12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21

கேள்வி 21 : திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி - வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.


விடை :

  • திடீர் மாற்றம் நிகழாமை - திடீர் மாற்றத்தின் காரணமாக புதிய அல்லீல் உருவாக்கம், மரபணு இரட்டிப்பாதல் அல்லது மரபணு நீக்கம் ஆகிய எதுவும் நிகழ்வதில்லை.
  • சீரற்ற இனச்சேர்க்கை - ஒவ்வொரு உயிரினமும் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கான சம வாய்ப்பைப் பெறுகின்றன. குறிப்பிட்ட மரபணு ஆக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல், இவற்றுக்கிடையேயான இனச்சேர்க்கை சீரற்ற முறையில் நிகழ்கிறது.
  • மரபணு ஓட்டம் இல்லாமை - இனக்கூட்டத்திலிருந்து தனிப்பட்ட உயிரினங்களோ அல்லது அவற்றின் இனச்செல்களோ உள்செல்கை (உள்ளேற்றம்) அல்லது வெளிச்சேர்க்கை (வெளியேற்றம்) எதிலும் பங்கேற்பது இல்லை.
  • மிகப்பெரிய இனத்தொகை - இனக்கூட்டத்தின் அளவு எல்லையற்றதாக இருத்தல் வேண்டும்.
  • இயற்கைத் தேர்வு இல்லாமை - அனைத்து அல்லீல்களும், வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் சம தகுதியுடையவை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement