Sunday, October 02, 2022

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2022

அக்டோபர் 1 : தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இயல்பை விட 45 சதவீதம் அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அக்டோபர் 1 : இந்தி திணிப்பே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


அக்டோபர் 1 : கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு பெற்றுள்ளது. அங்கு தோண்டி எடுத்த பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.


அக்டோபர் 1 : காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.


அக்டோபர் 1 : 5-ஜி தொலை தொடர்பு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது முதலில் சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட 13 நகரங்களில் கிடைக்கும்.


அக்டோபர் 2 : தேசிய விளையாட்டு போட்டியில் தொடர் ஓட்டத்தில் தமிழக பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.


அக்டோபர் 3 : டெல் அவிவ் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.


அக்டோபர் 5 : குஜராத்தில் நடக்கும் தேசிய விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் அபய் சிங், வீராங்கனை சுனைனா குருவில்லா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.


அக்டோபர் 5 : 2026-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. மல்யுத்தம், வில்வித்தை போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.


அக்டோபர் 5 : உலகின் சிறந்த ஆக்கி கோல்கீப்பர்களாக இந்திய வீரர் ஸ்ரீஜேஷ், இந்திய வீராங்கனை சவிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


அக்டோபர் 6 : 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றது.


அக்டோபர் 5 : தேசிய விளையாட்டில் தமிழக ஆண்கள் கூடைப்பந்து அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.


அக்டோபர் 7 : உலகின் சிறந்த ஆக்கி வீரராக இந்திய வீரர் ஹர்மன் பிரீத் சிங் தேர்வு செய்யப்பட்டார்.


அக்டோபர் 8 : தேசிய விளையாட்டு போட்டியில் யோகாசனத்தில் தமிழக வீராங்கனை வைஷ்ணவி தங்கம் வென்று அசத்தினார்


அக்டோபர் 8 : உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார்.


அக்டோபர் 2 : மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம் பெற்றது. இதற்கான விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.


அக்டோபர் 2 : கிராமப்புற துப்புரவு பணியை சிறப்பாக செயல்படுத்தியதில் தெலுங்கானா மாநிலம் முதலிடம் பிடித்தது. தமிழகத்துக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.


அக்டோபர் 3 : மத்திய அரசின் வீடு மற்றும் நகர்ப்புற அமைச்சகம், ‘ஸ்வச் சர்வேஷன்’ திட்டத்தின் கீழ் தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 44-வது இடம் கிடைத்தது. கடைசி இடமான 45-வது இடத்தை மதுரை பெற்றது.


அக்டோபர் 3 : மலைப்பிராந்திய போர்களுக்கு உதவும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டது.


அக்டோபர் 5 : மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக, மீனவர்கள் கருத்தை கேட்டு சுற்றுச் சூழல் தாக்க இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


அக்டோபர் 3 : ரூ.1,470 கோடி செலவில் கட்டப்பட்ட இமாசல பிரதேச எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


அக்டோபர் 3 : அடுத்த நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து ‘தெலுங்கானா ராஷ்டிர சமிதி' என்ற தனது கட்சி பெயரை ‘பாரத ராஷ்டிர சமிதி' என சந்திரசேகர ராவ் மாற்றினார்.


அக்டோபர் 6 : இறுதிக்கட்ட போரில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இருப்பினும், 20 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறை வேறியது.


அக்டோபர் 6 : நகர்ப்புறங்களில் வீட்டிற்கு தேவையான கீரை வகைகள், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை வளர்ப்பதற்காக செங்குத்து தோட்டம், மண்ணில்லா சாகுபடி மேற்கொள்வதற்கு பொதுமக்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


அக்டோபர் 6 : நில ஆவணங்களை பிராந்திய மொழிகள் உள்பட பல்வேறு மொழிகளில் விரைவில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.


அக்டோபர் 7 : தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை அமலுக்கு வந்துள்ளது.


அக்டோபர் 7 : கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் இதுவரை 470 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துள்ளது.


அக்டோபர் 7 : குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


அக்டோபர் 8 : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். பயங்கரவாத தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே அறிவித்துள்ளார்.


அக்டோபர் 8 : மராட்டியத்தில் சிவசேனா கட்சி இரு அணிகளாக செயல்படும் நிலையில் அக்டோபர் கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.


