Tuesday, October 04, 2022

TNPSC G.K - 164 | டெல்லி சுல்தான்கள் PART 1

சான்றுகள் :


  • அல்பெருனி - தாரிக் அல் ஹிந்து (அரபு மொழி).
  • மின்ஹாஜ் உஸ்சிராஜ்- தபகத் இ நசிரி (1260) அரபு மொழி வரலாற்று நூல்.
  • கியாசுதீன் பரணி- தாரிக் இ பெரோஸ் ஷாகி (1357 பெரோஸ் வரையிலான வரலாறு).
  • அமீர் குஸ்ரு - மிஃப்தா உல் ஃபுதூ, கஜைன் உல் ஃபுதூ(பாரசீக மொழி).
  • துக்ளக் நாமா (பாரசீக மொழி).
  • சம்ஸ் இ சிராஜ் அஃபிஃப், தாரிக் இ பெரோஸ் ஷாகி பரணியின் விவரணைகள் ஒட்டியது பெரிஸ்டா (பாரசீக மொழி).

அரபு படையெடுப்புகள் :


  • ஈராக் ஆளுநர் ஹஜஜ் பின் யுக்ஃப் கடற்கொள்ளையருக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி சிந்து அரசர் தாகிரை தாக்கினார், இதில் தாகிர் வெற்றி பெற்றார்.
  • முகமது பின் காசிம் ஹஜஜ் மருமகன் இந்திய படையெடுப்பின்போது வயது 17 சிந்துவில் உள்ள அதிகாரப் போட்டியால் இவர் வெற்றி பெற்றார் சிந்துவின் தேபல் துறைமுகத்தை அழித்தனர் மற்றும் தாகிர் ரோஹ்ரியில் இறந்தார்.

கஜினி முகமது :


  • குரசன் அரசின் ஆளுநர்(துருக்கிய அடிமை) அஸ்புடிஜின் 963 கஜினியை கைப்பற்றி அரசரானார்.
  • அவருக்குப் பின் மூன்று வாரிசுகளின் தோல்வியால் சபுஃதஜின் உயர்குடியினரால் முடிசூட்டப்பட்டார்.
  • ஷாகி அரசர் ஜெய்பாலை வென்று அதற்கு - மகன் மாமுதை ஆளுநர் ஆக்கினார்.
  • சபுஃதஜின் (997)மறைவுக்குப் பின் இளைய மகன் இஸ்மாயில் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
  • இஸ்மாயிலை கொன்று கஜினி முகமது ஆட்சியைக் கைப்பற்றினார்(27வது வயதில்).
  • யாமினி உத் தவுலா (பேரரசின் வலது கை) என்ற பட்டத்துடன் ஆட்சி பொறுப்பேற்றார்.
  • ஷாஹி அரசர் அனந்த பாலரை வென்றார்.
  • 1025 குஜராத் சோம்நாத் கோவில்மீது படையெடுத்து வெற்றி பெற்றார் 2 கோடி தினார் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடித்தார்.
  • 1029 இல் ரேய் என்ற ஈரானிய நகர் சூறையாடலில் 300000 தீனார் மதிப்பிலான ஆபரணங்கள் 260000 தினார் மதிப்பிலான நாணயங்கள் 30000 தினார் தங்க வெள்ளி பொருட்கள்.
  • அவருக்குப் பின் சுல்தான் இப்ராஹிம் 42 ஆண்டு ஆட்சி செய்தார் அவரது மகன் மசூத் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

கோரி முகமது :


  • கிபி 1180-1190 களில் நவீன பஞ்சாப், சிந்து மற்றும் ஹரியானா மாகாணங்களில் காவல் அரண்களை அமைத்தார்.
  • தொடக்கத்தில் உச், லாகூர் மற்றும் முல்தான் அதிகார மையம்.
  • இஸ்மாயிய வம்ச ஆட்சியாளர்களை வென்றார்.
  • குஜராத் சாளுக்கியர்கள் அபு மலையில் இவரை வென்றனர்.
  • தபர்ஹிந்தா (பட்டிண்டா) கோட்டையைக் கைப்பற்றினர்.
  • அஜ்மீர் அரசர் பிருதிவிராஜ் சவுகான் 1191 ல் தபர்ஹிந்தா பகுதியில் நடைபெற்ற முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றார்.
  • 1192 இல் முகமது கோரி மீண்டும் படையெடுத்துப் பிருதிவிராஜ் சவுகானை இரண்டாம் தரெயின் போரில் கொன்றார்.
  • குத்புதீன் ஐபக் இந்திய பகுதிகளுக்கான துணை ஆட்சியராக நியமித்தார்.
  • கன்னோசி அரசர் ஜெயச்சந்திரா (பிருதிவிராஜ் சவுகானுக்கு கொல்ல கோரிக்கு உதவியவர்) வெற்றிகொள்ள மீண்டும் இந்தியா வந்தார் சந்த்வார்ப்போர் கிபி 1194.
  • குரித், பண்டகம் மொய்சுதின் இவரின் அடிமைகள்.
  • சியா, கோகர்கள் இணைந்து முகமது கோரி மசூதியில 1706 மார்ச் 25 கொன்றனர் (திரும்பும் வழியில் சிந்து நதிக்கரையில் கொல்லப்பட்டார் எனவும் கூறுவர்).
  • டோமர் (டில்லி), சௌகான் (ராஜஸ்தான்), சோலங்கி(குஜராத்), பரமர் (மால்வா), கடவாலா (கன்னோசி) மற்றும் சந்தேலர் (புந்தேல்கண்ட்) முக்கிய வட இந்திய வம்சங்கள்
  • இரு சௌகான்கள் விக்கிரகராஜ் பிருத்திவிராஜ்.
  • பரமர் வம்ச போஜர்.
  • கடவாலா அரசர் ஜெயச்சந்திரா.
  • சந்தேலர் யசோவர்மன் கீர்த்திவர்மன்.
  • வலிமையான அரசர்களாக இருந்தனர்.
  • லட்சுமணர் கோவில், விஸ்வநாதர் கோவில், கந்தரிய மகாதேவர். கஜுராஹோ கோவில் வளாகம் கஜுராஹோ ஆட்சியாளர் புந்தேல்கந்த் சந்தேலர்களால் கட்டப்பட்டது.

No comments:

Popular Posts