Ad Code

Responsive Advertisement

POLITY MCQ FOR TNPSC | TRB | 4551-4600 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

[1] சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு வழக்கிற்கு பொருந்தக் கூடிய நீதிப்பேராணை எது?

a. நெறியுறுத்தும் நீதிப்பேராணை.

b. ஆட்கொணர்வு நீதிப்பேராணை.

c. தகுதி முறை வினவும் நீதிப் பேராணை.

d. விளக்கம் கோரும் ஆணை.

Answer: b. ஆட்கொணர்வு நீதிப்பேராணை.


[2] சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், சட்டபூர்வமான கடமையைச் செய்ய உத்தரவிடுவதையும் குறிக்கும் நீதிப்பேராணை எது?

a. தடை நீதிப்பேராணை.

b. தகுதி முறை வினவும் நீதிப் பேராணை.

c. நெறியுறுத்தும் நீதிப்பேராணை.

d. ஆட்கொணர்வு நீதிப்பேராணை.

Answer: c. நெறியுறுத்தும் நீதிப்பேராணை.


[3] உயர்மட்ட நீதிமன்றம், கீழ்நிலை நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயங்கள் தங்களின் அதிகார வரம்பை மீறி நடப்பதைத் தடுக்கும் விதமாக வழங்கப்படுவது எது?

a. நெறியுறுத்தும் நீதிப்பேராணை.

b. ஆட்கொணர்வு நீதிப்பேராணை.

c. தடை நீதிப்பேராணை.

d. விளக்கம் கோரும் ஆணை.

Answer: c. தடை நீதிப்பேராணை.


[4] எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அல்லது பணி சான்றிதழ் ஆணை அடிப்படையில் என வினா எழுப்புவதைக் குறிப்பிடுவது எது?

a. ஆட்கொணர்வு நீதிப்பேராணை.

b. தடை நீதிப்பேராணை.

c. தகுதி முறை வினவும் நீதிப் பேராணை.

d. நெறியுறுத்தும் நீதிப்பேராணை.

Answer: c. தகுதி முறை வினவும் நீதிப் பேராணை.


[5] உயர் நீதிமன்றமானது சட்ட உறுப்பு 226-ன் கீழ் எதற்காக வழிகாட்டுதல்கள், உத்தரவுகள் பிறப்பிக்க அதிகாரம் கொண்டுள்ளது?

a. தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்க.

b. பொது மக்கள் நலன் கருதி.

c. நிர்வாக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த.

d. சட்டங்களுக்கு விளக்கம் அளிக்க.

Answer: b. பொது மக்கள் நலன் கருதி.


[6] நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசமைப்பிற்கு முரணாக இருக்குமானால் அச்சட்டம் செல்லாது என்று அறிவிக்க எந்த அதிகாரம் வழிவகுக்கிறது?

a. பொது நல வழக்கு.

b. நீதித்துறை செயல்பாடு.

c. நீதித்துறைச் சீராய்வு.

d. சட்டத்தின் ஆட்சி.

Answer: c. நீதித்துறைச் சீராய்வு.


[7] எந்தெந்த நீதிமன்றங்களுக்கு நீதித்துறைச் சீராய்வு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?

a. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்.

b. உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்கள்.

c. உச்ச நீதிமன்றம் மட்டும்.

d. அனைத்து நீதிமன்றங்களுக்கும்.

Answer: a. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்.


[8] நீதித்துறைச் சீராய்வு அதிகார வரம்பு விரிவடைந்து, எதன் மீது கூட சீராய்வு மனு தாக்கல் செய்யும் அளவுக்கு வந்துள்ளது?

a. நிர்வாகச் சட்டம்.

b. இந்திய தண்டனைச் சட்டம்.

c. அரசமைப்புத் திருத்தச்சட்டம்.

d. உள்ளூர் சட்டங்கள்.

Answer: c. அரசமைப்புத் திருத்தச்சட்டம்.


[9] அரசமைப்புத் திருத்தச்சட்டம் அரசமைப்பின் அடிப்படை கோட்பாட்டுக்கு (மதச்சார்பற்றத்தன்மை, மக்களாட்சி, கூட்டாட்சிமுறை போன்றவை) பாதிப்பிற்குள்ளாகிறதா என்று மறுஆய்வு செய்யும் அதிகாரம் எது?

a. நீதித்துறை செயல்பாடு.

b. நீதித்துறைச் சீராய்வு.

c. பொது நல வழக்கு.

d. அசல் நீதி அதிகாரவரம்பு.

