Ad Code

Responsive Advertisement

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2022

ஆகஸ்ட் 1 : சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா 26-ந் தேதி ஓய்வு பெறுகிறார். மூத்த நீதிபதி யு.யு.லலித், அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார்.


ஆகஸ்டு 1 : சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.


ஆகஸ்டு 1 : வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆதார் இல்லாதவர்கள் இதர ஆவணங்களை இணைக்க தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.


ஆகஸ்டு 1 : 5 கோடியே 83 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடைசி நாளில் மட்டும் 72 லட்சம் கணக்குகள் சமர்பிக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்டு 1 : 7 நாட்களாக நடந்த 5-ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்தது. மொத்தம் ரூ.1,50,173 கோடிக்கு விற்கப்பட்டுள்ள அலைக்கற்றைகளில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக ஒதுக்கீடுகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


ஆகஸ்டு 1 : பளுதூக்குதலில் இந்திய இளம் வீரர் அசிந்தா தங்கம் வென்றார். லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தனர்.


ஆகஸ்டு 2 : டேபிள் டென்னிஸ் மற்றும் லான் பவுல்சில் இந்தியா தங்கம் வென்று பிரமாதப்படுத்தியுள்ளது.


ஆகஸ்டு 2 : பரந்தூரில் புதிய விமானநிலையம் ரூ.20 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஆகஸ்டு 2 : மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளிடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாலத்தீவில் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.800 கோடி கடனுதவி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.


ஆகஸ்டு 2 : ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய ‘டிரோன்’ தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்-ஜவா ஹிரி கொல்லப்பட்டார்.


ஆகஸ்டு 2 : ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்டு 2 : பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.


ஆகஸ்டு 3 : உரிய காலத்தில் பொருளாதார உதவி வழங்கி, இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்த இந்தியாவுக்கு நன்றி என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உருக்கமாக கூறினார்.


ஆகஸ்டு 3 : அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெபோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவான் மீது சீனா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.


ஆகஸ்டு 3 : பளுதூக்குதலில் இந்திய வீரர் லவ்பிரீத் சிங், ஸ்குவாஷ் போட்டியில் சவுரவ் கோஷல் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.


ஆகஸ்டு 4 : உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தேஜஸ்வின் வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.


ஆகஸ்டு 3 : ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


ஆகஸ்டு 4 : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது.


ஆகஸ்டு 4 : சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெறுகிறார். மூத்த நீதிபதி யு.யு.லலித், அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார்.


ஆகஸ்டு 4 : லேசரால் வழிநடத்தப்படும் பீரங்கி தகர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.


ஆகஸ்டு 4 : மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


ஆகஸ்டு 4 : நாடு முழுவதும் 1,472 ஐ.ஏ.எஸ்., 864 ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற தகவலை மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் வெளியிட்டுள்ளார்.


ஆகஸ்டு 4 : 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிசீலிக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்டு 5 : மல்யுத்தத்தில் இந்தியா ஒரே நாளில் 2 தங்கம் வென்று அசத்தியது.


ஆகஸ்டு 5 : என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.


ஆகஸ்டு 5 : நாட்டில் 7 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது.


ஆகஸ்டு 5 : தேசிய புலிகள் ஆணையத்துடன் இந்தியன் ஆயில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நமீபியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து 15 முதல் 20 சிறுத்தைகள் இந்தியா கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட இருக்கிறது.


ஆகஸ்டு 5 : மல்யுத்தத்தில் இந்தியா ஒரே நாளில் 2 தங்கம் வென்று அசத்தியது.


ஆகஸ்டு 5 : அமெரிக்க சபாநாயகர் சென்றதால் பதற்றமான சூழலில் தைவானைச் சுற்றிலும் சீனா போர்ப்பயிற்சியில் இறங்கியது. ஏவுகணைகளையும் ஏவி சோதித்தது.


ஆகஸ்டு 5 : உலக ஜூனியர் தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ருபல் சவுத்ரி வெண்கலம் வென்றார்.


ஆகஸ்டு 6 : உலக ஜூனியர் தடகள போட்டியில் தமிழக வீரர் செல்வபிரபு வெள்ளி வென்றார்.


ஆகஸ்டு 6 : அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவரின் உடல் கிடைக்கவில்லை என்று தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.


ஆகஸ்டு 6 : இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் ஓராண்டு நீடிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.


ஆகஸ்டு 6 : அமெரிக்க நாட்டில் உள்ள 9-வது சர்கியூட் அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் ரூபாலி எச்.தேசாய் நியமிக்கப்பட்டார்.


ஆகஸ்டு 6 : மல்யுத்தத்தில் ரவிகுமார், வினேஷ் போகத், நவீன் ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.


ஆகஸ்டு 6 : மல்யுத்தத்தில் ரவிகுமார், வினேஷ் போகத், நவீன் ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.


ஆகஸ்டு 6 : துணை ஜனாதிபதி தேர்தலில் 93 சதவீத வாக்குகள் பதிவாகின. பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் அபார வெற்றி பெற்றார்.


ஆகஸ்டு 6 : இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி மேரிமில்பென் கலந்து கொள்கிறார்.


ஆகஸ்ட் 7 : நிதி ஆயோக் 2015, சனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். கடைசியாக, 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் நேரடியாக நடந்தது. கொரோனா காரணமாக, 2020-ம் ஆண்டு கூட்டம் நடக்கவில்லை. 2021-ம் ஆண்டு, காணொலி காட்சி மூலம் கூட்டம் நடந்தது. 23 முதல்-மந்திரிகள் இந்நிலையில், 2019-ம் ஆண்டுக்கு பிறகு நேரடி கூட்டமாக நிதி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் 7-வது கூட்டம் (07.08.2022) நடந்தது. ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் இக்கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார். முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), நவீன் பட்நாயக் (ஒடிசா), யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), சிவராஜ்சிங் சவுகான் (மத்தியபிரதேசம்), பினராயி விஜயன் (கேரளா), மனோகர்லால் கட்டார் (அரியானா), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கர்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா) ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்) உள்பட 23 முதல்-மந்திரிகளும், 3 துணைநிலை கவர்னர்களும் கலந்து கொண்டனர்.


ஆகஸ்ட் 12 : சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர், என்.வி.ரமணா ஆவார். இவரது பதவிக்காலம் வரும் 26-ந் தேதி முடிகிறது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியான யு.யு.லலித்தை நியமனம் செய்ய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். புதிய தலைமை நீதிபதி நியமனம் இதை மத்திய அரசு ஏற்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரைத்தது. அதன்பேரில் சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதில், இந்திய அரசியல் சாசனம் பிரிவு 124 உட்பிரிவு (2) வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, ஆகஸ்டு 27-ந் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உதய் உமேஷ் லலித்தை இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறது.


ஆகஸ்டு 7 : பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் வானிலையை கணிப்பதில் சிக்கல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா கூறியுள்ளார்.


ஆகஸ்டு 7 : அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆகஸ்டு 7 : ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் செயற்கை கோள்களை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சியில் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.


ஆகஸ்டு 7 : சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார். தமிழக வீரர் பிரணவ், இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.


ஆகஸ்டு 8 : டியூசன்’ எடுப்பவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடையாது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.


ஆகஸ்டு 8 : ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது.


ஆகஸ்டு 8 : நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு இடையே மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.


ஆகஸ்டு 8 : கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோவிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


ஆகஸ்டு 9 : கோலாகல கலை நிகழ்ச்சியுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் வழங்கினார்.


ஆகஸ்டு 9 : பால்டிக் கடலுக்கு அடியில் 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்கள் புதைந்து கிடப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


ஆகஸ்டு 10 : போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


ஆகஸ்டு 10 : 2-ம் தலைமுறை நவீன எத்தனால் ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ரூ.50 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.


ஆகஸ்டு 10 : கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியோருக்கு பூஸ்டர் டோசாக ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


ஆகஸ்டு 10 : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற 2 இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


ஆகஸ்டு 11 : சிவகளை அகழாய்வில் முதன்முறையாக தங்கப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


ஆகஸ்டு 11 : குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.


ஆகஸ்டு 11 : இலவச திட்டம் அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.


ஆகஸ்டு 11 : நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றார்.


ஆகஸ்டு 12 : தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பக மாக நெல்லை மாவட்டத்தின் அகத்தியமலை பகுதி அமைகிறது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


ஆகஸ்டு 12 : ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


ஆகஸ்டு 12 : போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.


ஆகஸ்டு 12 : ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு என்பதன் அடிப்படையில் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.


