Sunday, December 11, 2022

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2022

டிசம்பர் 1 : குஜராத் சட்டசபைக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவானது.


டிசம்பர் 1 : பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெறும் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக் கோருவது நியாயமானது என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.


டிசம்பர் 1 : தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரை பாகிஸ்தான் ஒப்படைத்தது.


டிசம்பர் 1 : சில்லறை பண பரிமாற்றத்துக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.


டிசம்பர் 1 : ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்க்க வருமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு தமிழக அரசு தரப்பு வக்கீல் அழைப்பு விடுத்தார்.


டிசம்பர் 2 : இந்தியாவில் ஒரே மொழி என்று திணிப்பதை நான் எதிர்க்கிறேன் என்றும், மாநில மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பேசினார்.


டிசம்பர் 2 : தாமிரபரணி ஆற்றின் பெயரை தமிழ் பெயரான பொருநை நதி என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை 12 வாரத்தில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


டிசம்பர் 2 : சென்னை ஐ.ஐ.டி. வளாக வேலைவாய்ப்பு நேர்காணலின் முதல் நாளில் 445 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டநிலையில், 25 மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் வேலைகளுக்கு தேர்வாகியுள்ளனர்.


டிசம்பர் 3 : அரசு ஊழியர்களில் பணியில் இளையவர் அதிகசம்பளம் பெற்றால், அதே தொகையை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


டிசம்பர் 3 : இந்தியாவின் ஜி-20 செயல் திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சர்வதேச நிதியம் அறிவித்துள்ளது.


டிசம்பர் 3 : கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ‘பத்மபூஷண்’ விருது வழங்கினார். அப்போது அவர் “நான் எங்கு சென்றாலும் இந்திய அடையாளத்தை சுமந்து செல்கிறேன்” என பெருமிதத்துடன் கூறினார்.


டிசம்பர் 2 : உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


டிசம்பர் 2 : இந்தியா ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கும் காலத்தில் என் நண்பர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.


டிசம்பர் 3 : ரஷியா நடத்தி வரும் போரில் 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலியாகி இருப்பதாக உக்ரைன் அதிபரின் மூத்த ஆலோசகர் தெரிவித்தார்.


டிசம்பர் 3 : அமெரிக்காவிடம் இருந்து ரூ.24,400 கோடியில் ‘பிரிடேட்டர்’ வகை அதிநவீன ‘டிரோன்’கள் வாங்கும் செயல்முறையில் இந்தியா ஈடுபட்டு வருவதாக கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவித்தார்.


டிசம்பர் 4 : 12 தென்ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியா கொண்டு வரும் திட்டத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகாததால் தாமதமாகி வருகிறது.


டிசம்பர் 4 : ‘போக்சோ’ வழக்குகளில் உயர் போலீஸ் அதிகாரிகள் அனுமதியை பெற்றுத்தான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


டிசம்பர் 4 : 6 மாதங்களுக்கு பிறகு 3 சீன விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.


டிசம்பர் 5 : ஜி-20 மாநாடு தொடர்பாக 40 கட்சிகளின் தலைவர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தமிழக தலைவர்களும் பங்கேற்றனர். உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி பட கூறினார்.


டிசம்பர் 5 : பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே சென்னை அருகே பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.


டிசம்பர் 5 : பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


டிசம்பர் 6 : தொலைதூர கல்வி மூலமாக படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.


டிசம்பர் 6 : மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வலியுறுத்தினார்.


டிசம்பர் 6 : சென்னை மாநகராட்சியில் கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அதன் செயல்பாடுகளை அமெரிக்க குழு நேரில் வந்து பார்வையிட்டது.


டிசம்பர் 6 : சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்கிற உளவு கப்பல் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியானது.


டிசம்பர் 7 : 15 ஆண்டுகள் பா.ஜனதா வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.


டிசம்பர் 7 : இந்த ஆண்டில் மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பியது.


டிசம்பர் 7 : கொடி நாள் நிதியாக ரூ.53.66 கோடி திரட்டி தமிழக அரசு சாதனை படைத்தது.


டிசம்பர் 7 : உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 5 இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர்.


டிசம்பர் 7 : கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.35 சதவீதம் உயர்த்தியது. இதனால், வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான தவணைக் காலம் அதிகரிக்கும்.


டிசம்பர் 8 : கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


டிசம்பர் 8 : சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் 2024-ம் ஆண்டு திறக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.


டிசம்பர் 8 : 1.93 லட்சம் ‘போக்சோ’ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


டிசம்பர் 8 : வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.