Answer: b. நீதித்துறைச் சீராய்வு.


[10] பொது மக்கள் நலன் கருதி எந்த ஒரு தனிநபரும் நீதிமன்றத்தை நாடி மனு அளிக்க முடியும். இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a. நீதித்துறை செயல்பாடு.

b. நீதித்துறைச் சீராய்வு.

c. பொது நல மனு.

d. ரிட் மனு.

Answer: c. பொது நல மனு.


[11] பொது நல மனுவை அரசமைப்பு உறுப்பு 32-ன் கீழ் எங்கு தாக்கல் செய்ய முடியும்?

a. உயர் நீதிமன்றம்.

b. கீழமை நீதிமன்றம்.

c. உச்ச நீதிமன்றம்.

d. நடுவர் நீதிமன்றம்.

Answer: c. உச்ச நீதிமன்றம்.


[12] பொது நல மனுவை அரசமைப்பு உறுப்பு 226-ன் கீழ் எங்கு தாக்கல் செய்ய முடியும்?

a. உச்ச நீதிமன்றம்.

b. உயர் நீதிமன்றம்.

c. கீழமை நீதிமன்றம்.

d. நடுவர் நீதிமன்றம்.

Answer: b. உயர் நீதிமன்றம்.


[13] பொது நல மனுவை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ன்படி எங்கு தாக்கல் செய்ய முடியும்?

a. உச்ச நீதிமன்றம்.

b. உயர் நீதிமன்றம்.

c. நடுவர் நீதி மன்றங்கள்.

d. மாவட்ட அமர்வு நீதிமன்றம்.

Answer: c. நடுவர் நீதி மன்றங்கள்.


[14] பின்வருவனவற்றுள் எதற்கு எதிராக பொது நல வழக்கு தொடர முடியாது?

a. மாநில அரசுகள்.

b. மத்திய அரசு.

c. மாநகராட்சி.

d. தனிநபர்.

Answer: d. தனிநபர்.


[15] சாலைப் பாதுகாப்பு சட்டங்களை இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு எதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது?

a. நீதித்துறைச் சீராய்வு.

b. நீதித்துறை செயல்பாட்டு முறை.

c. பொது நல வழக்கு.

d. ஆட்கொணர்வு நீதிப்பேராணை.

Answer: c. பொது நல வழக்கு.


[16] சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்கள் தமக்கான நிவாரணம் கோரி நீதிமன்றங்களை அணுக இயலாத நிலையில், அவர்களுக்காக 'பொது ஆர்வம் கொண்ட குடிமக்கள்' நீதிமன்றத்தை நாடும்போது அதனைப் பொது நல வழக்காகக் கருதலாம் என்று கூறியது எது?

a. இந்திய தண்டனைச் சட்டம்.

b. உச்ச நீதிமன்றம்.

c. சட்டப்பணிகள் ஆணையர் சட்டம்.

d. அரசமைப்பு.

Answer: b. உச்ச நீதிமன்றம்.


[17] பங்களிப்பு நீதி எனும் செயல்முறையின் ஒரு பகுதியாகக் கருதப்படுவது எது?

a. நீதித்துறைச் சீராய்வு.

b. பொது நல வழக்குகள்.

c. சட்டத்தின் ஆட்சி.

d. நிர்வாகச் சட்டம்.

Answer: b. பொது நல வழக்குகள்.


[18] Judicial Activism (நீதித்துறை செயல்பாட்டு முறை) என்ற சொல்லினை அமெரிக்காவில் 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் யார்?

a. ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர்.

b. நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர்.

c. நீதிபதி பி.என். பகவதி.

d. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

Answer: a. ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர்.


[19] பிளாக்ஸின் சட்ட அகராதி (Black's Law Dictionary), "Judicial Activism" என்பதை எவ்வாறு கூறுகிறது?

a. நீதித்துறை சுதந்திரம்.

b. நீதித்துறை தத்துவம்.

c. பொது நல வழக்கு.

d. நீதித்துறைச் சீராய்வு.

