முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ECONOMICS - தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | Industrial Clusters in Tamil Nadu

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
 • பொதுவாக மூலப்பொருள்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் "தொழிற்சாலை" என்று அழைக்கப்படுகிறது.
 • நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருள்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும்.
 • தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் தன்மை, தொழில் தொகுப்புகளின் முக்கியத்துவம் மற்றும் தமிழ்நாட்டில் தொழில் தொகுப்புகள் எவ்வாறு முன்னேறின என்பதையும் தொழில்களை மேம்படுத்துவதில் அரசு எடுக்கும் முயற்சிகளையும் அதன்பங்கினைப்பற்றியும் இப்பாடப்பகுதியில் நாம் அறிந்து கொள்வோம்.
 • Generally, “any human activity which is engaged in the conversion of raw materials into readily usable materials is called an industry”. 
 • Industrialisation refers to the process of using modern techniques of production to produce goods that are required by both consumers and other producers on a large scale. 
 • In this chapter we will learn the nature of industrialisation of Tamil Nadu, importance of industrial clusters, how industrial clusters have developed in Tamil Nadu and the role of government initiatives in promoting industries.

தொழில்மயமாதலின் முக்கியத்துவம்

 • தொழிற்சாலைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் முன் நாம் ஏன் வேளாண்மையின் வளர்ச்சியுடன் அதன் பொருளாதார வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு குறைகிறது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 • முதலாவதாக உணவுத் தேவையுடன் வருமானத் தேவையும் நிலையானதாக உள்ளது.
 • எனவே, ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து, வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வோர் வேளாண்மை உற்பத்திப் பொருள்களுக்கு தங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் செலவிடுகிறார்கள்.
 • இரண்டாவதாக, நுகரப்படும் உணவும் பொருளாதார விரிவால் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது.
 • உணவுப் பொருள்கள் நீண்ட தூரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுப் பதப்படுத்தி முத்திரையிடப்படுகிறது.
 • இதன் விளைவாக நுகர்வோர்கள் வாங்கும் விலையைவிட விவசாயிகள் பெறும் விலை குறைவாக உள்ளது. 
 • மூன்றாவதாக, நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித்திறன் குறைந்து கொண்டே வருவதால் வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்களை ஈர்த்துக்கொள்வதில் சில வரையறைகளை பின்பற்ற நேரிடுகிறது.
 • பெருமளவிலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை நம்பியிருப்பதாலும், கூலியை அதிகரிக்க வாய்ப்பில்லாததாலும் வறுமையின் அளவு தொடர்ந்து அதிகரிக்கிறது.
 • இந்த அனைத்து காரணிகளின் விளைவாக வேளாண்துறையில் இருந்து விலகி, பொருளாதாரமானது உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பின் அடிப்படையில் ஒரு தேவையை ஏற்படுத்துகிறது.

