Monday, September 26, 2022

கற்காலம்

கற்காலப் பிரிவுகள்.


பழைய கற்காலம்.


பழைய கற்காலம் கற்கருவிகளின் உருவாக்கத்தோடு தொடர்புள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலம். இது மனிதர் இப்புவியில் வாழ்ந்த காலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்குகிறது (ஏறத்தாழ மனித வரலாற்றின் 99%). இது 2.5 அல்லது 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இக்காலம் தொடங்குகிறது. இது ஹோமோ ஹபிலிசுகள் போன்ற ஹொமினிட்டுகள் கற்கருவிகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து கிமு 10000 ஆண்டளவில் வேளாண்மை அறிமுகப்படுத்தப்பட்டது வரை நீடித்தது. பழையகற்காலம் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளை உள்ளடக்கியது. இக் காலத்தில் மனிதனுடைய கூர்ப்பின் மீது தாக்கங்களை ஏற்படுத்திய பல பெரிய காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. இடைக்கற்காலத்தின் தொடக்கத்துடன் பழையகற்காலம் முடிவுற்றது. குலக்குழுக்கள் எனப்படும் சிறு குழுக்களாக இயங்கிய பழையகற்கால மனிதர் தமது உணவை தாவரங்களைச் சேகரிப்பதன் மூலமும் விலங்குகளை வேட்டையாடுவதன் மூலமும் பெற்றனர். பழையகற்காலத்தில் மரம் எலும்பு முதலியவற்றாலான கருவிகளும் பயன்பட்டுவந்த போதிலும் அக்காலத்தின் சிறப்பியல்பாக உள்ளது கற்கருவிகளே. இவற்றுடன் தோல் தாவர இழைகள் போன்றனவும் பயன்பட்டன ஆயினும் அவை விரைவில் அழிந்துவிடக்கூடியன ஆதலால் அவை போதிய அளவு பாதுகாக்கப்பட்ட நிலையில் இன்று கிடைக்கவில்லை. மனித இனம் ஹோமோ ஹபிலிஸ் போன்ற ஹோமோ பேரினத்தைச் சேர்ந்த பழைய இனங்களில் இருந்து படிப்படியாகக் கூர்ப்பு அடைந்து நடத்தைகளிலும் உடலமைப்பிலும் தற்கால மனிதனாக மாறியது பழையகற்காலத்திலேயே. பழையகற்காலத்தில் இறுதிப் பகுதியில் சிறப்பாக இடைப் பழையகற்காலத்திலும் மேல் பழையகற்காலத்திலும் மனிதர்கள் தொடக்ககால வகை ஓவியங்களை வரையத் தொடங்கியதுடன் இறந்தோரை அடக்கம் செய்தல் சடங்குகள் செய்தல் போன்ற சமயம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினர்.


கீழ் பழையகற்காலம்.


ஆப்பிரிக்காவில்இ பிளியோசீன் காலப்பகுதியின் முடிவுக்கு அணித்தாக நவீன மனிதர்களின் தொடக்க மூதாதைகளான ஹோமோ ஹபிலிசுகள் உருவாக்கிய கற்கருவிகள் ஒப்பீட்டளவில் மிகவும் எளிமையானவை. இவர்கள் பிற விலங்குகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியையும் காட்டுத் தாவர உணவுகளையும் உண்டு வாழ்ந்தனர். விலங்குகளை வேட்டையாடவில்லை. சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மேலும் கூர்ப்படைந்த ஹோமோ இரெக்டசு என்னும் மனித இனம் தோன்றியது. ஹோமோ இரக்டசுக்கள் தீயைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுடன்இ சற்றுச் சிக்கலான கற்கருவிகளையும் பயன்படுத்தினர். அத்துடன் இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியாவை நோக்கிப் பரவினர். சீனாவிலுள்ள சூக்கோடியன் (Zhoukoudian) போன்ற களங்கள் இதனை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு மில்லியன் ஆண்டு அளவிலேயே ஐரோப்பாவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான முதற் சான்றுகள் கிடைத்துள்ளன. அத்துடன் மேம்பட்ட கைக்கோடரி பயன்பட்டதும் அறியப்பட்டுள்ளது.


நடு பழையகற்காலம்.


நடு பழையகற்காலம் (ஆங்கிலம்: Middle Paleolithic) என்பது பழையகற்காலத்தின் இரண்டாம் உட்பிரிவு ஆகும். 300000 இருந்து 30000 வரையிலான ஆண்டுகளுக்கு முன் இருந்த காலமே நடு பழையகற்காலம் ஆகும். உலகின் வெவ்வேறு பகுதிகளிடையே இக்காலம் கவனிக்கத்தக்க மாற்றங்களுக்கு உட்படும். நடு பழையகற்காலத்தை தொடர்ந்துஇ மேல் பழையகற்காலம் (மூன்றாம் உட்பிரிவு) ஆகும்.


மேல் பழையகற்காலம்.