டிசம்பர் 8 : தமிழகத்தில் அரசு வேலைக்காக 67.61 லட்சம் பேர் காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


டிசம்பர் 8 : தமிழக டாக்டர்களின் திறமைகளை உலகறிய செய்ய ஜனவரி 1-ந்தேதி முதல் ‘நலம் 360’ யூ-டியூப் சேனல் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


டிசம்பர் 9 : ஊர்வலம், போராட்டத்துக்கு சூழ்நிலைக்கு ஏற்ப அனுமதி வழங்குவதும், மறுப்பதும் போலீசாரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்று உயர்நீதிமன்றம் கூறியது.


டிசம்பர் 9 : தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் பட்டியலை மாற்றி அமைப்பதற்காக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


டிசம்பர் 9 : ஜனவரி 1-ந் தேதி முதல் புரி ஜெகநாதர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.


டிசம்பர் 9 : இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.


டிசம்பர் 9 : கலங்கரை விளக்க சுற்றுலா திட்டத்தில் நாடு முழுவதும் 65 கலங்கரை விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் 11 கலங்கரை விளக்கங்கள் இந்த திட்டத்தில் உள்ளன.


டிசம்பர் 10 : காஷ்மீர் திரிகூட மலையில் உள்ள பிரசித்திபெற்ற வைஷ்ணவி தேவி கோவி லுக்கு இந்த ஆண்டு 87 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.


டிசம்பர் 10 : இமாசலபிரதேச மாநிலத்தில் புதிய எம்.எல்.ஏ.க்களில் 93 சதவீதத்தினர் கோடீசுவரர்கள் ஆவார்கள். 41 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.


டிசம்பர் 10 : காசி தமிழ் சங்கமத்தின் நினைவாக தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே புதிய ரெயில் சேவை தொடங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.


டிசம்பர் 4 : வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் பேட்டிங், பீல்டிங்கில் சொதப்பியதால் இந்தியா வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டது.


டிசம்பர் 7 : உலக பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.


டிசம்பர் 7 : இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வங்காள தேச அணி திரில் வெற்றியை பெற்றதுடன், தொடரையும் வசப்படுத்தியது.


டிசம்பர் 10 : இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


டிசம்பர் 10 : வங்காளதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷனின் இரட்டை சதம், விராட் கோலியின் சதத்தால் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.


டிசம்பர் 18 : 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றது.


டிசம்பர் 18 : சபிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத் தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல்கணக்கில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


டிசம்பர் 18 : 36 வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் அர்ஜெண்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும்.


டிசம்பர் 18 : பிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த மாதம் 20- ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது.


டிசம்பர் 18 : 32 அணிகள் கலந்து கொண்ட இந்த பிரபஞ்ச திருவிழாவின் இறுதி ஆட்டம் தோகாவின் லுசைல் நகரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்றது.


டிசம்பர் 18 : அர்ஜெண்டினா அணிக்காக 172 போட்டிகளில் விளையாடி இருக்கும் மெஸ்ஸி இதுவரை 98 கோல்கள் அடித்துள்ளார்.


டிசம்பர் 9 : கடல் அலைகளிலிருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை ஐ.ஐ.டி. ஆய்வுக் குழுவினர் உருவாக்கினர். இதற்கு 'சிந்துஜா-1' எனப் பெயரிட்டுள்ளனர்.


டிசம்பர் 10 : காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே விரைவில் 'காசி தமிழ்ச் சங்கமம்' என்ற புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.


டிசம்பர் 11: இமாச்சலப் பிரதேச முதல்வராக காங்கிரஸ் மூத்தத் தலைவர் சுக்விந்தர் சிங் சுக்ஹூவுக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


டிசம்பர் 12 : குஜராத் முதல்வராக பாஜகவின் பூபேந்திர பட்டேலுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பூபேந்திர பட்டேல் இரண்டாவது முறை முதல்வராகியிருக்கிறார்.


டிசம்பர் 19 : கத்தார் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா குரேஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இரண்டாவது அரையிறுதியில் பிரான்ஸ் மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையைக் கைப்பற்றியது.


டிசம்பர் 14 : தமிழக அமைச்சரவை முதன் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். 10 அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன.


டிசம்பர் 16 : அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசின் நிதித் துறை அறிவித்துள்ளது.பல்லுயிர்ப் பெருக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாதுகாப்பதற்கான இலக்கை 30 சதவீதமாக அதிகரிக்கவும் 2030-ஆம் ஆண்டுக்குள் 20,000 கோடி அமெரிக்க டாலர் நிதியைத் திரட்டவும் ஐ.நா. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா.பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பின் 15-ஆவது சர்வதேச மாநாடு கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்றது. அந்த அமைப்பில் இணைந்துள்ள 190-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டனர். பல்லுயிர்ப்பெருக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 17 சதவீத நிலப்பகுதிகளும் 10 சதவீத கடல் பகுதிகளும் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


No comments:

Popular Posts