Importance of Industrialisation

 • To understand importance of industries, we need to understand why the share of agriculture in an economy's income and employment decreases with development. 
 • First, demand for food remains constant with regard to income. 
 • Therefore, as an economy grows and incomes increase, consumers tend to spend a lesser share of their income on products from the agricultural sector.
 • Second, even the food that is consumed is subject to more transformation. 
 • Food products are taken over longer distances, processed and branded. This also requires that food products have to be preserved. 
 • As a result, the prices that farmers get tend to be much less compared to the prices at which consumers buy.
 • Third, there are limits to the ability of agriculture to absorb labour due to the declining marginal productivity of land. 
 • Wages too cannot therefore increase and as a result poverty levels may remain high, especially when more and more people continue to rely on agriculture for their livelihood.
 • Due to all these factors, there is a need for an economy’s production and employment base to diversify away from agriculture.
தொழில்மயமாதல் ஒரு பொருளாதார வளர்ச்சிக்கு என்னென்ன நன்மைகளைத் தருகிறது?
 • முன்னர் கூறியது போல் ஒருபொருளாதாரத்தில் பிற உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உள்ளீடுகளை உருவாக்குவது அவசியம்.
 • வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிக்க உரங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற தொழில்களுக்கு உள்ளீடுகள் தேவைப்படுகிறது.
 • இரண்டாவதாக, உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பண்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சந்தை நிலவுகிறது.அதே போல் வங்கி, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற பணிகள் தொழிற்சாலைகளின் உற்பத்தியைச் சார்ந்தே உள்ளது.
 • மூன்றாவதாக, நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொழில்கள் சிறந்த உற்பத்தித்திறனை அளிக்கின்றன.இதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பண்டங்களின் உற்பத்தி செலவும் குறைகிறது.இதன் காரணமாக மலிவான விலையில் பண்டங்களை வாங்கிட உதவவும் மற்றும் அதிகளவு உற்பத்தித் தேவையை உருவாக்கவும் உதவுகிறது. 
 • நான்காவதாக, அத்தகையப் பண்டங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தொழில்மயமாதல் வேளாண்மையில் ஈடுபடும் அதிக உழைப்பாளர் சக்தியை ஈர்க்க உதவுகிறது.எனவே வேலைவாய்ப்பை உருவாக்குவது "தொழில் மயமாதலின்" ஒரு முக்கிய நோக்கமாகும். 
 • ஐந்தாவதாக, தொழில்மயமாதலுக்கு நன்மை தருவது "தொழில்நுட்ப மாற்றமே" ஆகும்.நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்மயமாதலின் முறைகளையும் அதன் வளர்ச்சியையும் அறிந்து கொள்ள முடிகிறது.அவற்றின் விளைவாக உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் அதாவது, உழைப்பாளரின் உள்ளீடு அதிகரித்தது. இதனால் தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது.
 • ஆறாவதாக, வருமானம் அதிகரிப்பு பண்டங்கள் மற்றும் பணிகளின் தேவைக்கு வழி வகுக்கிறது. 

What benefits does industrialisation bring to an economy?

 • As stated earlier, it is essential to produce inputs to other producers in an economy. Even agriculture requires inputs from industry such as fertilisers and tractors to increase productivity. 
 • Second, a market exists for both producers and consumer goods. Even services like banking, transport and trade are dependent on production of industrial goods.
 • Third, by using modern methods of production, industries contribute to better productivity and hence lower cost of production of all goods produced. It therefore helps people to buy goods at a cheaper rate and help create demand for more products.
 • Fourth, through such expansion of production, industrialisation helps to absorb the labour force coming out of agriculture. Employment generation is therefore an important objective of industrialisation.
 • Fifth, a related advantage of industrialisation is therefore technological change. Through use of modern techniques, industrialisation contributes to learning of such methods and their improvement. As a result labour productivity, ie, output per unit of labour input increases, which can help workers earn higher wages.
 • Sixth, expanding incomes lead to more demand for goods and services.
தொழிற்சாலைகளின் வகைகள் 
 • தொழிற்சாலைகளை கீழ்க்கண்ட வகைகளில் வகைப்படுத்தலாம்.
அ) பயனர்கள் : 
 • வெளியீடுகளை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது "நுகர்வோர் பண்டங்கள் துறை" என்றும் வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது "மூலதன பண்டங்கள் துறை" என்றும் அழைக்கப்படுகிறது. சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற பிற தொழில்களுக்கு மூலப்பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இத்தகைய தொழில்கள் அடிப்படை பண்டங்கள் தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஆ) பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை : 
 • வேளாண் பதப்படுத்துதல், நெசவுத்துறை, ரப்பர் உற்பத்தி, தோல் பொருள்கள் போன்ற மூலப் பொருள்களை பயன்படுத்தும் அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துகின்றனர்.
இ) நிறுவன உரிமையாளர்கள் : 
 • தொழிற்சாலைகளானது தனியாருக்கு சொந்தமானதாகவும், பொது உரிமையாளர் (மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால்) தனியார் மற்றும் பொதுத்துறை (கூட்டுறவாக) இரண்டிற்கும் சொந்தமானதாகவும் அல்லது கூட்டுறவுக்கு சொந்தமானதாகவும் உள்ளன.
ஈ) அளவு : 
 • நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி, விற்பனை, முதலீடு அல்லது வேலைவாய்ப்பு அவற்றின் அளவின் அடிப்படையில் பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது நடுத்தரமாகவோ இருக்கலாம். சிறிய நிறுவனங்களை விட அளவில் சிறியதாக இருக்கும் மிகச்சிறிய நிறுவனங்களும் உள்ளன.
 • சிறிய நிறுவனங்கள் இரண்டு காரணங்களால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
 • முதலாவதாக, இது பெரிய அளவிலான துறையை விட அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது. பெரிய நிறுவனங்களானது மிகவும் மேம்படுத்தப்பட்ட மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் அது போதுமான அளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை .
 • இரண்டாவதாக, சிறிய அளவிலான துறை குறைந்த எண்ணிக்கையிலான சலுகைப் பெற்றப்பின்னணியில் இருந்து ஏராளமான தொழில் முனைவோரை வெளிப்படுத்துகிறது.
 • உலகின் பல்வேறு பகுதிகளில் தொழில்மயமாதல் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சிறிய நிறுவனங்கள் புவியியல் ரீதியாக குறிப்பிட்ட இடங்களில் குவிந்து உற்பத்தி மற்றும் கற்றலின் மூலம் பெரிய நிறுவனங்களின் திறன் இல்லாவிட்டாலும் அதற்கு ஈடு கொடுக்கும் அளவில் உள்ளதென நம்பப்படுகிறது. 
 • இத்தகைய சிறிய நிறுவனங்களின் தொகுப்புகளே "தொழில்துறை தொகுப்புகள்" என்று அழைக்கப்படுகின்றன.