ஆகஸ்டு 13 : வீட்டு வேலைக்கு வைத்திருக்கும் ஆர்டர்லிகளை போலீஸ் பணிகளுக்கு உடனடியாக திருப்பி அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


ஆகஸ்டு 13 : கோவில் சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாக கருதக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு விளக்கம் அளித்து உத்தரவிட்டுள்ளது.


ஆகஸ்டு 13 : இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சீன உளவு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.


ஆகஸ்டு 7 : காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்தது. ஒரே நாளில் 4 தங்கம் உள்பட 9 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். தமிழகத்தின் சரத்கமல்-சத்யன் ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.


ஆகஸ்டு 8 : காமன்வெல்த் விளையாட்டில் கடைசி நாளில் இந்தியாவுக்கு 4 தங்கப்பதக்கம் கிடைத்தது. அத்துடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களுடன் 4-வது இடத்தை பிடித்தது.


ஆகஸ்டு 10 : காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றார்.


ஆகஸ்டு 11 : ஜிம்பாப்வே தொடருக்கான போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ஆகஸ்டு 12 : உலக கோப்பை கால்பந்து போட்டி ஒருநாள் முன்னதாக நவம்பர் 20-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணியுடன் மோதுகிறது.


ஆகஸ்டு 13 : ஜிம்பாப்வே தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக லட்சுமண் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


ஆகஸ்டு 13 : 20 ஓவர் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்தி பிராவோ சாதனை படைத்தார்.


ஆகஸ்டு 13 : உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை பி.வி. சிந்து திடீரென விலகி உள்ளார்.


ஆகஸ்டு 14 : தமிழ் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியது.


ஆகஸ்டு 14 : மன்னார்குடி கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


ஆகஸ்டு 14 : இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இது வெறுப்பை தூண்டும் முயற்சி என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.


ஆகஸ்டு 15 : 75-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


ஆகஸ்டு 15 : சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாற 5 உறுதிகளை எடுத்துக்கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


ஆகஸ்டு 16 : தமிழகத்தில் 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் 200-க்கு 200 ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை 133 மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர்.


ஆகஸ்டு 16 : 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


ஆகஸ்டு 16 : நாட்டிலேயே மிக அதிக நீளமான (3½ கி.மீ) சரக்கு ரெயில் சோதனை ஓட்டம் 27 ஆயிரம் டன் நிலக்கரியுடன் வெற்றிகரமாக நடந்தது.


ஆகஸ்டு 17 : துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதை உரிமையாக கோர முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


ஆகஸ்டு 17 : தமிழகத்தில் 4,300 மருத்துவ காலிப்பணியிடங்கள் அடுத்த மாதம் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


ஆகஸ்டு 17 : இமயமலையின் சியாச்சின் பனிப்பகுதியில் 38 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்திய ராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்டு 17 : காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் நடந்து வந்த அமெரிக்க போர்க்கப்பலின் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.


ஆகஸ்டு 18 : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராட்டக்காரர்களை குருவிகளை சுடுவது போல சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்துள்ள விசாரணை அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆகஸ்டு 18 : தமிழகத்தில் 10 ஆயிரம் ஆசிரியர்களை படிப்படியாக நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


ஆகஸ்டு 18 : வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை சேர்க்க தமிழகத்தில் 38 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்தார்


ஆகஸ்டு 18 : ஆர்டர்லி முறையை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.


ஆகஸ்டு 19 : பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது எனக் கூறி அது தொடர்பான மசோதா குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமை செய லாளருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.


ஆகஸ்டு 19 : கொரோனா வைரஸ் தொற்றில் இருந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. இதனால் அந்தத் தொற்று முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஆகஸ்டு 19 : ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


ஆகஸ்டு 20 : 2008-ம் ஆண்டை போல மும்பையை தகர்க்கப்போவதாக போலீசாருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


ஆகஸ்டு 20 : நாடு முழுவதும் கோர்ட்டுகளில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்து மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ கவலை தெரிவித்து உள்ளார்.


ஆகஸ்டு 20 : அப்பல்லோ சிகிச்சையில் தவறு இல்லை என சுட்டிக்காட்டி உள்ள எய்ம்ஸ் மருத்துவக்குழு ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


ஆகஸ்டு 20 : தமிழ்மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம் என அறிவித்த டி.என்.பி.எஸ்.சி. போல, தற்போது ஆசிரியர் தேர்வு வாரியமும் அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஆகஸ்டு 15 : கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டத்தை வென்றார்.


