Saturday, October 01, 2022

TNPSC G.K - 145 | ஆரிய நாகரிகம்.

  • சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பின் இந்தியாவில் தோன்றியது - ஆரிய நாகரிகம்.

  • ஆரிய நாகரிகம் வேதகால நாகரிகம்' என்றும் அழைக்கப்படுகிறது. வேதகாலம் இரு வகைப்படும் அவை : முற்பட்ட வேதகாலம் (கிமு 1600 முதல் கிமு 1000 வரை) பிற்பட்ட வேதகாலம் (கிமு 1000 முதல் கிமு 600 வரை).

  • ஆரிய நாகரிகம் பற்றி அறிய உதவுவது : வேதங்கள், உபநிடதங்கள்

  • வேதங்கள் : ரிக், யஜூர், சாம, அதர்வணம் என 4 வகை.

  • வேதங்களில் பழைமையானது - ரிக் வேதம் ரிக் வேதத்தில் 1,028 மந்திரங்கள் உள்ளன.

  • யஜூர் வேதம் சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது.

  • இந்திய இசைக்கலைக்கான தொடக்கம், சாம வேதத்தில் காணப்படுகிறது.

  • அதர்வண வேதம் - பில்லி, சூன்யம் பற்றிக் குறிப்பிடுகிறது

  • உபநிடதங்கள் : மொத்தம் 108 ரிக் வேதகாலத்தில் ஆரியர்கள் சப்தசிந்து பகுதியில் குடியேறினார்கள்.

  • ஆரியர்கள், தங்கள் தலைவரை 'ராஜன் என்று அழைத்தனர் ராஜனுக்கு அறிவுரை கூற, சபா' என்ற மூத்தோர் சபையும், 'சமிதி' என்ற பொது சபையும் இருந்தன.

  • முற்பட்ட வேதகாலத்தில் சமூகத்தில் வர்ணாஸ்ரமம் இருந்திருக்கவில்லை.

  • ரிக் வேதகாலத்தில் சமூகத்தில் பெண்கள் நிலை உயர்ந்திருந்தது.

  • பிற்பட்ட வேதகாலத்தில் பெண்களின் நிலை பின்தங்கியது வர்ணாஸ்ரமம் தோன்றியது.

  • ஆரியர்கள், இயற்கைச் சக்திகளை கடவுளாக வழிபட்டனர்.

No comments:

Popular Posts