பில் வார்க்கப்பட்ட நடனமாடும் பெண் சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது? | மொஹஞ்சதாரோவில் |
| 41 | தொல்காப்பியத்தின் மூன்றாவது பகுதி எதனை வரையறுக்கிறது? | மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணத்தை |
| 42 | கூடலூரில் ஆநிரை கவர்ந்தபோது பூசலில் கொல்லப்பட்ட வீரனுக்கான நடுகல் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? | கூடல்ஊர் ஆகோள் பெடு தியன் அந்தவன் கல் |
| 43 | அரிக்கமேடு அகழாய்வை மேற்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் யார்? | சர் இராபர்ட் எரிக் மாட்டிமர் வீலர் |
| 44 | ரோமானியப் பேரரசின் சாலைகள் மற்றும் முசிறி துறைமுகத்தைக் குறிக்கும் விளக்கமான நிலப்படம் எது? | பியூட்டிங்கேரியன் அட்டவணை |
| 45 | இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க ஆவணமாகிய வியன்னா பாப்பிரஸ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கப்பலின் பெயர் என்ன? | ஹெர்மாபோலோன் |
| 46 | அசோகரின் கல்வெட்டுகளில் சேரர்கள் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளனர்? | கேரளபுத்திரர்கள் என்று |
| 47 | சோழர்களின் சதுர வடிவிலான செப்பு நாணயங்களின் முகப்பில் எதன் உருவங்கள் காணப்பட்டன? | முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்களும் |
| 48 | சங்க காலத்தில் குறுநில மன்னர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? | வேளிர் |
| 49 | ஆதிச்சநல்லூரிலும், பொருந்தல் என்ற இடத்திலும் மேற்கொண்ட அகழாய்வுகளில் தாழிகளுடன் எந்தப் பொருள் கிடைத்துள்ளது? | நெல்லும் |
| 50 | சங்க காலத்தில் பொன்னை உருக்கும் உலைகள் இருந்ததற்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன? | கேரளத்தின் பட்டணத்தில் |
| 51 | தங்கத்தின் தரத்தை அறிய உதவும் உரைகல்லான 'பெரும் பத்தன் கல்' எந்த நாட்டில் கிடைத்துள்ளது? | தாய்லாந்து நாட்டில் உள்ள குவான் லுக் பாட் என்ற இடத்தில் |
| 52 | "உத்தரவு தவறென்றால் ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும்" என்று கூறியவர் யார்? | கன்பூசியஸ் |
| 53 | ஜொராஸ்ட்ரிய மதத்தில் உலகின் ஒரே கடவுளாக பிரகடனம் செய்யப்பட்ட ஒளிக் கடவுள் யார்? | அஹுர மஸ்தா |
| 54 | மனிச்சீயி மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? | மணி என்பவரால் |
| 55 | வர்த்தமான மகாவீரர் பிறந்த ஊர் எது? | வைஷாலிக்கு அருகே உள்ள குந்தக்கிராமம் |
| 56 | மகாவீரருக்கு முந்தைய இருபத்துமூன்றாவது தீர்த்தங்கரர் யார்? | பார்சுவநாதர் |
| 57 | மகாவீரரின் போதனைகளை பின்பற்றிய சமணப் பிரிவினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? | திகம்பரர்கள் |
| 58 | புத்தர் தனது முப்பதாவது வயதில் மெய்யறிவு அடைந்த இடம் தற்போது எங்குள்ளது? | பீஹாரில் உள்ள புத்த கயா |
| 59 | கனிஷ்கரின் ஆட்சிக் காலத்தில் பௌத்தத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த பௌத்தத் துறவி யார்? | நாகார்ஜுனா |
| 60 | பௌத்தம் மற்றும் சமணம் தோன்றிய காலத்தில் 'ஆசிவகம்' என்ற பிரிவைத் தோற்றுவித்தவர் யார்? | மக்கலி கோசலர் |
| 61 | ஆசிவகத் தத்துவத்தைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ள தமிழ் நூல்கள் எவை? | மணிமேகலை, நீலகேசி மற்றும் சிவஞானசித்தியார் |
| 62 | மகதத்தின் உருவாக்கத்தில் முதல் முக்கியமான அரசராக விளங்கியவர் யார்? | பிம்பிசாரர் |
| 63 | மௌரியப் பேரரசு காலத்தில் வருவாய்க்கும் செலவினங்களுக்கும் பொறுப்பான அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? | சமஹர்த்தா |
| 64 | சந்திரகுப்த மௌரியரிடம் இந்தியாவிற்கு படையெடுத்து வந்தபோது தோற்றுப்போன அலெக்ஸாண்டரின் தளபதி யார்? | செல்யூகஸ் நிகேடர் |
| 65 | குப்தப் பேரரசின் காலத்தை 'செவ்வியல் காலம்' என்று விவரிக்கும் வரலாற்றறிஞர் யார்? | பர்ட்டன் ஸ்டெய்ன் |
| 66 | தேவகிரியைக் கைப்பற்றி அதற்கு "தௌலதாபாத்" என மறுபெயர் சூட்டியவர் யார்? | அலாவுதீன் கில்ஜி |
| 67 | முகமது துக்ளக் ஆட்சியின் போது தௌலதாபாத்தில் கலகம் வெடித்ததால் பாமினி சுல்தானியத்தை உருவாக்கியவர் யார்? | அலாவுதீன் பாமான்ஷா |
| 68 | சோழப் பேரரசு முற்றிலுமாக எந்த ஆண்டு வீழ்ந்தது? | கி.பி. 1279 இல் |
| 69 | தக்காண சுல்தான்களின் கூட்டுப்படையினர் விஜயநகரப் பேரரசை எந்தப் போரில் தோற்கடித்தனர்? | கி.பி. 1565 இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் |
| 70 | போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் தங்கள் முதல் கோட்டையை கி.பி. 1503-ல் எங்கு கட்டினர்? | கொச்சியில் |
| 71 | 14 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தில் விதோபாவின் பக்தர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் எது? | வர்க்கரி சம்பிரதயா என்னும் இயக்கம் |
| 72 | தூத்துக்குடிப் பகுதியில் வாழும் பரதவ சமூக மக்கள் கிறித்துவ மதத்திற்கு மாறுவதற்குக் கருவியாக இருந்தவர் யார்? | புனித பிரான்சிஸ் சேவியர் |
| 73 | மொகலாய அரசில் செயல்பட்ட மிகப்பெரிய தொழிற் கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? | 'கர்கானா' என்ற பெயரில் |
| 74 | இந்தியாவிலிருந்து பதினேழாம் நூற்றாண்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய பொருள் எது? | துணிகள் |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 75 | உருகிய பாறைக் குழம்பு குளிர்ந்து பாறையாவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? | தீப்பாறைகள் |
| 76 | புவித்தட்டுகளின் அசைவினால் பாறைகளில் ஏற்படும் விரிசல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? | பிளவுகள் |
| 77 | புவிக்குள் புவி அதிர்வு உருவாகும் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது? | புவி அதிர்ச்சி கீழ்மையம் (Focus) |
| 78 | புவி அதிர்ச்சி அளவையைக் கண்டுபிடித்தவர் யார்? | C.F. ரிக்டர் |
| 79 | 2004-ல் ஆழிப்பேரலை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த இரு தட்டுகள் எவை? | இந்தோ - ஆஸ்திரேலியத் தட்டு யுரேசியத்தட்டின் கீழே அமிழ்ந்தது |
| 80 | எரிமலைச் செயல்பாடுகள் ஏதுமின்றி காணப்படும் தணிந்த எரிமலைக்கு ஒரு உதாரணம் தருக? | கிளிமஞ்சரோ எரிமலை - தான்சானியா |
| 81 | வளிமண்டத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு நீரில் கரைந்து எம்மாதிரியான அமிலமாக மாறுகிறது? | கார்பானிக் அமிலமாக |
| 82 | ஆற்று வளைவுகள் காலப்போக்கில் முதன்மை ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஏரியாவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? | குருட்டு ஆறு அல்லது 'குதிரைக் குளம்பு ஏரி' |
| 83 | குகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் விழுதுகள் போன்று காட்சியளிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? | கல் விழுதுகள் |
| 84 | வறண்ட பிரதேசங்களில் கடின மற்றும் மென்பாறை மாறி மாறி அமைந்து காற்றின் அரிப்பால் உருவாகும் முகடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? | யார்டங்குகள் |
| 85 | வளிமண்டல அடுக்கில் விண்கற்கள் நுழையும்போது எரிக்கப்படும் அடுக்கு எது? | இடையடுக்கு (Mesosphere) |
| 86 | நள்ளிரவு வானத்தில் துருவப்பகுதிகளில் தோன்றும் பலவண்ண ஒளிச்சிதறல் காட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது? | அரோரா |
| 87 | ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் 1°C வெப்பநிலை குறையும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? | வெப்பத் தலைகீழ் மாற்றம் |
| 88 | 1999 ஆம் வருடம் அக்டோபர் 29ம் நாள் ஒடிஷா மாநிலத்தைத் தாக்கிய சூறாவளியின் பெயர் என்ன? | சூப்பர் சைக்ளோன் |
| 89 | உலகின் மிக ஆழமான கடலடி உறிஞ்சித்துளை எவ்வாறு அழைக்கப்படுகிறது? | டிராகன் துளை |
| 90 | புவியைப் பற்றி புரிந்துகொள்ள அமைக்கப்பட்ட உயிர்க்கோளம்-2 என்ற செயற்கை உயிர்க்கோளம் எங்கு அமைந்துள்ளது? | அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் |
| 91 | மன்னார் வளைகுடா எந்த ஆண்டு உயிரினப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது? | 1989-ல் |
| 92 | 'வளம் குன்றா வளர்ச்சி' என்ற சொலுக்கான விளக்கத்தை 1987-ஆம் ஆண்டு அளித்த குழு எது? | பிரண்டலேண்டு குழு |
| 93 | உலகிலேயே மிகப்பழைய நிலவரைபடமாகக் கருதப்படும் பாபிலோனிய வரைபடம் எது? | இமாகோ முண்டி |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 94 | ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டைக் குறிக்கும் மிகச் சிறந்த குறியீடாகக் கருதப்படுவது எது? | தனி நபர் வருமான உயர்வு |
| 95 | இந்தியாவில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? | புதுடெல்லியில் சாஸ்திரி பவனில் |
| 96 | இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் எந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது? | டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் "பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்" என்ற கட்டுரையின் அடிப்படையில் |
| 97 | இந்தியாவில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் எந்த ஆண்டு வெளியிடப்பட்டன? | 1917-ல் |
| 98 | மாணவர்கள் எவ்வித பிணையமுமின்றி கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க உருவாக்கப்பட்ட இணையதளத்தின் பெயர் என்ன? | வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம் |
| 99 | இந்திய தேர்தல் நடத்தை விதிகள் (1961) சட்டத்தின் எந்த விதி நோட்டா (NOTA) முறை பற்றி விவரிக்கிறது? | விதி எண் 49-O |
| 100 | ஈரோடு நகராட்சியில் 1919-ல் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் முறையினை முதல்முதலில் செயல்படுத்தியவர் யார்? | பெரியார் |


0 Comments