Sunday, September 25, 2022

TNPSC G.K - 99 | இந்திய ஆட்சியாளர்கள்தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் - விருப்பாட்சி கோபால் நாயக்கர்

விருப்பாட்சி கோபால் நாயக்கர் (கொரில்லா தாக்குதல் நடத்தி ஆங்கிலேயர்களை கதிகலங்க வைத்தவர்.சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய விருப்பாச்சி கோபால் நாயக்கர்)

விருப்பாட்சி மண்ணின் மைந்தராகிய கோபால் நாயக்கர், 19-வது பாளையக்காரராக பதவியேற்று, தன்னைப்போல் தன் சீமை மக்களையும் தன்மானம் மிகுந்த வீரர்களாக மாற்றினார். தமிழகத்தில் உள்ள சிறு குறு அரசுகளையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்டு கொன்ற பிறகு, கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறைக்கு உள்ளே பூட்டி வைக்கப்படுகிறார். கோபால் நாயக்கர் தலைமையில் வீரசங்கத்தை சேர்ந்தவர்கள் சிறைக்கு உள்ளே புகுந்து, அதிரடி போர் நடத்தி ஊமைத் துரையை மீட்டனர். விருப்பாட்சிக்கு வந்த ஊமைத்துரைக்கு விருதும், 6 ஆயிரம் படை வீரர்களையும் தந்து, மீண்டும் பாஞ்சாலங்குறிச்சிக்கே மன்னராக்கினார் கோபால் நாயக்கர்.

கருமலை அடிவாரத்திலும், அங்கு உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்திலும், கோபால் நாயக்கரின் புரட்சி படையினர் மறைந்து வாழ்ந்தனர். ஆங்கிலேய படையினரை எதிர்த்து நடைபெற்ற கொரில்லா தாக்குதலுக்கு, கோபால் நாயக்கர் தான் காரணம் என்பதை உளவாளிகள் மூலம் அறிந்த திண்டுக்கல் கலெக்டர் பி.ஹர்டீஸ், அவர் மீது குற்றம் சுமத்தி, சம்மன் அனுப்பினார். ஆனால் கோபால் நாயக்கர், அதனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனவே 1799-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 2-வது சம்மன் அனுப்பி, அவரை சரணடையுமாறு மிரட்டியது ஆங்கிலேய அரசு.

விருப்பாட்சி போருக்கு பின்னரும், நாயக்கரை கண்டுபிடிக்க முடியாததால், அவரது தலைக்கு இருபதாயிரம் ரூபாய் என ஆங்கிலேயர்கள் விலை வைத்தனர். கோபால் நாயக்கரை காட்டி கொடுத்தால் இருபதாயிரம் ரூபாய் தரப்படும் என பறைசாற்றினர். பணத்துக்கு ஆசைப்பட்ட சில துரோகிகளால், கோபால் நாயக்கர் காட்டி கொடுக்கப்பட்டார்.

1801, மே 5 ஆம் தேதி அவரை கைது செய்து, திண்டுக்கல் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர் ஆங்கிலேயர்கள். 1801, செப்டம்பர் 5 ஆம் தேதி திண்டுக்கல் கோபால சமுத்திரம் என்று அழைக்கப்படக்கூடிய குளத்தின் அருகே புளியமரத்தில் கோபால் நாயக்கர் தூக்கிலிடப்பட்டார். அதனாலேயே இந்த குளம், கோபால் சமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சாகும்போது கூட, கொஞ்சமும் கலங்காமல் தன் மரணத்தை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட மாவீரனாக திகழ்ந்தார் கோபால் நாயக்கர்.

No comments:

Popular Posts