Answer: b. நீதித்துறை தத்துவம்.


[20] நீதிபதிகளை பழமைவாதத்திலிருந்து பிரித்து புதிய முற்போக்கான சமூக கொள்கைகளுக்கு ஆதரவாக ஊக்கப்படுத்துவது எதனுடைய தத்துவம்?

a. நீதித்துறை கட்டுப்பாடு (Judicial Restraint).

b. நீதித்துறை செயல்பாடு (Judicial Activism).

c. நீதித்துறைச் சீராய்வு.

d. சட்டத்தின் ஆட்சி.

Answer: b. நீதித்துறை செயல்பாடு (Judicial Activism).


[21] சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பதில் சமூகக் கண்ணோட்டத்தை ஆதரிக்கும் ஆரோக்கியமான போக்கு நீதித்துறையில் காணப்படுவது எதனோடு தொடர்புடையது?

a. சட்டத்தின் ஆட்சி.

b. நிர்வாகச் சட்டம்.

c. நீதித்துறை செயல்பாட்டு முறை.

d. அசல் நீதி அதிகார வரம்பு.

Answer: c. நீதித்துறை செயல்பாட்டு முறை.


[22] அரசமைப்பால் பொறுப்பளிக்கப்பட்டுள்ள நான்கு முனைகளின் கீழும் செயல்பட வேண்டியது அரசின் ஒவ்வொரு அங்கத்தின் பொறுப்பு என்பது நமது பண்டைய மாண்பாகும். இதுவே, சட்டத்தின் உச்சபட்ச ஆட்சியாகும் என்று கூறிய அமர்வு எந்த வழக்கில் இந்த தீர்ப்பை அளித்தது?

a. ஏ.கே. கோபாலன் எதிர் மதராஸ் மாநில அரசு.

b. மேனகா காந்தி எதிர் இந்திய அரசு.

c. கோயா கமாண்டோஸ் வழக்கு (சல்வாஜுடும்).

d. பொது நலனுக்கான சமூகம் எதிர் இந்திய அரசு.

Answer: c. கோயா கமாண்டோஸ் வழக்கு (சல்வாஜுடும்).


[23] அரசமைப்பு உறுப்பு 21-ஐ நீதித்துறை செயல்பாடு மூலம் விரிவாக்கம் செய்த வழக்குகளில் முதன்மையானது எது?

a. ஏ.கே. கோபாலன் எதிர் மதராஸ் மாநில அரசு.

b. மேனகா காந்தி எதிர் இந்திய அரசு.

c. பரமானந் கட்டாரா எதிர் இந்திய அரசு.

d. பகவான்தாஸ் எதிர் தில்லி மாநில அரசு.

Answer: b. மேனகா காந்தி எதிர் இந்திய அரசு.


[24] ஒரு மனிதனின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் ஒடுக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள செயல்முறைகள் அடிப்படையில் மட்டுமல்லாமல் பகுத்தறிவு மற்றும் நீதியின் அடிப்படையிலும் உச்ச நீதிமன்றம் நிராகரித்த வழக்கு எது?

a. மேனகா காந்தி எதிர் இந்திய அரசு.

b. ஏ.கே. கோபாலன் எதிர் மதராஸ் மாநில அரசு.

c. பகவான்தாஸ் எதிர் தில்லி மாநில அரசு.

d. பரமானந் கட்டாரா எதிர் இந்திய அரசு.

Answer: a. மேனகா காந்தி எதிர் இந்திய அரசு.


[25] ஆஸ்திரேலியா நாட்டில் உயர்நிலை நீதியமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a. உச்ச நீதிமன்றம்.

b. உயர் நீதிமன்றம்.

c. மத்திய நீதிமன்றம்.

d. மேயர் நீதிமன்றம்.

Answer: b. உயர் நீதிமன்றம்.


[26] மேலான சட்டம் மற்றும் மற்ற எல்லா சட்டங்களும் பொருந்தி வர வேண்டும் எனக் கருதப்படுவது எது?

a. நிர்வாகச் சட்டம்.

b. இந்திய தண்டனைச் சட்டம்.

c. அரசமைப்பு.

d. பொதுச் சட்டம்.

Answer: c. அரசமைப்பு.


