12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 33
கேள்வி 33 : ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர், கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் கந்தகத்தை ஏன் பயன்படுத்தினர்? அவர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனை பயன்படுத்தினால் அதே முடிவுகளைப் பெறமுடியுமா?
விடை :
சோதனையின் அடிப்படை:
- நியூக்ளிக் அமிலங்களில் பாஸ்பரஸ் உள்ளது, ஆனால் புரதங்களில் இல்லை.
- புரதங்களில் கந்தகம் உள்ளது, ஆனால் நியூக்ளிக் அமிலங்களில் இல்லை.
சோதனை வடிவமைப்பு:
- இந்த அடிப்படை வேறுபாட்டைப் பயன்படுத்தி, கதிரியக்க ஐசோடோப்புகளான கந்தகத்தின் 35S மற்றும் பாஸ்பரஸின் 32P ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆய்வுகள் வடிவமைக்கப்பட்டன.
கார்பன் மற்றும் நைட்ரஜனை பயன்படுத்தாததற்கான காரணம்:
- கார்பன் மற்றும் நைட்ரஜனைப் பயன்படுத்தினால், அதே முடிவுகளைப் பெற முடியாது. ஏனென்றால்,
- கார்பன் ஒரு கரிம மூலக்கூறாக எல்லா செல்களிலும் உள்ளது.
- நைட்ரஜன் செல் சவ்வு, புரதம் மற்றும் DNA ஆகியவற்றின் அமைப்புக்கூறாக உள்ளது.


0 Comments