12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 32

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 32

கேள்வி 32 : இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?


விடை :

புரதச் சேர்க்கையின் படிநிலைகள்

புரதச் சேர்க்கை நிகழ்வு இரண்டு முக்கிய படிநிலைகளைக் கொண்டுள்ளது:

1. படியெடுத்தல் (Transcription):

DNA-வின் ஒரு இழையில் உள்ள மரபணுச் செய்திகள் RNA பாலிமெரேஸ் நொதியின் உதவியுடன் RNA இழைக்கு நகலெடுக்கப்படும் செயல்முறையே படியெடுத்தல் ஆகும்.

2. மொழிபெயர்த்தல் (Translation):

  • படியெடுக்கப்பட்ட mRNA (தூது RNA) மூலமாகப் புரதம் தயாரிக்கப்படுகிறது.
  • தூது RNA (mRNA) என்பது, எந்தப் புரதம் உருவாக்கப்பட வேண்டும் என்ற தகவல்களைக் குறியீடாகச் செல்லுக்கு எடுத்துச் செல்லும் RNA ஆகும்.
  • மரபணுக்கள் படியெடுக்கப்படுவதற்கு, இரட்டை திருகுச்சுழல் அமைப்பைக் கொண்ட DNA இழைகள் தற்காலிகமாகப் பிரிய வேண்டும்.
  • பின்னர், DNA பாலிமெரேஸ் உதவியுடன், DNA-வின் ஒரு வார்ப்புரு இழையிலிருந்து RNA உற்பத்தி செய்யப்படுகிறது.
  • இறுதியில் உருவாகும் RNA மூலக்கூறில் உள்ள நியுக்ளியோடைடுகள், அது உருவான DNA வார்ப்புரு இழையின் அமைப்பிற்கு நிகரான அமைப்பைக் கொண்டிருக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement