Saturday, March 18, 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

மார்ச் 5 : சென்னை மாநகரில் நடப்பு ஆண்டில் 500 தனியார் பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.


மார்ச் 5 : தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்; வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் என்று கவர்னர் ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.


மார்ச் 5 : ஈரானில் மேலும் 100 பள்ளி மாணவி களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து அங்கு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


மார்ச் 5 : அருங்காட்சியகம் தமிழர்களின் பாரம்பரியத்தை பறை சாற்றும் அகழாய்வு பொருட்களுடன் கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.


மார்ச் 5 : தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் ஆஸ்பத்திரி களில் நோயாளிகள் குவிந்தனர்.


மார்ச் 5 : அரபிக்கடலில் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட 'பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது.


மார்ச் 6 : நாகாலாந்தில் ஆளும் கூட்டணிக்கு அனைத்து கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதால், அங்கு எதிர்க் கட்சியே இல்லாத அரசு அமைகிறது.


மார்ச் 6 : அரசு பஸ்கள் தனியார்மயம் ஆகாது என்றும், மாணவர்கள், பெண்களுக்கான சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.


மார்ச் 6 : சென்னை ஐ.ஐ.டி.யில் ஆன்லைன் மூலம் படிக்கும் வகையிலான பி.எஸ். மின்னணு அமைப்பியல் எனப் படும் புதிய பட்டப்படிப்பை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்து வைத்தார்.


மார்ச் 7 : சாதி, மத கலவரத்தை உருவாக்கி மக்களை பிளவுபடுத்த முயற்சி நடப்பதாகவும், தி.மு.க. ஆட்சியை அகற்ற சதி நடப்பதாகவும் முதல் அமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.


மார்ச் 7 : ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைப்பதாக வரும் தகவல் தவறானது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தகவல் தெரிவித்துள்ளது.


மார்ச் 7 : சமீபகாலமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு, டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே பொதுமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.


மார்ச் 7 : கோடை காலத்திற்கு 18 ஆயிரத்து 500 மெகா வாட் மின்சாரம் தேவை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.


மார்ச் 7 : ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 70 பயிற்சி விமானங்கள், 3 பயிற்சி கப்பல் கள் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.பயிற்சி கப்பல்கள், சென்னை அருகே காட் டுப்பள்ளியில் கட்டப்படுகின்றன.


மார்ச் 8 : ஆன்லைன் சூதாட்ட தடை மசோ தாவை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் தமிழக சட்டசபைக்கு இல்லை என்று கவர்னர் விளக்கம் அளித்து உள்ளார்.


மார்ச் 8 : வெளி மாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண் டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


மார்ச் 8 : திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சு தீர்ப்பு அளித்துள்ளது.


மார்ச் 8 : திரிபுரா முதல் மந்திரியாக 2-வது தடவையாக மாணிக் சகா பதவி ஏற்றார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர்.


மார்ச் 8 : எந்த காலகட்டத்திலும் அரசு பள்ளிகளில் நுழைவுத்தேர்வு என்ற வார்த் தையே இருக்காது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


மார்ச் 8 : பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமை உண்டு என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


மார்ச் 9 : சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல் தளங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.


மார்ச் 9 : ஆன்லைன் சூதாட்ட தடை மசோ தாவை மீண்டும் சட்டசபையில் நிறை வேற்றி கவர்னருக்கு அனுப்பி வைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


மார்ச் 9 : இந்தியாவில் ஒரு கோடி முதியோருக்கு ஞாபகமறதி நோய் இருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


மார்ச் 9 : அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவி தம் வரை உயருகிறது. இதன்மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.


மார்ச் 9 : தரமற்ற மணல் விற்பனையை தடுக்கும் வகையில் எம்.சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதல் அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.


மார்ச் 9 : சட்ட ரீதியிலான உரிய அனுமதி, குத்தகை, உரிமம், ஆவணங்கள் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து பயன் படுத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


மார்ச் 9 : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என். எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.


மார்ச் 10 : இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.


மார்ச் 10 : வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடை பெற்றது. பொது இடங்களில் பொது மக்கள் முககவசம் அணியுமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.


மார்ச் 10 : நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் குழாய் உடைந்து மீண்டும் கச்சா எண் ணெய் வெளியேறியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


மார்ச் 10 : 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 16 லட்சத்து 39 ஆயிரத்து 367 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.


மார்ச் 11 : கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசினார்.


மார்ச் 11 : நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் ரூ.13 லட்சத்து 73 ஆயிரம் கோடியாக உள்ளது. இது பட் ஜெட் மதிப்பீட்டில் 83 சதவீதம் ஆகும்.


மார்ச் 11 : மனிதருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


மார்ச் 11 : ஸ்டெர்லைட் ஆலையை விட என். எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை ஏற் படுகிறது என பா.ம.க. தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்தார்.


மார்ச் 11 : போலீஸ் நிலையத்தில் ஏற்படும் மரணத்துக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.72 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


மார்ச் 11 : டெல்லியில் நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரு மான ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.


மார்ச் 11 : 'சிற்பி' திட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 5 லட்சம் விதைப் பந்துகளை தயாரித்து உலக சாதனை படைத்தனர்.


மார்ச் 11 : நாடு முழுவதும் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சலுடன், கொரோனா தொற்றும் படிப்படியாக அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய அரசு கவலை வெளியிட்டு உள்ளது.


மார்ச் 5 : சீனா தனது ராணுவத்துக்கு ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இது இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.


மார்ச் 6 : ஊழல் வழக்கு ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை போலீசார் கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவானார்.


மார்ச் 7 : ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினால் போர் வெடிக்கும் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.


மார்ச் 9 : நேபாளத்தின் புதிய அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு செய்யப்பட்டார்.


மார்ச் 9 : உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.


மார்ச் 10 : சீன அதிபராக தொடர்ந்து 3-வது முறையாக ஜின் பிங் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பதவியேற்றார்.


மார்ச் 9 : பிரதமர் மோடியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் சந்தித்து பேசினார். இருதரப்பிலும் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.


மார்ச் 5: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி யில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 'சாம்பியன்' பட்டம் வென்றது. ஐதராபாத்தில் தனது கடைசி டென்னிஸ் போட்டியில் ஆடிய சானியா மிர்சா கண்ணீர் மல்க விடை பெற்றார். சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் 54 ஆண்டுக்கு பிறகு கர்நாடகா அணி கோப்பையை வென்றது.


மார்ச் 6: கொரோனா தடுப் பூசி போடாததால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி வெற்றி பெற்று உலக சாம்பியன் இங்கி லாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. தென்ஆப்பிரிக்க 20 ஓவர் அணியின் கேப்டனாக மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டார்.


மார்ச் 8 : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு நியூசிலாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்தது. அவர் களம் திரும்ப குறைந்தபட்சம் 6 மாதமாகும் என்று தெரிகிறது.


மார்ச் 9 : இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக் கெட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடியும்,ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசும் நேரில் கண்டுகளித் தனர். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வங்காளதேசம் வரலாறு படைத்தது.


மார்ச் 10: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது. புரோ ஆக்கி லீக் போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.


மார்ச் 11 : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.


No comments:

Popular Posts