Types of Industries 

 • Industries can be classified on the basis of 
(a) Users: 
 • If the output is consumed by the final consumer, it is called a consumer goods sector. If the output is consumed by another producer, it is called a capital goods sector. There are industries that produce raw materials for other industries such as cement and steel. Such industries are called basic goods industries.
(b) Type of Inputs Used: 
 • Industries are also classified based on the kind of raw material used such as agro-processing, textiles sector, rubber products, leather goods, etc. 
(c) Ownership: 
 • Firms may be privately owned, publicly owned (by the government, central or state), jointly owned by the private and public sector, joint sector or cooperatively owned (cooperatives).
(d) Size: 
 • Firms may be large, small or medium based on their volume of output, sales or employment or on the basis of the amount of investments made. 
 • There are also micro or tiny enterprises that are smaller than even small firms. 
 • The small sector is seen as important for two reasons. 
 • One, it is believed to generate more employment than the large-scale sector, which is likely to use more advanced and automated technologies and therefore may not generate enough employment. 
 • Second, the small scale sector allows for a larger number of entrepreneurs to emerge from less privileged backgrounds. 
 • Based on experiences of industrialisation in different parts of the world, it is believed that when small firms specialising in one sector are geographically concentrated in specific locations, and linked to one another through production and learning, they tend to be equally if not more efficient than large scale enterprises. 
 • Such agglomerations of small firms are called industrial clusters.

தொழில் தொகுப்புகள் (Industrial Clusters)

 • தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.
 • இங்கிலாந்தில் உலோகம் மற்றும் நெசவு தொழிலில் ஈடுபட்ட சிறிய நிறுவனங்களின் செயல்பாடுகளின் தொகுப்பினை புரிந்துகொள்ள 1920களில் புகழ்பெற்ற பொருளாதார அறிஞரான ஆல்ஃபிரட் மார்ஷல் அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்த பொழுது தொழில் தொகுப்பு அல்லது மாவட்டங்களின் நன்மைகளை முதன்முதலில் கண்டறிந்தார்.
 • 1980களில் இத்தாலியில் சிறிய நிறுவனங்கள் வெற்றி பெற்ற பின்னர் தான் மார்ஷலின் தொழில்துறை மாவட்டம் (Industrial District) என்ற கருத்து பிரபலமாக்கப்பட்டது.
 • இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் கொள்கை வகுப்பாளர்கள் தங்களுடைய நாட்டில் இது போன்ற பல சிறிய நிறுவனங்களின் தொழில் தொகுப்பினை உணர்ந்ததால் அவற்றினை ஊக்குவிக்கத் தொடங்கினர்.
 • Industrial clusters are groups of firms in a defined geographic area that share common markets, technologies and skill requirements. 
 • The advantages of industrial clusters or districts was first observed by the famous economist Alfred Marshall in the 1920s when he tried to understand the working of clusters of small firms in the metal-working and textile regions in England. 
 • While the notion of an ‘industrial district’ was developed by Marshall, it was only after the success of small firms in Italy in the 1980s that it became popular. 
 • Policy-makers in developing countries like India began to promote them actively as they realized that there several such small firm clusters in the country.

வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு:

 • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல். 
 • துறை சார்ந்த சிறப்பு கவனம். 
 • நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல், 
 • புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி.
 • நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம் 
 • பல்வேறு திறமையான தொழிலாளர்கள் சுய உதவி குழுக்கள் செயல்படுதல் 
 • வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு. 
போன்றவற்றால் நிறுவனங்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரமாக ஒத்துழைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் அவர்கள் தங்கள் திறனை விரிவுபடுத்த முடியும்.போட்டியின் மூலம் அவர்கள் மிகவும் திறமையானவர்களாக மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 

The following are the chief characteristics of a successful cluster.

 • geographical proximity of small and medium enterprises (SMEs) 
 • sectoral specialisation
 • close inter-firm collaboration inter-firm competition based on innovation
 • a socio-cultural identity, which facilitates trust 
 • multi-skilled workforce 
 • active self-help organisations, and
 • supportive regional and municipal governments. 
Firms are therefore expected to collaborate and compete with one another at the same time. By collaborating, they can expand their capacity and also learn from one another. Through competition, they are forced to become more efficient.
 
தொழில்தொகுப்பு எவ்வாறு தோன்றுகிறது? 
 • தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
 • ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. கைத்தறி நெசவுத்தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
 • சில துறைகளில், ஒரு பெரிய நிறுவனம் நிறுவப்படும்போது, அதன் உள்ளீடு மற்றும் பணிகளின் தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக தொழில் தொகுப்பு நிறுவனங்கள் தோன்றகூடும்.
 • சில நேரங்களில், ஒரு வட்டாரத்திலிருந்து மூலப்பொருள்களைப் பயன்படுத்தி உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கங்கள் முடிவு செய்யலாம், இது தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு வழிவகுக்கும்.

How Do Clusters Originate?

 • Clusters may arise due to many factors. 
 • Certain clusters evolve over a long time in history when artisans settle in one locality and evolve over centuries. 
 • Handloom weaving clusters are one examples of this development. Or else, in some sectors, when a large firm is established, a cluster of firms may emerge to take care of its input and service requirements. 
 • At times, governments may decide to encourage manufacturing using raw materials from a region, which may also lead to emergence of clusters.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ECONOMICS - தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள் | Important ongoing Schemes in Tamil Nadu

1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் (Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) கீழ், ஏழை கர்பிணிப் பெண்க ளுக்கு ₹12,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது.  2. முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) 2011-12 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைவருக்கும் உடல் நலம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்குவதாகும்  3. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் (Tamil Nadu Health Systems Projects) இலவசமாக ஆம்புலன்ஸ் - சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை).  4. 'பள்ளி சுகாதார திட்டம்' (School Health Programme) விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது.  5. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் (National Leprosy Eradication Programme) மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்

கால்நடை உதவி மருத்துவர் தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு: 35/2020 நாள்:20.10.2020  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.  பதவியின் பெயர் : 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு பணிக்கான கால்நடை உதவி மருத்துவர்.  மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை : 1141  தேர்வு நடைபெற்ற நாள் 23.02.2020 மு.ப & பி.ப  தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை : 2015  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணைய தளத்தில் அரசு இ சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்படவேண்டிய நாட்கள் : 28.10.2020 முதல் 06.11.2020 வரை  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெர

ECONOMICS - அரசாங்கமும் வரிகளும் அறிமுகம் | Government and Taxes

இந்தியாவில் வரி விதிப்பின் வேர்கள் மனு ஸ்மிருதி மற்றும் அர்த்தசாஸ்திர காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது. தற்கால இந்திய வரி முறையானது பண்டைய கால வரி முறையை அடிப்படையாகக் கொண்டது. Taxation in India has its roots from the period of Manu Smriti and Arthasastra.  The present Indian tax system is based on this ancient tax system.  இந்தியாவில் முதன்முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857ஆம் ஆண்டு கலகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும். In India, Income Tax was introduced for the first time in 1860 by Sir James Wilson  In order to meet the losses sustained by the Government on account of the Mutiny of 1857.  நேர்முக வரி என்பது மத்திய அரசுக்கு அல்லது மாநில அரசுக்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாகச் செலுத்தும் வரியாகும். இதில் வருமான வரி, சொத்துவரி ஆகியன அடங்கும். வருமான வரி தனி நபர்கள் மற்றும் தொழில் செய்பவர்களால் ஈட்டப்பட்ட மற்றும் ஈட்டப்படாத வருமானங்களின் அடிப்படையில் விதிக்

ECONOMICS - ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் (ஜனவரி 16, 2016) | Startup India Scheme (Launched 16-Jan-2016):

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும்.  இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.  ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (ஏப்ரல் 5, 2016) ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி (Greenfield Enterprise) நிறுவனம் அமைப்பதற்காக குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில், ஒரு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதே இத்திட்டமாகும். ============================================= Startup India Scheme is an initiative of the Indian government,  The primary objective of which is the promotion of startups, generation of employment and wealth creation.  Standup India Scheme (Launched 5-April-2016): Standup India Scheme is to facilitate bank loans between `10 lakh and `1 crore to at least one Scheduled Caste (SC) or Scheduled Tri

CURRENT AFFAIRS - நடப்பு நிகழ்வுகள் - 1

  1) 106 வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்? a) பஞ்சாப் ✓ b) ராஜஸ்தான் c) கேரளா d) அசாம்   2) முதன் முதலில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்த மாநிலம் எது? a) தமிழ்நாடு b) ஹரியானா c) சிக்கிம்   ✓ d) ஹிமாசலப்பிரதேசம்   3) ஸ்வட்ச் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? a) 2014  ✓ b) 2000 c) 2013 d) 2016   4) மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் யார்? a) எம்.கிருஷ்ணன்   ✓ b) செல்லத்துரை c) சுதா சேஷய்யன் d) சுதா ராமகிருஷ்ணன்   5) 67 வது தேசிய சீனியர் வாலிபர் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது? a) சென்னை   ✓ b) மும்பை c) கல்கத்தா d) புனே   6) LIC நிறுவனத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டவர் a) ஹேமந்த் பார்கவா   ✓ b) வி.கே. சர்மா c) சதிஷ் ரெட்டி d) ராஜிவ் குமார்   7) கலியா (KALIA) என்ற பெயரில் விவசாயிகளுக்கான திட்டத்தை அறிமுகம் செய்த மாநிலம் a) ஒடிசா   ✓ b) பீகார் c) தமிழ்நாடு d) கேரளா   8) கேரளாவில் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய பெண்கள் சுவரின் நீளம் a) 600 km b) 610 km c) 620 km   ✓ d) 630 km   9) பிரேசில் நாட்டின் புதிய அதிபர் a) ஜெயிர் போல்சோனரே b) விளாடிமிர் புதின் c) பெர

ECONOMICS - தமிழ்நாட்டின் தொழில்மயமாதலின் முன்னேற்றம் பற்றிய வரலாறு | Historical Development of Industrialisation in Tamil Nadu

தமிழ்நாட்டில் காலனித்துவ முன்காலத்தில் நெசவு, கப்பல் கட்டுமானம், இரும்பு மற்றும் எஃகு தயாரித்தல், மட்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன.  தமிழ்நாடு பரந்துவிரிந்த கடற்கரையைக் கொண்டுள்ளதால், பல நூற்றாண்டுகளாக தென் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது.  தொழிற்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களின் இறக்குமதியின் காரணமாகப் போட்டி நிலவி கைத்தறி நெசவுத்தொழில் வீழ்ச்சிக்கு காலனித்துவ கொள்கைகளும் பங்களித்தன.  இருந்தபோதிலும் சில தொழில்கள் காலனித்துவக் காலத்தில் வளர்ந்தன.  There is lot of evidence for presence of industrial activities such as textiles, ship-building, iron and steel making and pottery in precolonial Tamil Nadu.  Given the vast coastline, the region has been involved in trade with both South-East and West Asia for several centuries.  Colonial policies also contributed to the decline of the handloom weaving industry due to competition from machine-made imports from E

ECONOMICS - தமிழ் நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | Major Industrial Clusters and Their Specialisation in Tamil Nadu

தானியங்கி தொகுப்புகள் சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் " ஆசியாவின் டெட்ராய்ட் " என்று அழைக்கப்படுகிறது.  சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது.  சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன. பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹூன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட் – நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Companies - MNC) இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன.  எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது.  பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.  ஓசூர் மற்றொரு தானியங்கி தொகுப்பாகும். இங்கு TVS மற்றும் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன. கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வர

ECONOMICS - தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள் | The Policy Factors that Helped the Industrialisation Process in Tamil Nadu

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் | SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu) கொள்கைக் காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.  Policy factors can be divided into three aspects: கல்வி  திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது.  நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களைத் தருவதிலும் பெயர் பெற்ற இடமாகும்.  இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் போன்றவைகளின் புகலிடமாக தமிழகம் உள்ளது.  Education Industries require skilled human resources.  Apart from a lot of attention to primary education to promote literacy and basic arithmetic skills, the state is known for its vast supply of technical human resources.  It is home to one of the largest number of engineering colleges, polytech

CURRENT AFFAIRS - நடப்பு நிகழ்வுகள் - 3

21) சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பெண் தலைமை பொருளாதார ஆலோசகர் யார் a) கீதா கோபிநாத்   ✓ 6) ஆனந்தி ராமகிருஷ்ணன் c) லட்சுமி சதாசிவம் d) கமலா படேல்   22) சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார் a) அலோக் வர்மா b) நாகேஸ்வர ராவ்   ✓ c) ராகேஷ் அஸ்தானா d) சந்தானம்   23) கடலூரிலிருந்து விழுப்புரம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட ஆண்டு a) 1993  ✓ b) 1992 c) 1991 d) 1990   24) அனுமதி பெறாமல் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது a) பிரான்ஸ்   ✓ b) ஜெர்மனி c) சீனா d) இந்தியா   25) நபார்டு வங்கியின் தலைவர் a) ஆதர்ஷ் குமார் கோயல் c) நந்தன் நீலகேனி b) G.R. Chintala   ✓ d) சத்ய நாராயணன்

ECONOMICS - சிறப்புப் பொருளாதார மண்ட லங்கள் (Special Economic Zones-SEZs)

நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை ஏப்ரல் 2000ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  அதன்படி, பின்வரும் இடங்களில் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை அரசு அமைத்துள்ளது. நாங்குநேரி SEZ - பல் நோக்கு உற்பத்தி SEZ திருநெல்வேலி எண்ணூர் SEZ - அனல் மின் திட்டம், வயலூர் கோயம்புத்தூர் SEZ - தகவல் தொழிற்நுட்ப பூங்காக்கள், ஓசூர் SEZ - தானியங்கி பொறியியல், மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு. பெரம்பலூர் SEZ - பல்நோக்கு உற்பத்தி SEZ தானியங்கி நகரம் (Auto city) SEZ - தானியங்கிகள், /தானியங்கி உதிரி பாகங்கள், திருவள்ளூர் இந்தியா-சிங்கப்பூர் SEZ - IT/ITES, மின்னணு வன்பொருள், தளவாடங்கள் மற்றும் கிடங்குகள் - திருவள்ளூர் மாவட்டங்கள் உயிரி-மருந்துகள் SEZ - மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு, விஷக்கட்டுப்பாட்டு மையம், மைய மீள் உருவாக்க மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (Madras Export Processing Zone - MEPZ) மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும்.  மத்திய அரசு அமைத்த நாட்டி