ஆகஸ்டு 16 : விதிகளை மீறி செயல்பட்டதால் இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு ‘பிபா’ திடீரென தடை விதித்துள்ளது. இதனால் பெண்கள் ஜூனியர் உலக கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ஆகஸ்டு 16 : உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த (50 பந்துகளில்) அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


ஆகஸ்டு 17 : அடுத்த 4 ஆண்டுகளில் 141 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. பாகிஸ்தான் அணியுடன் மோதல் இல்லை.


ஆகஸ்டு 19 : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.


ஆகஸ்டு 20 : உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை அன்திம் தங்கம் வென்று வரலாறு படைத்தார்.


ஆகஸ்டு 15 : மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகளில் மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மியான்மர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.


ஆகஸ்டு 15 : அமெரிக்க எம்.பி.க்கள் வருகையால் கோபம் அடைந்த சீனா தைவானை சுற்றி மீண்டும் போர்ப்பயிற்சியை தொடங்கியது.


ஆகஸ்டு 16 : சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. ஒரு வாரம் அங்கு நிறுத்தப்படும் இந்த கப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் தமிழக கடலோர பகுதியில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


ஆகஸ்டு 20 : இந்தியாவுடன் நிரந்தர அமைதியை பாகிஸ்தான் விரும்புவதாகவும், காஷ்மீர் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.


ஆகஸ்டு 20 : உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6,194 கோடி ராணுவ உதவிகளை வழங்கியது.


ஆகஸ்டு 22 : திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


ஆகஸ்டு 22 : டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களுக்கு சேவை கட்டணம் விதிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு உறுதிபட கூறியுள்ளது.


ஆகஸ்டு 22 : சென்னையில் நடந்த பழமையான சைக்கிள் கண்காட்சியில் 2-ம் உலகப்போரில் பயன்படுத்திய சைக்கிள் இடம்பெற்றது.


ஆகஸ்டு 22 : தமிழகத்தில் நடைபெற்ற 34-வது மெகா தடுப்பூசி முகாமில் 13.77 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


ஆகஸ்டு 22 : தமிழாய்வுக்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுடன் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


ஆகஸ்டு 22 : பிபா விதித்த தடையை நீக்குவதற்கு வசதியாக இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாக கமிட்டியை கலைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.


ஆகஸ்டு 23 : தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கியமான கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் பட்டியலாக தயாரித்து அனுப்ப அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.


ஆகஸ்டு 23 : மாணவர்கள் கையெழுத்தை தமிழில் எழுத வேண்டும் என்று பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஆகஸ்டு 23 : 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் காலணி உற்பத்தி பூங்கா அமைக்கும் பணி நடைபெறுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


ஆகஸ்டு 23 : மின்சாரத்தை மிச்சப்படுத்த வாரத்தில் 5 நாள் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என வங்காளதேச அரசு அறிவித்துள்ளது.


ஆகஸ்டு 24 : மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய சட்ட உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


ஆகஸ்டு 24 : சாக்லேட், ஷாம்பூ உள்பட 300 பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.


ஆகஸ்டு 24 : வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யும்போது அந்த வாகனத்தின் உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா? என பார்க்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சென்னை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


ஆகஸ்டு 24 : மத்திய அரசு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு ‘ஒருமுறை பதிவு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி அடிப்படை தகவல்களை திரும்ப திரும்ப நிரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்டு 25 : சி.பி.ஐ. தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாகவும், 275 வழக்குகள் 20 ஆண்டுகளாக தேங்கி உள்ளதாகவும் மத்திய கண்காணிப்பு ஆணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஆகஸ்டு 25 : கோதுமை மாவு விலை உயர்வை கட்டுப்படுத்த அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பது என்று மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


ஆகஸ்டு 26 : இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


ஆகஸ்டு 26 : விரிவான விசாரணை தேவைப்படுவதால் இலவசங்கள் தொடர்பான வழக்கை 3 நீதிபதிகளை கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


ஆகஸ்டு 26 : 18 வயதை தாண்டியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்கள் இலவசம் என்ற திட்டத்தில் கடந்த 42 நாட்களில் 9½ கோடி பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


ஆகஸ்டு 26 : இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது.


ஆகஸ்டு 26 : எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்தில் டிரோன்கள் இணைக்கப்பட்டு உள்ளன.


ஆகஸ்டு 27 : சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக லலித் பதவி ஏற்றார்.
ஆகஸ்டு 27 : குஜராத்தில் ஒரே நேரத்தில் 7,500 பெண்கள் ராட்டையில் நூல் நூற்று சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.


ஆகஸ்டு 22 : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.


ஆகஸ்டு 22 : உலக செஸ் சாம்பியன் கார்ல்செனை பிரக்ஞானந்தா 3-வது முறையாக வீழ்த்தினார்.


ஆகஸ்டு 23 : அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து சானியா மிர்சா விலகியுள்ளார். அவர் தனது ஓய்வு முடிவையும் மாற்றி இருக்கிறார்.


ஆகஸ்டு 25 : உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் சக வீரர் லக்ஷயா சென்னை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெளியேறினார்.


ஆகஸ்டு 25 : கொரானா தடுப்பூசி போடாததால் அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகினார்.


ஆகஸ்டு 26 : இந்திய கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கப்பட்டது. ஜூனியர் உலக கோப்பை போட்டியை நடத்துவதில் சிக்கல் நீங்கியது.


ஆகஸ்டு 27 : உலக ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை லின்தோய் சனம்பாம் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.


ஆகஸ்டு 27 : டைமண்ட் லீக் தடகள போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.


ஆகஸ்டு 27 : உலக பேட்மிண்டனில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஷெட்டி ஜோடிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.


ஆகஸ்டு 28 : காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடக்கிறது.


ஆகஸ்டு 28 : உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 கோடியை கடந்தது.


ஆகஸ்டு 28 : அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணி 40 சதவீதம் முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட உள்ளது.


ஆகஸ்டு 28 : தைவான்-சீனா இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் தைவான் ஜலசந்தி வழியாக அமெரிக்க போர்க்கப்பல்கள் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


ஆகஸ்டு 28 : ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை விமர்சிக்கும் மேற்கத்திய நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார்.


ஆகஸ்டு 29 : முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையில் சசிகலா, சி.விஜயபாஸ்கர் மீது அரசு விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


ஆகஸ்டு 29 : தற்கொலைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.


ஆகஸ்டு 29 : இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர உறுதி சான்றிதழை பெற்றுள்ளன.


ஆகஸ்டு 29 : நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் முறை கொண்டு வரப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.


ஆகஸ்டு 30 : ‘துணை வேந்தர்களை நியமிப்பது மாநில அரசின் உரிமை’ என துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


ஆகஸ்டு 30 : கடந்த ஆண்டு, இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. குடும்ப தலைவிகள் தற்கொலையிலும் முதலிடம் பெற்றுள்ளது.


ஆகஸ்டு 30 : கடந்த ஆண்டில் சராசரியாக நாள்தோறும் 8 குழந்தைகள் கடத்தப்பட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.


ஆகஸ்டு 30 : ரெயிலில் முதல் வகுப்பு அல்லது குளிர்சாதன பெட்டி முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்தாலும் இனி ஜி.எஸ்.டி. உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்டு 30 : புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.


ஆகஸ்டு 31 : சேலம் 8 வழிச்சாலை திட்டம் அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.


ஆகஸ்டு 31 : கடந்த ஆண்டில் நாள் தோறும் சராசரியாக 86 கற்பழிப்புகள் நடந்ததாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.


ஆகஸ்டு 31 : சென்னை விமான நிலையத்தில், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் அதிக மோப்ப சக்தியுடைய ‘பெல்ஜியம் மெலினோஸ்’ இனத்தைச் சேர்ந்த 2 மோப்ப நாய் குட்டிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் பயன்படுத்தப்பட உள்ளது.


ஆகஸ்டு 31 : பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்த சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவரான மிக்கைல் கோர்பசேவ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.


செப்டம்பர் 1 : கொரோனா பரவலால் சீனாவின் செங்டு நகரில் பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளது.


செப்டம்பர் 1 : தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை மதுரை ஐகோர்ட்டு நீக்கியது.


செப்டம்பர் 1 : கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 612 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டின் ஆகஸ்டு மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் அதிகம் ஆகும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement