Monday, May 31, 2021

TNPSC CURRENT AFFAIRS MAY 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021

CURRENT AFFAIRS MAY 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021


❇️ மே. 2: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின: தமிழ்நாடு - தி.மு.க., கேரளம் - இடது ஜனநாயக முன்னணி , மேற்கு வங்கம் - திரிணமூல் காங்கிரஸ், அஸ்ஸாம் - பா.ஜ.க. கூட்டணி, புதுச்சேரி - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆகியவை ஆட்சியைப் பிடித்தன.


❇️ மே 2: டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உறுதியானதை கனடா நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.


❇️ மே 4: ஊடகங்களில் பணிபுரிவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப் படுவார்கள் என்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவிருந்த மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.


❇️ மே 4: மகாத்மா காந்தியின் தனிச்செயலா ளராக இருந்த வி.கல்யாணம் (98), சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி (87) ஆகியோர் காலமானார்கள்.


❇️ மே 5: இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத் விலங்குக் காட்சியகத்தில் எட்டுச்சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.


❇️ மே 5: மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாம் முறையாகப் பதவியேற்றார்.


❇️ மே 5: கரோனா பரவலையடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.


❇️ மே 6: உலக அளவில் தற்போது ஏற்படும் கரோனா பாதிப்பில் 46 சதவீதம் இந்தியாவைச் சார்ந்தது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.


❇️ மே 6: ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதல் பத்துஇடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை ரிஷப் பந்த் பெற்றார்.


❇️ மே 7: தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், அவரோடு 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நான்காம் முறையாகப் பதவியேற்றார்.கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொராப்ஜி (91) - மே 1, முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகனும் மத்திய முன்னாள் அமைச்சருமான அஜித் சிங் (82) - மே 6, நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் பாண்டு (74) - மே 6 ஆகியோர் உயிரிழந்தனர்.


❇️ மே 8: மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்பட்ட 16 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்துசெய்து உத்தரவிட்டது.


❇️ மே 10: தமிழகச் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


❇️ மே 11: புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.


❇️ மே 12: தமிழகச் சட்டப்பேரவையின் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.


❇️ மே 12: தமிழகச் சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும், தமிழக அரசு கொறடாவாக கோ.வி.செழியனும் நியமிக்கப்பட்டனர்.


❇️ மே 13: இந்திய ராணுவத்தில் முதன்முறையாகக் காலாட்படை பிரிவில் 83 பெண்கள் சேர்க்கப்பட்டனர். 1990 முதல் பெண்கள் அதிகாரி நிலையில் மட்டுமே பணியமர்த்தப் பட்டுவந்தனர்.


❇️ மே 14: ஜூன் முதல் வாரத்தில் நடைபெறவிருந்த சிங்கப்பூர் பாட்மிண்டன் ஓபன் ரத்து ஆனதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இந்தியாவின் சாய்னா, காந்த் ஆகியோர் இழந்தனர்.


❇️ மே 14: ஜூன் முதல் வாரத்தில் நடைபெறவிருந்த சிங்கப்பூர் பாட்மிண்டன் ஓபன் ரத்து ஆனதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இந்தியாவின் சாய்னா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இழந்தனர்.


❇️ மே 12: கேரளத்தில் நீண்ட காலம் அமைச்சராகப் பணியாற்றிய பெண் என்கிற பெருமைக்குரிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கே.ஆர். கெளரி அம்மாள் (101) காலமானார்.


❇️ மே 13: கரோனாவிலிருந்து மீண்டவர்களைப் பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த அம்ஃபோடெரிசின் - பி என்கிற மருந்தைப் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.


❇️ மே 14: நேபாள பிரதமராக சர்மா ஒலி மீண்டும் பதவியேற்றார். அவருடைய ஆட்சி கவிழ்ந்திருந்த நிலையில், அந்நாட்டு குடியரசுத் தலைவர் வித்யாதேவி பண்டாரி மீண்டும் அவரைப் பிரதமராக நியமித்தார்.


❇️ மே 16: கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் தவணையைப் பெறுவ தற்கான இடைவெளிக் காலத்தை 6-8 வாரங்களிலிருந்து 12-16 வாரங்களாக மத்திய அரசு அதிகரித்தது.


❇️ மே 17: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகம் நடத்திய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.


❇️ மே 17: டி.ஆர்.டி.ஓ., டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த 2டிஜி என்கிற கரோனா பவுடர் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.


❇️ மே 17: கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்றழைக்கப்பட்ட கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் (97) காலமானார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர், கல்வியாளர், தஞ்சை முன்னாள் எம்.பி. துளசி அய்யா (94) காலமானார்.


❇️ மே 17: அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் குஜராத்தின் போர்பந்தர் அருகே கரையைக் கடந்தது.


❇️ மே 20: இரண்டாம் முறை கேரள முதல்வராக பினராயி விஜயன் தலைமையில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது.


❇️ மே 20: கரோனா தொற்று பாதிப்பை உறுதிசெய்ய ஆண்டிஜென் ரேபிட் டெஸ்ட் என்ற பரிசோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது.


❇️ மே 22: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கரோனா முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது.


❇️ மே 13: கரோனாவிலிருந்து மீண்டவர்களைப் பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த அம்ஃபோடெரிசின் - பி என்கிற மருந்தைப் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.


❇️ மே 14: நேபாள பிரதமராக சர்மா ஒலி மீண்டும் பதவியேற்றார். அவருடைய ஆட்சி கவிழ்ந்திருந்த நிலையில், அந்நாட்டு குடியரசுத் தலைவர் வித்யாதேவி பண்டாரி மீண்டும் அவரைப் பிரதமராக நியமித்தார்.


❇️ மே 16: கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் தவணையைப் பெறுவ தற்கான இடைவெளிக் காலத்தை 6-8 வாரங்களிலிருந்து 12-16 வாரங்களாக மத்திய அரசு அதிகரித்தது.


❇️ மே 17: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகம் நடத்திய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.


❇️ மே 17: டி.ஆர்.டி.ஓ., டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த 2டிஜி என்கிற கரோனா பவுடர் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.


❇️ மே 17: கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்றழைக்கப்பட்ட கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் (97) காலமானார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர், கல்வியாளர், தஞ்சை முன்னாள் எம்.பி. துளசி அய்யா (94) காலமானார்.


❇️ மே 17: அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் குஜராத்தின் போர்பந்தர் அருகே கரையைக் கடந்தது.


❇️ மே 20: இரண்டாம் முறை கேரள முதல்வராக பினராயி விஜயன் தலைமையில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது.


❇️ மே 20: கரோனா தொற்று பாதிப்பை உறுதிசெய்ய ஆண்டிஜென் ரேபிட் டெஸ்ட் என்ற பரிசோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது.


❇️ மே 22: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கரோனா முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது.


❇️ மே 22: ‘ஏ-76’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப் பெரிய பனிப்பாறை அண்டார்டிகா பனிப்பிரதேசத்திலிருந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


❇️ மே 23: கரோனா காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் என்று சர்வதேச கால்பந்து சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


❇️ மே 24: தமிழகத்தில் காஞ்சிபுரம் கோயில்கள் உள்பட இந்தியாவில் 6 இடங்கள் யுனெஸ்கோவின் உத்தேச உலகப் பாரம்பரிய தளங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.


❇️ மே 25: நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்து 6 மாதங்களில் தேர்தல் நடத்த அந்நாட்டு அதிபர் வித்யாதேவி பண்டாரி உத்தரவிட்டார்.


❇️ மே 26: தமிழகச் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ., கு.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.


❇️ மே 27: வங்கக் கடலில் உருவான அதிதீவிர ‘யாஸ்’ புயல் ஒடிசாவின் பாலசோர் அருகே கரையைக் கடந்தது.