35000 தொடக்கம் 10000 ஆண்டுக் காலத்துக்கு முன்னர் மேல் பழைய கற்காலம் என அழைக்கப்படும் காலத்தில் நவீன மனிதர்கள் புவியில் மேலும் பல இடங்களுக்குப் பரவினர். ஐரோப்பாவில் காணப்பட்ட அனித இனங்களில் குரோ-மக்னன்களதும் நீன்டெதால்களினதும் இயல்புகள் கலந்து காணப்பட்டன. சிக்கலான கற்கருவித் தொழில்நுட்பங்கள் விரைவாக அடுத்தடுத்துத் தோன்றின. கடல் மட்டம் குறைவாக இருந்த அக்காலத்தில் வெளிப்பட்டு இருந்த பெரிங் நில இணைப்பு மூலம் மனிதர்கள் அமெரிக்காக்களில் குடியேறினர். இம்மக்கள் பாலியோ இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர். 13000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குளோவிஸ் பண்பாட்டுக்குரிய களங்களே இவர்களின் மிகப் பழைய காலத்துக்கு உரியனவாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. பொதுவாக சமுதாயங்கள் வேட்டையாடுபவர்களாகவும்இ உணவு சேகரிப்பவர்கள் ஆகவும் இருந்தாலும் வெவ்வேறு சூழல்களுக்குப் பொருத்தமான வகையில் கற்கருவி வகைகள் உருவானதைக் காணக்கூடியதாக உள்ளது.


இடைக் கற்காலம்.


அயர்லாந்தில் உள்ள கல்திட்டை இறுதியான உறைபனிக் கால முடிவான சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 6000 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதி கடல்மட்ட உயர்வு காலநிலை மாற்றங்கள் உணவுக்கான புதிய மூலங்களைத் தேடவேண்டிய நிலை போன்றவற்றை உடையதாக இருந்தது. இந்த நிலைமைகளைச் சமாளிக்கும் நோக்கில் நுண்கற்கருவிகளின் வளர்ச்சி ஏற்பட்டது. இவை முன்னைய பழங்கற்காலக் கற்கருவிகளிலிருந்தே வளர்ச்சியடைந்தன. ஐரோப்பாவுக்கு இக் கருவிகளும் அதோடுகூடிய வாழ்க்கை முறைகளும் அண்மைக் கிழக்குப் பகுதிகளிலிருந்தே கொண்டுவரப்பட்டன. இங்கே நுண்கற்கருவிகள் கூடிய செயற்திறன் உள்ள வகையில் வேட்டையாட வழிவகுத்ததுடன் சிக்கலான குடியிருப்புக்கள் தோன்றுவதையும் ஊக்கப்படுத்தின.


புதிய கற்காலம் (Neolithic).


மக்கள் நிரந்தரமாக வாழத் தொடங்கினார். பளபளப்பான தேவைகேற்ற வடிவங்களில் கற்களை உருவாக்கினர். அறிவியல் வளர்ச்சியின் முதல்படியான சக்கரம் கண்டுபிடிக்கப்படட்து. வேளாண்மை செய்தனர். முதன் முதலில் வளர்த்த பிராணி ஆடு ஆகும். பசு, எருமை, ஆடு நாய் விலங்குகளை பயனப்டுத்தினர். நெருப்பை உண்டாக்கினர். மற்பாண்டங்கள் செய்தனர். பருத்தி, கம்பளி நூல் நூற்றனர். பழங்கள், காய், மீன், பால் கறிகள் உண்டனர். கடற்பயணம் மேற்கொண்டனர். வேட்டையாடுதல், நடனமாடுதல், போன்ற சித்திரங்களை தீட்டினர். இறந்தவர்களை மற்பாண்டங்களில் இட்டு புதைத்தனர். டால்மென்ஸ் எனப்படும் கல்லறையின் தூண்களை உருவாக்கினர். தென்னிந்தியாவில் நாகார்ஜூனகொண்டா, மாஸ்கி, பிரம்மகிரி, காஷ்மீர் பள்ளத்தாக்கு, தக்காணபீடபூமி, சேலம், கடப்பா, பெல்லாரி, அனந்தபூர், தெலுங்கானா, குஜராத், கத்தியவார் ஆகியவை புதிய கற்கால இடங்களாகும். உலோகக்காலம் செம்பு பயனப் டுத்தப்பட்ட காலம் செம்புக் காலம். மனிதன் பயனப் டுத்திய முதல் உலோகம் செம்பு ஆகும். கி.மு. 800 முதல் 150 இடையே உளள் காலம் இரும்பு காலம். இரும்புகாலத்தில் கலப்பை, கத்தி போன்றவை செய்யப்பட்டது. உலோகக்கால மக்கள் செம்பு, இரும்பு, வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களை பயனப்டுத்தினர். மக்கள் பளிங்கு – கண்ணாடி ஆகியவற்றை பயனப்டுத்தினர். உலோக காலம் மூன்றாக பிரிக்கப்படட்து. 1)செம்புக்காலம் 2) வெண்கலக்காலம் 3) இரும்புக்காலம் ஆதிச்ச நல்லூர், புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய இடங்களில் அதிகமான உலோகக் கருவிகள் கிடைத்துளள்து. இறந்தவாக் ளின் நினைவாக நினைவுச் சின்னம் எழுப்பினர். இறந்தவாக்ளை முதுமக்கள் தாழி எனப்படும் மற்பாண்டங்களில் இட்டு புதைத்தனர். தெய்வ வழிபாட்டு முறை காணப்பட்டது. ஆதிச்சநல்லூரில் இதற்கான சான்றுகள் கிடைத்துளள்து. திராவிட நாகரிகம் காலத்தால் பழைமையானது திராவிட நாகரிகம். குமரில பட்டர் எழுதிய Tantravarttika என்ற நூலில் இருந்து திராவிடம் என்ற சொல்லை கார்டுவெல் தாம் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் முதன் முதலில ஆங்கிலத்தில் கையாண்டுள்ளார்.


No comments:

Popular Posts