அக்டோபர் 8 : அக்டோபர் 3- சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 4 : இயற்பியலுக்கான நோபல் பரிசு அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், ஆண்டன் ஸய்லிங்கர் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


அக்டோபர் 6 : இலக்கியத்துக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு கிடைத்துள்ளது.


அக்டோபர் 7 : ரஷிய, உக்ரைன் அமைப்புகளுடன் பெலாரஸ் சிறைக்கைதி அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கிறார்.


அக்டோபர் 5 : உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.


அக்டோபர் 6 : ஆப்பிரிக்க நாடான காம் பியாவில் 66 குழந்தைகளை பலி கொண்டதாக கூறப்படுகிற 4 இந்திய இருமல் மருந்துகள் ஆபத்தானவையா? என்பது பற்றி மத்திய அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.


அக்டோபர் 8 : இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிற கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.


அக்டோபர் 8 : 2024-ம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க தடை நீட்டிக்கப்படுவதாக அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவிட்டுள்ளது.


அக்டோபர் 8 : கால்நடை பெருக்கம் தொடர்பான தொழிலில் பங்குபெற தொழில் முனைவோருக்கு ரூ.50 லட்சம் வரை மானியத்துடன் வாய்ப்பு வழங்கப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.


அக்டோபர் 8 : கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் 2, 5 கிலோ எடை யில் கியாஸ் சிலிண்டர் விற்பனையை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னையில் தொடங்கிவைத்தார்.


அக்டோபர் 9 : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தர்மபுரியில் மத்திய இணை மந்திரி பாரதி பிரவின் பவார் கூறினார். அனைத்து படிப்புகளுக்கும் ஒரே நுழைவு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


அக்டோபர் 9 : நிலவில் சோடியம் குவிந்து கிடப்பதை ‘சந்திரயான்-2’ கருவி முதன் முதலாக படமாக்கியது.


அக்டோபர் 9 : 24 மணி நேரமும் சூரிய மின்சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமம் என குஜராத்தின் மோதேரா கிராமத்தினை பிரதமர் மோடி அறிவித்தார்.


அக்டோபர் 10 : இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அக்டோபர் 10 : உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் மரணமடைந்தார்.


அக்டோபர் 10 : தீபாவளி பண்டிகை அன்று கடந்த ஆண்டுகளை போன்று பட்டாசு வெடிப்பதற்கு 2 மணி நேரம் மட்டுமே (காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை) அனுமதி வழங்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


அக்டோபர் 10 : மத்திய அரசு அனுமதி அளித்ததன் எதிரொலியாக பழனி-கொடைக்கானல் இடையே நவீன ரோப்கார் சேவை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வெளிநாட்டு என்ஜினீயர்கள் ஆய்வு செய்தனர்.


அக்டோபர் 11 : சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின் உற்பத்தி செய்து ராமேசுவரம் தீவுக்கு வினியோகம் செய்ய ரூ.300 கோடியில், தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைக்கப்படுகிறது.


அக்டோபர் 11 : விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதம் வரை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


அக்டோபர் 11 : இந்தியாவில், டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை வருகிற ஜூலை மாதம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


அக்டோபர் 11 : இருக்கை விவகாரத்தில் அதிருப்தி நிலவும் சூழ்நிலையில் அ.தி.மு.க.வின் இருதரப்பும் சபாநாயகரிடம் கடிதம் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.


அக்டோபர் 11 : எளிதாக பனை மரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 லட்சத்துடன் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


அக்டோபர் 12 : இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது.


அக்டோபர் 12 : தமிழகத்தை தொடர்ந்து கேரளா, தெலுங்கானா மாநிலங்களும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.


அக்டோபர் 12 : இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அமைவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


அக்டோபர் 12 : விண்கல்லின் பாதையை மாற்றி நாசா விண்கலம் வரலாற்று சாதனை படைத்தது.


அக்டோபர் 13 : மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.


அக்டோபர் 13 : மாதவரத்தில் மெட்ரோ ரெயிலுக்கு சுரங்கம் தோண்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


அக்டோபர் 13 : இமாசலபிரதேசத்தில் நாட்டின் 4-வது ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


அக்டோபர் 13 : தமிழ்நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, ஒரு சதவீதம் கூட வக்கீல்கள் இல்லை என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறினார்.