[27] இந்தியாவில் "சட்டத்தின் ஆட்சி" என்ற ஆங்கிலக் கருத்தை அறிமுகப்படுத்தியது யார்?

a. பண்டைய இந்திய அரசர்கள்.

b. இடைக்கால முஸ்லீம் ஆட்சியாளர்கள்.

c. கிழக்கிந்திய கம்பெனி.

d. காலனி ஆட்சி.

Answer: d. காலனி ஆட்சி.


[28] சட்டத்தின் ஆட்சி யின் முதன்மையான சிறப்புகளில் சேராதது எது?

a. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

b. சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை.

c. சட்டத்திற்குக் கீழ் யாரும் இல்லை.

d. சட்டம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது.

Answer: c. சட்டத்திற்குக் கீழ் யாரும் இல்லை.


[29] பொதுசட்டத்தில் ஒரு பிரிவாகக் கருதப்படுவது எது?

a. அரசமைப்புச் சட்டம்.

b. இந்திய தண்டனைச் சட்டம்.

c. நிர்வாகச் சட்டம்.

d. குடிமையியல் சட்டம்.

Answer: c. நிர்வாகச் சட்டம்.


[30] நிர்வாகச் சட்டங்கள் வளர்ச்சி பெறுவதற்குச் சில காரணங்களில் முதன்மையானது எது?

a. நீதித்துறையில் காலதாமதம்.

b. அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் அதிகரித்தது.

c. சட்டங்கள் இயற்றுவதில் தாமதம்.

d. நிர்வாகச் சட்டங்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டது.

Answer: b. அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் அதிகரித்தது.


[31] நிர்வாகச் சட்டம் என்பது தொகுக்கப்பட்டவைகளா (Codified)?

a. ஆம்.

b. இல்லை.

c. அரசமைப்பில் பகுதி அளவில் தொகுக்கப்பட்டுள்ளது.

d. நாடாளுமன்றத்தின் முடிவைப் பொறுத்தது.

Answer: b. இல்லை.


[32] நிர்வாகச் சட்டம் எந்தச் சட்டத்திற்குக் கீழானது?

a. இந்திய தண்டனைச் சட்டம்.

b. குடிமையியல் சட்டம்.

c. அரசமைப்பு.

d. பொதுச் சட்டம்.

Answer: c. அரசமைப்பு.


[33] இந்திய தண்டனைச் சட்டம் என்பது இந்தியாவின் எந்த சட்டமாகும்?

a. குடிமையியல் சட்டம்.

b. குற்றவியல் சட்டம்.

c. நிர்வாகச் சட்டம்.

d. அரசமைப்புச் சட்டம்.

Answer: b. குற்றவியல் சட்டம்.


[34] இந்திய தண்டனைச் சட்டம் எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது?

a. 1834.

b. 1860.

c. 1862.

d. 1950.

Answer: b. 1860.


[35] இந்திய தண்டனைச் சட்டம் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?

a. 1834.

b. 1860.

c. 1862.

d. 1950.

Answer: c. 1862.


[36] இந்திய தண்டனைச் சட்டம் யார் மூலம் தயாரிக்கப்பட்டது?

a. வாரன் ஹேஸ்டிங்ஸ்.

b. கார்ன் வாலிஸ்.

c. தாமஸ் பாட்டிங்டன் மெக்காலே.

d. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

Answer: c. தாமஸ் பாட்டிங்டன் மெக்காலே.


[37] இந்திய தண்டனைச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டவர்கள் யார்?

a. அரசு ஊழியர்.

b. பொதுமக்கள்.

c. நீதிபதி.

d. இராணுவத்தினர் மற்றும் இதர படைகளின் வீரர்கள்.

Answer: d. இராணுவத்தினர் மற்றும் இதர படைகளின் வீரர்கள்.


[38] அரசாங்கத்தின் மூன்று உறுப்புகளில் ஒன்று எது?

a. அதிகாரவர்க்கம்.

b. அமைச்சரவை.

c. நீதித்துறை.

d. மக்கள்.

Answer: c. நீதித்துறை.


[39] கூட்டாட்சியில் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கிடையே எழும் அதிகார வரம்பு கருத்துவேறுபாடுகளுக்குத் தீர்வு காண்பது எது?

a. சட்டமன்றம்.

b. ஆட்சித்துறை.

c. நீதித்துறை.

d. குடியரசுத்தலைவர்.

