12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 34
கேள்வி 34 : நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி.
விடை :
- யூகேரியோட் DNA இரட்டைச் சுருளின் நீளம் 2.2 மீ.
- அடுத்தடுத்த கார இணைகளுக்கிடையேயான தூரம் 0.34 nm.
- நியூக்ளியோசோம் மற்றும் குரோமேட்டின் அமைப்பு:
- கோர்ன்பெர்க் முன்மொழிந்த நியூக்ளியோசோம் மாதிரிப்படி, குரோமேட்டின் என்பது நியூக்ளியோசோம்களால் ஆனது.
- நியூக்ளியோசோம் என்பது நேர்மின் தன்மை கொண்ட H2A, H2B, H3, H4 ஆகிய நான்கு ஹிஸ்டோன் புரதங்களின் தலா இரண்டு மூலக்கூறுகள் கொண்ட 'ஹிஸ்டோன் எண்மத்தைச்' சுற்றி, எதிர்மின் தன்மை கொண்ட சுமார் 200 கார இணைகள் கொண்ட DNA உறைபோன்று சுருண்ட அமைப்பாகும்.
- அடுத்தடுத்த நியூக்ளியோசோம்கள் இணைப்பு DNA-க்களால் இணைக்கப்படுகின்றன.
- குரோமேட்டின் சுருக்கம்:
- H1 ஹிஸ்டோன் இல்லாத நிலையில், குரோமேட்டின் 'மணிகோர்த்த மாலையைப்' போல் இருக்கும்.
- H1 புரதம் அடுத்த நியூக்ளியோசோமின் H1 உடன் வினைபுரிந்து இழையை மேலும் சுருக்கி, நிலைப்புத்தன்மையை அளிக்கிறது.
- இடைநிலை உட்கருவின் குரோமேட்டின் இழை மற்றும் குரோமோசோம் 200 nm முதல் 300 nm விட்டம் கொண்டது.
- இது 'செயலற்ற குரோமேட்டின்' எனப்படும்.
- இதில், DNA வரிச்சுருள் அமைப்புடன் இறுக்கமாகப் பொதிக்கப்பட்டுள்ளது.


0 Comments