அக்டோபர் 14 : பஞ்சாப்பில் பாகிஸ்தானில் இருந்து வந்த ‘டிரோன்’ சுட்டு வீழ்த்தப்பட்டது.


அக்டோபர் 14 : இமாசலபிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


அக்டோபர் 14 : 2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்த 10 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் உயர்கல்வியை தொடராத நிலை இருப்பதாக தமிழக கல்வித்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.


அக்டோபர் 15 : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக நடந்து வரும் அனைத்து போராட்டங்களும் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அமைச்சர்கள் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டக்குழுவினர் அறிவித்தனர்.


அக்டோபர் 15 : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.


அக்டோபர் 15 : உலக பசி குறியீட்டு பட்டியலில் 121 நாடுகளில் இந்தியா 107-வது இடத்தில் இருக்கிறது. இந்த புள்ளி விவரத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.


அக்டோபர் 15 : சாதாரண மக்கள் எளிதாக நீதியைப்பெறுவதற்கு கோர்ட்டுகளில் மாநில மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


அக்டோபர் 10 : பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்க ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் பென் எஸ்.பெர்னாக், அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் டக்ளஸ் டபிள்யூ.டயமண்ட், பிலிப் எச்.டிவிக் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.


அக்டோபர் 11 : கொழும்பு அருகே 3 வாரங்களாக கச்சா எண்ணெய்யுடன் கப்பல் காத்திருந்தபோதிலும், ரூ.57 கோடி இல்லாததால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் இலங்கை தவிக்கும் நிலை ஏற்பட்டது.


அக்டோபர் 12 : 8 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற ஜப்பான் ராக்கெட் தோல்வி அடைந்தது.


அக்டோபர் 13 : ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.


அக்டோபர் 13 : இலங்கையில் வறுமையால் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


அக்டோபர் 13 : பாகிஸ்தானில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் வீதம் கற்பழிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.


அக்டோபர் 14 : பாகிஸ்தானில் ஆஸ்பத்திரியின் மேற்கூரையில் 200 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அக்டோபர் 9 : பார்முலா 1 கார்பந்தய பட்டத்தை நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் 2-வது முறையாக உச்சிமுகர்ந்தார்.


அக்டோபர் 11 : கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 99 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.


அக்டோபர் 12 : கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்த தேசிய விளையாட்டில் ராணுவ அணி (சர்வீசஸ்) 128 பதக்கங்கள் குவித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக அணிக்கு 5-வது இடம் (74 பதக்கங்கள்) கிடைத்தது. ஊக்கமருத்து சர்ச்சையையடுத்து இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுருக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.


அக்டோபர் 14 : 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க 6 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி இருப்பதாக ஐ.சி.சி. கூறியுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.


அக்டோபர் 15 : பெண்கள் கிரிக்கெட்டில், இலங்கையை வீழ்த்தி இந்தியா 7-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது.


அக்டோபர் 16 : கொரோனா தடுப்பூசி திட்டம் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. இனி புதிதாக தடுப்பூசி கொள்முதல் செய்வதில்லை, கை வசமுள்ள ரூ.4,237 கோடியை அரசிடம் திரும்ப ஒப்படைப்பது என மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.


அக்டோபர் 16 : இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ பட்டப்படிப்பு நடத்துகிற முதல் மாநிலமாக மத்திய பிரதேச மாநிலம் உருவாகி உள்ளது. இதற்கான பாடப்புத்தகங்களை மத்திய மந்திரி அமித்ஷா வெளியிட்டார்.


அக்டோபர் 17 : என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை நவம்பர் 30 வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


அக்டோபர் 17 : விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் 11 கோடி விவசாயி களுக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். 12-வது தவணையாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.


அக்டோபர் 17 : ‘ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்த திட்டத்தால் உரங் களின் விலை குறை யும் என நம்பிக்கை தெரிவித்தார்.


அக்டோபர் 18 : தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியானவர் களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்றும், கலெக்டர் உள்ளிட்ட 21 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


அக்டோபர் 18 : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆணையம் அவரது மரண தேதி குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளது. மேலும் சசிகலா, விஜயபாஸ்கர், ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி இருப்பதுடன் அவர்கள் மீது விசாரணைக்கும் பரிந்துரை செய்திருக்கிறது.


அக்டோபர் 18 : சட்டசபை விதிகளின்படி துணைத்தலைவர் பதவியே கிடையாது என்றும், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம் உண்டு என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


அக்டோபர் 18 : 2005-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 41½ கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டதாக ஐ.நா. கூறியுள்ளது.


அக்டோபர் 19 : தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை 3.38 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது, இதனால் ஆண்டுக்கு ரூ.1,240 கோடி வட்டி கட்டுவது குறையும் என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.


அக்டோபர் 19 : காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவு வெளியானது. மல்லிகார்ஜூன கார்கே அமோக வெற்றி பெற்றார்.


அக்டோபர் 19 : அனைத்து வகை ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடைவிதிக்கப்படுவதாக தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.


அக்டோபர் 19 : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தளவாடங்கள் மட்டுமே இடம் பெறுகிற ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி 8 மடங்கு பெருகி இருப்பதாக பெருமிதப்பட்டார்.


அக்டோபர் 20 : தமிழகத்தில் போக்குவரத்து விதியை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.


அக்டோபர் 20 : குஜராத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பருவநிலை மாற்ற பாதிப்புகளில் இருந்து பூமியை காப்பதற்கான திட்டத்தை இருவரும் தொடங்கி வைத்தனர்.


அக்டோபர் 20 : கடந்த ஆண்டு, அதிக வெயில் காரணமாக இந்தியா பல்வேறு துறைகளில் ரூ.13 லட்சம் கோடி வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.


அக்டோபர் 21 : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய போலீஸ் உதவி கமிஷனர் உள்பட 4 போலீசார் இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதுபோல 3 தாசில்தார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


அக்டோபர் 20 : பொருளாதார நெருக்கடியினால் சொந்தக்கட்சியில் எதிர்ப்பு வலுத்ததால் இங்கிலாந்து பிரதமர் லிஸ்டிரஸ் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையின் நன்மைக்காகவே வருமான வரி உயர்த்தப்பட்டு இருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளதையடுத்து அந்த நாட்டில் அனைத்து விதமான திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.


அக்டோபர் 21 : இங்கிலாந்து பிரதமர் லிஸ்டிரஸ் ராஜினாமாவால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகிய இருவர் இடையே போட்டி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது. சீன எல்லையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஆயிரம் ஹெலிகாப்டர்களையும், ரிமோட் மூலம் இயங்கும் 80 குட்டி விமானங்களையும் இந்திய ராணுவம் கொள்முதல் செய்கிறது. ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் தேர்தலில் நின்று எம்.பி.யாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 23 : குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்து உள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியுள்ளார்.


அக்டோபர் 23 : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 1,500-க்கும் மேற்பட்ட பழமையான சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.


அக்டோபர் 23 : நடப்பு ஆண்டில் இதுவரை கர்நாடக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 530 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 25 : தீபாவளி அன்று வெடிக்கப்பட்ட பட்டாசு காரணமாக சென்னையில் 5 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை தாண்டியதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


அக்டோபர் 25 : அயோத்தி ராமர் கோவில், 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் தரிசனத்துக்கு திறந்து விடப்படும் என்று ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


அக்டோபர் 25 : தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் 211 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன.


அக்டோபர் 26 : கோவையில் கார் வெடித்து வாலிபர் பலியான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.


அக்டோபர் 26 : டெல்லியில் நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார். இளைஞர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


அக்டோபர் 26 : மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 308 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


அக்டோபர் 26 : சென்னையில் போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது. ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.


அக்டோபர் 27 : சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடியில் கட்டப்பட்ட தலைமை அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


அக்டோபர் 27 : எச்சரிக்கை விடுத்தும் படகை நிறுத்தாமல் சென்றதால் விதிமுறைகளுக்கு உட்பட்டே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று நாகையில், இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் விஷால் குப்தா விளக்கம் அளித்தார்.


அக்டோபர் 27 : கோடிக்கணக்கில் பணம் மற்றும் பதவி ஆசை காட்டி, 4 தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்க முயன்றதாக பா.ஜனதா பிரமுகர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


அக்டோபர் 27 : காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா அரசு வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


அக்டோபர் 28 : நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடையை அமல்படுத்தும் யோசனையை, உள்துறை மந்திரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.


அக்டோபர் 28 : விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதம் வரை தளர்த்த அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


அக்டோபர் 28 : புதிய ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிடக்கோரி, பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.


அக்டோபர் 28 : அத்திக்கடவு- அவினாசி திட்டப் பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.


அக்டோபர் 28 : பயணிகள் ரெயில் சேவையால் லாபம் இல்லை என்றும், மக்களின் வசதிக்காகவே இயக்குகிறோம் என்று மத்திய ரெயில்வே இணை மந்திாி ராவ் சாகேப் தன்வே கூறினார்.


அக்டோபர் 29 : என்ஜினீயரிங் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வும் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை 58 ஆயிரம் இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். 4-வது சுற்று கலந்தாய்வுக்கு 61 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.


அக்டோபர் 29 : மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு முதல் முறையாக தமிழில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றன. டிசம்பர் மாதத்துக்கு முன்பு புத்தகங்கள் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.


அக்டோபர் 29 : மாங்காட்டில் மழை நீர்கால்வாய் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு, இனியும் அங்கு மழை நீர் தேங்கினால் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவீர்கள் என அதிகாரிகளை எச்சரித்தார்.


அக்டோபர் 29 : கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் தெரிவித்தார்.


அக்டோபர் 29 : ஒரே மாதத்தில் 3-வது முறையாக மாடு மீது மோதி வந்தேபாரத் ரெயில் விபத்துக்குள்ளானது.


அக்டோபர் 29 : மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது.


அக்டோபர் 23 : 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி தித்திப்பான தீபாவளி பரிசை ரசிகர்களுக்கு அளித்தது.


அக்டோபர் 26 : 20 ஓவர் உலக கோப்பையில் நடந்த சூப்பர் 12 சுற்றில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் அயர்லாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது.


அக்டோபர் 27 : 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை பதம் பார்த்த ஜிம்பாப்வே ஒரு ரன்னில் வெற்றி பெற்றது.


அக்டோபர் 27 : வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


அக்டோபர் 29 :மலேசியாவில் நடந்த ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.


அக்டோபர் 23 : சீன அதிபர் ஜின்பிங் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் புதிய பிரதமராக லி கியாங் அறிவிக்கப்பட்டுள்ளார்.


அக்டோபர் 25 : இந்திய வம்சாவளியை சேர்ந்்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமரானார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.


அக்டோபர் 25 : இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவை கொலை செய்ய முயன்ற 3 பேர் உள்பட 8 தமிழ் கைதிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.


அக்டோபர் 26 : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது புதிய மந்திரிசபையை அமைத்துள்ளார். தனது அரசியல் எதிரிகளுக்கும் அவர் இடம் அளித்துள்ளார்.


அக்டோபர் 28 : சமூக வலைத்தளமான டுவிட்டர், உலக பணக்காரர் எலான் மஸ்க் வசமானது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இந்தியர் பராக் அகர்வால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.


அக்டோபர் 30 : விண்வெளித்துறையில் இந்தியாவின் சாதனையை உலகமே வியந்து பார்க்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.


அக்டோபர் 30 : குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான போர் விமான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


அக்டோபர் 30 : 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் தெரிவித்தார்.


அக்டோபர் 31 : அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


அக்டோபர் 31 : சென்னையில், விரைவில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


அக்டோபர் 31 : பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், நன்கொடைக்கு வரி விலக்கு பெற முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.


அக்டோபர் 31 : கேரளாவில் பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


அக்டோபர் 31 : குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்தது.


அக்டோபர் 30 : 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிடம் போராடி தோல்வி அடைந்தது.


அக்டோபர் 30 : பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி மீண்டும் ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.


அக்டோபர் 31 : நியூசிலாந்து கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா, தவான் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


நவம்பர் 3 : ஆசிய செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.


நவம்பர் 5 : தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக டாக்டர் அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டார்.


அக்டோபர் 30 :இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்சின் செல்போனை ரஷியாவை சேர்ந்த உளவாளிகள் ‘ஹேக்’ செய்து உளவு பார்த்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.


அக்டோபர் 30 :சோமாலியாவில் நடந்த இரட்டை கார் குண்டு வெடிப்பில் 100 பேர் பலியாகினர்.


No comments:

Popular Posts