❇️ மே 28: தமிழகத்தில் தளர்வு இல்லாத கரோனா முழு ஊரடங்கை ஜூன் 7 வரை நீட்டித்துத் தமிழக அரசு உத்தரவிட்டது.


❇️ மே 28: ஐ.நா. பொதுச் செயலாளராக அன்டோனியா குட்டெரஸை மீண்டும் தேர்வுசெய்ய இந்தியா ஆதரவளித்துள்ளது. இவருடைய பதவிக்காலம் டிசம்பர் 31-ஆம் தேதி நிறைவடைகிறது.


❇️ மே 29: கரோனா இரண்டாம் அலையில் 577 குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளதாக மத்திய மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


❇️ மே 29: கரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும், அந்தக் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.


❇️ மே 31: துபாயில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய மகளிர் அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது.


❇️ மே 2: கன்னியாகுமரி லோக்சபா தேர்தலில் விஜய் வசந்த் வெற்றி.


❇️ மே 7: பத்தாண்டுக்கு பின் தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்தது. தமிழகத்தின் 13வது முதல்வராக ஸ்டாலின் 68, பதவியேற்பு.


❇️ மே 9: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் நியமனம்.


❇️ மே 10: தமிழகத்தில் முழு ஊரடங்கு (மே 10 - 24) அமல்.


❇️ மே 10: எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி (அ.தி.மு.க.,) தேர்வு.


❇️ மே 12: தமிழக சட்டசபை சபாநாயகராக தி.மு.க.,வைச் சேர்ந்த அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்வு.


❇️ மே 13: கடலுாரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 4 பேர் பலி.


❇️ மே 20: தமிழகத்தில் 18 -44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவக்கம்.


❇️ மே 27: 2022-23 கல்வி ஆண்டு முதல் தமிழில் பாடம் நடத்த இன்ஜினியரிங் கல்லுாரிக்கு அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) அனுமதி.


❇️ மே 31: சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர், கோயில் பணியாளர்களுக்கு ரூ. 4,000 உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.


❇️ மே 1: குஜராத்தின் பரூச் மாவட்ட மருத்துவமனை தீ விபத்தில் 18 கொரோனா நோயாளி பலி.


❇️ மே 2: அசாமில் நடந்த தேர்தலில் பா.ஜ. கூட்டணி, ஆட்சியை தக்க வைத்தது.


❇️ மே 2: மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமுல் காங்.. ஆட்சி.


❇️ மே 3: கர்நாடகாவின் சாம்ராஜா நகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 கொரோனா நோயாளி பலி.


❇️ மே 5: மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்.,) மீண்டும் பதவியேற்பு.


❇️ மே 5: மஹாராஷ்டிராவில் 'மராத்தா' பிரிவினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.


❇️ மே 7: புதுச்சேரி முதல்வராக நான்காவது முறையாக என்.ஆர்.காங்கிரசின் ரங்கசாமி பதவியேற்பு.


❇️ மே 8: ஆந்திராவின் கடப்பாவில் சுண்ணாம்பு சுரங்க வெடிவிபத்தில் 10 பேர் பலி.


❇️ மே 10: அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா (பா.ஜ.,) பதவியேற்பு.


❇️ மே 10: 17 கோடி 'டோஸ்' தடுப்பூசியை இந்தியா ௧௧௪ நாளில் செலுத்தி சாதனை. அமெரிக்கா 115, சீனா 119 நாளில் எட்டின.


❇️ மே 13: கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது 'டோஸ்' செலுத்தும் இடைவெளி 12-16 வாரமாக நீடிப்பு.


❇️ மே 17: கொரோனா சிகிச்சைக்கு மத்திய அரசின் 'டி.ஆர்.டி.ஓ.,' தயாரித்த '2டிஜி' மருந்து விநியோகம் துவக்கம்.


❇️ மே 17: 'நாரதா' லஞ்ச ஊழல் வழக்கில் மேற்கு வங்கத்தின் 2 அமைச்சர்களை சிபிஐ கைது செய்தது.


❇️ மே 20: 'டாக்டே' புயலில், மும்பை கடலில் எண்ணெய் தொழிலாளர்கள் தங்கியிருந்த மிதவை கப்பல் கவிழ்ந்ததில் 37 பேர் பலி.


❇️ மே 20: கேரள முதல்வராக மீண்டும் பினராயி விஜயன் (மார்க்சிஸ்ட்) பதவியேற்பு.


❇️ மே 21: மஹாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 13 நக்சல்கள் பலி.


❇️ மே 25: 'ரோச்' இந்தியா தனியார் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அறிமுகம். ஒரு டோஸ் விலை ரூ. 60,000.


❇️ மே 29: கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு ரூ. 10 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.


❇️ மே 31: புதிய பார்லிமென்ட் கட்ட தடை விதிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு.


❇️ மே 3: வங்கதேசத்தில் பத்மாவதி நதியில் படகு கவிழ்ந்ததில் 26 பேர் பலி.


❇️ மே 4: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் - மெலிண்டா தம்பதி விவாகரத்து.


❇️ மே 5: மாலி நாட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தை பிறந்தன.


❇️ மே 11: சீன மக்கள்தொகை 141 கோடியாக உயர்வு. (உலகில் முதலிடம்)


❇️ மே 11: அமெரிக்காவில் 12 -15 வயதுக்குட்பட்டவர் பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி.


❇️ மே 12: உலகின் முதல் தானியங்கி அமெரிக்க கப்பல் 'மேபிளவர் 400' அட்லாண்டிக் கடலை கடந்தது. நீளம் 50 அடி. எடை 8164 கிலோ.


❇️ மே 14: நேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு.


❇️ மே 16: இரு நாடுகளின் 11 நாள் சண்டையில் இஸ்ரேலில் 12, பாலஸ்தீனத்தில் 240 பேர் பலி.


❇️ மே 17: மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸா 27, 'மிஸ் யுனிவர்ஸ் - 2020' பட்டம் வென்றார்.


❇️ மே 21: இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு மாணவர் சங்க தேர்தலில் இந்திய வம்சாவளி மாணவி ராஷ்மி சமந்த் வெற்றி.


❇️ மே 25: அண்டார்டிகாவில் உலகின் பெரிய பனிப்பாறை 'ஏ-76' (4320 சதுர கி.மீ.) 'வெடல்' கடல்பகுதியில் உடைந்து விழுந்தது. நீளம் 175 கி.மீ. அகலம் 25 கி.மீ.


❇️ மே 26: பஞ்சாப் வங்கி கடன் மோசடி வழக்கில் இந்திய வைர வியாபாரி மெஹுல் சோக்சியை சர்வதேச போலீசார், டொமினிக்காவில் கைது செய்தனர்.


❇️ மே 26: ஹாங்காங்கில் இளஞ்சிவப்பு 'சகுரா' வைரம் (15.81 காரட்) ரூ. 213 கோடிக்கு ஏலம் போனது.


❇️ மே 27: எத்தியோப்பியாவில் 'டைக்ரே' கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 22 அரசு அதிகாரிகள் பலி.


❇️ மே 28: நான்காவது முறையாக சிரியா அதிபராக பஷர் அல் ஆசாத் தேர்வு.


❇️ மே 31: சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்ததால் 3 குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி. (இதுவரை 2க்கு அனுமதி)


❇️ மே 25: சி.பி.ஐ., இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்.


❇️ மே 28: நைஜீரியாவின் நைஜர் நதியில் படகு மூழ்கியதில் 60 பேர் பலி.


❇️ மே 28: சிரிய அதிபராக தொடர்ந்து நான்காவது முறையாக அல் ஆசாத் தேர்வு.


❇️ மே 29: மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமார் நியமனம்.


No comments:

Popular Posts