Answer: c. நீதித்துறை.


[40] மன்னர் நீதித்துறையின் அதிகாரத்தில் உயர்நிலையில் இருந்த காலம் எது?

a. இடைக்காலம்.

b. நவீன காலம்.

c. பண்டைய இந்திய முடியாட்சிகள்.

d. வேதகாலம்.

Answer: c. பண்டைய இந்திய முடியாட்சிகள்.


[41] பிப்ரவரி 2019-இல் கைகலப்பில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களுக்கு பிணையாக 100 திருக்குறள்களை ஒப்புவிக்க நிபந்தனை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம் எது?

a. சென்னை உயர் நீதிமன்றம்.

b. மதுரை உயர் நீதிமன்ற கிளை.

c. மேட்டுபாளையம் நீதிமன்றம்.

d. உச்ச நீதிமன்றம்.

Answer: c. மேட்டுபாளையம் நீதிமன்றம்.


[42] திருக்குறளை ஆழமாகக் கற்க வழிவகுத்து, பள்ளிப் பாடத்திட்டத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களில் 108 அதிகாரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் எது?

a. சென்னை உயர் நீதிமன்றம்.

b. மதுரை உயர் நீதிமன்ற கிளை.

c. உச்ச நீதிமன்றம்.

d. மெட்டுபாளையம் நீதிமன்றம்.

Answer: b. மதுரை உயர் நீதிமன்ற கிளை.


[43] உலகின் 60-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட பண்டைய தமிழ் இலக்கியம் எது?

a. சிலப்பதிகாரம்.

b. மணிமேகலை.

c. திருக்குறள்.

d. தொல்காப்பியம்.

Answer: c. திருக்குறள்.


[44] இடைக்கால இந்தியாவில் மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

a. திவான்-இ-குவாசா.

b. திவான்-இ-மசலிம் (திவான்-அல்-மசாலிம்).

c. திவான்-இ-ரிசாலட்.

d. சத்ரே ஜகான் நீதிமன்றம்.

Answer: b. திவான்-இ-மசலிம் (திவான்-அல்-மசாலிம்).


[45] இடைக்கால இந்தியாவில் குடிமையியல் வழக்குக்கு உச்ச நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

a. திவான்-அல்-மசாலிம்.

b. திவான்-இ-ரிசாலட்.

c. சத்ரே ஜகான் நீதிமன்றம்.

d. திவான்-இ-ரியாசட்.

Answer: b. திவான்-இ-ரிசாலட்.


[46] இடைக்கால இந்தியாவில் மாநிலத் தலைமை நீதிபதி நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

a. திவான்-இ-குவாசா.

b. திவான்-இ-மசலிம்.

c. திவான்-இ-ரிசாலட்.

d. சத்ரே ஜகான் நீதிமன்றம்.

Answer: d. சத்ரே ஜகான் நீதிமன்றம்.


[47] இடைக்கால இந்தியாவில் பெரும் தேச துரோக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

a. திவான்-அல்-மசாலிம்.

b. திவான்-இ-ரிசாலட்.

c. சத்ரே ஜகான் நீதிமன்றம்.

d. திவான்-இ-ரியாசத்.

Answer: d. திவான்-இ-ரியாசத்.


[48] ஆங்கிலேயச் சட்டத்தை பம்பாயில் அறிமுகப்படுத்திய பிரகடனம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

a. 1668.

b. 1672.

c. 1678.

d. 1726.

Answer: b. 1672.


[49] எந்தச் சாசனச் சட்டம் வணிகர்கள் கடலில் மேற்கொள்ளும் குற்றங்களை விசாரிக்க ஒரு கடற்படை நீதிமன்றம் நிறுவ வழிவகுத்தது?

a. 1661.

b. 1668.

c. 1683.

d. 1687.

Answer: c. 1683.


[50] பம்பாயில் நீதிமன்றம் கலைக்கப்படக் காரணமான முகலாய கடற்படை தளபதியின் படையெடுப்பு எந்த ஆண்டு நடந்தது?

a. 1678.

b. 1683.

c. 1690.

d. 1718.

Answer: c. 1690.



POLITY MCQ FOR TNPSC | TRB | 4551-4600 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement