ஜனவரி 22 : சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு 15 லட்சம் வாசகர்கள் வருகைப் புரிந்தனர். இதில், ரூ.16 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
ஜனவரி 22 : ரூ.393 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய புறநகர் பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி திறந்து வைக்கிறார்.
ஜனவரி 22 : குருவாயூர் கோவிலுக்கு சொந்தமாக 263 கிலோ தங்கமும், 6 ஆயிரத்து 605 கிலோ வெள்ளியும் இருப்பதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 22 : நீதிபதிகளை நியமிக்கும் விவகாரம் பற்றிக் கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதி சோதி, சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்.
ஜனவரி 23 : அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்குப் பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களைப் பிரதமர் மோடி சூட்டினார். மேலும் நேதாஜி நினைவு மண்டபத்தின் மாதிரியையும் திறந்து வைத்தார்.
ஜனவரி 23 : சரியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன். அவர் அன்பானவராகவும், அறிவுக்கூர்மையுடனும் இருந்தால் போதும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
ஜனவரி 23 : கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை 3 நீதிபதிகள் அமர்வு அவசரமாக விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனவரி 23 : ‘தமிழகம்’ என அழைத்ததால் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து கவர்னர் மாளிகையில் இருந்து வெளியான அழைப்பிதழில் ‘தமிழ்நாடு கவர்னர்’ என்ற சொல்லுடன் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் இடம் பெற்றது.
ஜனவரி 23 : சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடியில் 135 அடி உயரத்தில் தகவல் தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 23 : புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைக் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தனர்.
ஜனவரி 24 : சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குப் பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 24 : சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால அனுமதி வழங்கியது.
ஜனவரி 24 : விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்திற்குத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஜனவரி 24 : சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய 4 பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்ய நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 25 : உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைப் போல தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராம் மற்றும் பாம்புபிடி வீரர்களுக்குப் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஜனவரி 25 : தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்குத் தடை இல்லை என்றும், இது தொடர்பாக அரசின் உத்தரவை ரத்து செய்தும் சென்னை ஐகோர்ட்டுத் தீர்ப்பு அளித்துள்ளது.
ஜனவரி 25 : தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது எனத் தேசிய வாக்காளர் தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
ஜனவரி 25 : மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவதாகப் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
ஜனவரி 26 : தங்கம் விலை 2½ ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தைக் கடந்து இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் உச்சத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 26 : டெல்லியில் கோலாகலமாக நடை பெற்ற குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் சிசி கலந்து கொண்டார்.
ஜனவரி 26 : சென்னை-பெங்களூரு இடையேயான 96.1 கி.மீ. தூரத்துக்கான விரைவு சாலை அமைக்கும் பணிகளில் 15 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று இருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
ஜனவரி 26 : ஏகனாபுரம், நெல்வாய் கிராமசபைக் கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4-வது முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனவரி 27 : இடைத்தேர்தலைத் தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முறையிட்டு உள்ளனர். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஜனவரி 27 : மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஜனவரி 27 : தமிழகப் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைத்தளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜனவரி 27 : கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 3, 4-ந்தேதிகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து 3,500 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 27 : புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 28 : பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்குக் கடிவாளம் போடும் வகையில் 3 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
ஜனவரி 28 : குரூப்-3 ஏ பணிகளில் உள்ள 15 காலியிடங்களுக்கான தேர்வை 98 ஆயிரம் பேர் எழுத விண்ணப்பித்ததில், 44 ஆயிரத்து 321 பேர் மட்டுமே எழுதினார்கள். அதன்படி, ஒரு இடத்துக்கு 2 ஆயிரத்து 954 பேர் போட்டியிடுகின்றனர்.
ஜனவரி 28 : மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டவர்களிடம் மருந்து பெட்டகங்கள் சென்று சேர்ந்துள்ளன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ஜனவரி 28 : ‘ஏ' சான்றிதழ் பெற்ற படங்களைப் பார்க்க குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையைத் தணிக்கை வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 28 : ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாயத் தோட்டம் (முகல் கார்டன்), அமிர்தத் தோட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது.
ஜனவரி 22 : அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி 24 : நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு பெண் பலியானார். டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் அதிர்வு உணரப்பட்டது.
ஜனவரி 24 : பாகிஸ்தானில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு மக்களிடம் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மன்னிப்பு கேட்டார்.
ஜனவரி 25 : வடகொரியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் அந்த நாட்டின் தலைநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஜனவரி 26 : பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்கப் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 26 : உளவு செயற்கைக்கோளை ஜப்பான் விண்ணில் செலுத்தியது.
ஜனவரி 26 : கொரோனா பலிகள் 80 சதவீதம் குறைந்து விட்டது எனச் சீனா சொல்கிறது.
ஜனவரி 26 : சர்வதேச நிதியத்திடம் கடன் உத்தரவாதம் வழங்கிய இந்தியாவுக்கு, இலங்கை நன்றி தெரிவித்தது.
ஜனவரி 27 : காசா-இஸ்ரேல் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இது முழு அளவிலான போராக உருவெடுக்கும் அபாயம் எழுந்துள்ளது.
ஜனவரி 22 : உலகக் கோப்பை ஆக்கியில் கால்இறுதிக்கு முந்தைய 2-வது சுற்றில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் நியூசிலாந்திடம் தோற்று போட்டியை விட்டு வெளியேறியது.
ஜனவரி 22 : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனைப் போலந்தின் ஸ்வியாடெக் 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாகத் தோற்று வெளியேறினார்.
ஜனவரி 22 : இந்திய ஓபன் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் பிரிவில் தாய்லாந்தின் குன்லாவத், பெண்கள் பிரிவில் தென்கொரியாவின் அன்சே யங் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர்.
ஜனவரி 24 : கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது.
ஜனவரி 24 : ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இந்திய வீரர் ரிஷப் பண்டுக்கு இடம் கிடைத்துள்ளது.
ஜனவரி 25 : பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் மொத்தம் ரூ.4,670 கோடிக்கு விற்பனை ஆனது. அதிகபட்சமாக ஆமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியது.
ஜனவரி 25 : ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜனவரி 25 : ஐ.சி.சி. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராகச் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
ஜனவரி 26 : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் திறமையான பந்து வீச்சாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடங்கி வைத்தார்.
ஜனவரி 27 : நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஜனவரி 27 : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா இணை தோல்வி அடைந்தது.
ஜனவரி 27 : உலகக்கோப்பை ஆக்கிப்போட்டியில் ஆஸ்திரேலியா அரை இறுதியில் வெளியேற்றப்பட்டது.
ஜனவரி 28 : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா முதல் முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றார்.
No comments:
Post a Comment