Saturday, October 15, 2022

TNPSC G.K - 216 | பொதுத்தமிழ் - ஐந்திணை எழுபது.

ஐந்திணை எழுபதின் உருவம் :


  • ஆசிரியர் - மூவாதியார்.
  • பாடல்கள் - 70(5*14=70).
  • திணை - ஐந்து அகத்தினணகளும்.
  • திணை வைப்பு முறை - குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்.
  • பாவகை - வெண்பா.
  • உரையாசிரியர் - நடராச பிள்ளை.


பொதுவான குறிப்புகள் :


  • தும்முதல், பெண்களின் இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல் முதலான நிமித்தங்கள் கூறப்பட்டுள்ளன.
  • மணமகள் மணமகனிடம் இருந்து உறுதிப்பத்திரம் எழுதி வாங்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
  • திணைக்கு பதினான்கு பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்கள் உள்ளன.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலில் விநாயகர் வணக்கம் கூறப்பட்டுள்ளது.
  • இந்நூலில் நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை(முல்லையில் இரண்டு, நெய்தலில் இரண்டு)25,26 ,69,70.
  • பகைவரை அழித்த வீரர்களுக்கு பாலை நிலத்தில் கல் நடுதல் வழக்கம் என கூறுகிறது.
  • மக்கள் மனநிலையை  முல்லை  திணை கூறுகிறது.
  • பிரிவின் ஒழுக்கத்தை  பாலை திணை கூறுகிறது.
  • ஊடல் ஒழுக்கம் பற்றி  மருதம்  திணை கூறுகிறது.
  • பிரிந்து நலிந்து வருந்தும் நங்கையை நெய்தல் திணை கூறுகிறது.


முக்கிய அடிகள் :


  • நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு ... நின்னலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து ... இன்னுயிர் தாங்கும் மருந்து ... 
  • செங்கதிர் செல்வன் சினங்காத்த போழ்தினாற் ... பைங்கொடி முல்லை மனங்கமழ வண்டிமிர் ... காரோடலமருங் கார்வானங் காண்டோறும் ... நீரோடலம் வருங் கண் ... 

No comments:

Popular Posts