Friday, September 23, 2022

TNPSC G.K - 92 | இனப்பெருக்க மண்டலம்

  1. இனப்பெருக்க மண்டலம் எதனால் கட்டுப்படுத்தப்படுகிறது? : நரம்பு வேதி ஒருங்கிணைப்பு .

  2. உலகளவில் சுமார் எத்தனை பெண்கள் கர்ப்பம் , குழந்தை பிறப்பு காரணங்களால் இறக்கின்றனர்? : 800 .

  3. இந்தியாவில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு வீதம் : 44/100 .

  4. குடும்ப நலத்திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடுகளில் முதன்மையான நாடு எது? : இந்தியா.

  5. குடும்ப நலத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1951.

  6. பெண் கருக்கொலை, சிசுக்கொலையை தடுக்க சட்டம் இயற்றப்பட்டஆண்டு ? 1994.

  7. கருத்தடை முறையின் நோக்கம் : கரு உருவாதல் மற்றும் கரு பதிதலை தடுத்தல் .

  8. அண்டகத்திலிருந்து வெளியேறிய அண்ட செல் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும்? : 2 நாட்கள்.

  9. பெண்ணின் இனப்பாதையில் விந்து செல் எத்தனை மணிநேரம் உயிருடன் இருக்கும்? : 72 .

  10. பிரசவத்திற்குப் பின் எந்த வாரத்தில் மாதவிடாய் சுழற்சி தொடங்கும்? : 6-8 வாரங்கள் .

  11. பாலூட்டும் தாயின் ரத்தத்தில் எந்த ஹார்மோன் அதிகமாக காணப்படும்? : புரோலாக்டின்.

  12. கருத்தடை உறைகள் எதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது? : AIDS போன்ற பால்வினை நோய்கள் .

  13. ஸ்டீராய்டு அல்லாத கருத்தடை மாத்திரை : சாஹெலி.

  14. சாஹெலி மாத்திரையில் காணப்படுவது : சென்ட்குரோமன்.

  15. உள் கருப்பை சாதனங்கள் எத்தனை சதவீதம் வெற்றியளிக்கும்? : 95 - 99% .

  16. தாமிரம் வெளியிடும் உள் கருப்பை சாதனத்தின் பணி : விந்து இயக்கத்தை தடை செய்கிறது.

  17. உள் கருப்பை சாதனங்கள் எத்தனை ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்? 05 - 10 ஆண்டுகள்.

  18. மருந்தில்லா உள் கருப்பை சாதனங்கள் எதனால் ஆனது? : நெகிழி அல்லது துருப்பிடிக்காத இரும்பு.

  19. ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக்கட்டுப்பாட்டு முறை? : வாசெக்டமி அல்லது விந்துக்குழல் தடை அல்லது விந்து நாளத்துண்டிப்பு.

  20. பெண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக்கட்டுப்பாட்டு முறை? கருக்குழல் தடை அல்லது டியூபெக்டமி அல்லது அண்ட நாளத்துண்டிப்பு .

  21. மருத்துவரீதியிலான கருக்கலைப்பு கருவளர்ச்சியின் எத்தனையாவது வாரம் வரை செய்யப்படும்? : 12 வாரம் அல்லது முதல் மும்மாதம்.

  22. மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டமாக்கப்பட்ட ஆண்டு? : 1971.

  23. WHO 2017 அறிக்கையின்படி உலகளவில் ஒவ்வொரு நாளும் பால்வினைத் தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை? : 1 மில்லியன் மக்களுக்கு மேல்.

  24. உலகளவில் HIV தொற்று அதிகம் கொண்ட 3 வது நாடு? இந்தியா.

  25. கொனோரியா நோய்க்காரணி : : நிஸ்ஸெரியா கொனேரியா.

  26. கிரந்தி அல்லது மேகப்புண் நோய்க்காரணி : டிரிபோனிமா பாலிடம்.

  27. கிளாமிடியாசிஸ் நோய்க்காரணி : கிளாமிடியா ட்ராகோமோடிஸ்.

  28. லிம்போகிரானுலோமா வெனேரியம் நோய்க்காரணி : கிளாமிடியா ட்ராகோமோடிஸ்.

  29. பிறப்புறுப்பு அக்கி நோய்க்காரணி : ஹெர்பஸ் சிம்பொலக்ஸ்.

  30. பிறப்புறுப்பு மருக்கள் நோய்க்காரணி : மனித பாப்பிலோமா .

  31. கல்லீரல் அழற்சி நோய்க்காரணி : ஹெபாடிடிஸ் B .

  32. AIDS நோய்க்காரணி : மனித தடைகாப்பு குறைப்பு வரஸ் .

  33. கேண்டிடியாசிஸ் நோய்க்காரணி : கேண்டிடா அல்பிகன்ஸ்.

  34. டிரைகோமேனியாசிஸ் நோய்க்காரணி : டிரைகோமானாஸ் வஜினாலிஸ் .

  35. கருப்பை இல்லாத பெண்கள் எவ்வாறு அழைக்கப்படுவர் ? மேயர் ரொகிடான்ஸ்கி நோய்க்குறைபாடு .

  36. செயற்கை முறை கருத்தரித்தலில் (IVF) கருமுட்டை எத்தனை செல் நிலையில் கருப்பையினுள் செலுத்தப்படும்? 8 .

  37. அண்ட சைட்டோபிளாசத்தில் விந்து செலுத்தும் முறையின் கருவுறுதல் வீதம் எவ்வளவு? : 75 - 80%.

  38. ஒப்பந்த முறையில் கருவை சுமக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? : வாடகைத் தாய்மை .

  39. ஏஜீஸ்பெர்மியா ( ஆண்கள் மலட்டுத்தன்மை) மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் காணப்படுகிறது? : 1% .

  40. பனிக்குடத் துளைப்பு (ஆம்னியோசென்டெசிஸ்) கருவுற்ற பெண்ணின் எத்தனையாவது வாரத்தில் செய்யப்படுகிறது? : 15 - 20 வாரம் .

  41. வளர்கருவின் இதயத்துடிப்பை கண்டறிய பயன்படுவது? : டாப்ளர் கருவி.

  42. இனப்பெருக்க உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின் : E வைட்டமின்.

  43. இனப்பெருக்க ஹார்மோன்களை கண்டறிந்தவர்? : அடால்ப் பியூடெனன்ட்.

  44. உலக மக்கள் தொகை தினம் எது? : டிசம்பர் 1.

  45. பொதுவான சர்வதேச நோய்கள் எது? : கிரந்தி மற்றும் வெட்டை நோய்.


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts