Ad Code

Responsive Advertisement

GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 3551-3600 | பொதுத் தமிழ்.

GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 3551-3600 | பொதுத் தமிழ்.

[1] காமராசர் வாழ்ந்த இல்லம் எங்கெங்கு உள்ளது?

a. மதுரை மற்றும் விருதுநகர்.

b. சென்னை மற்றும் மதுரை.

c. சென்னை மற்றும் கன்னியாகுமரி.

d. சென்னை மற்றும் விருதுநகர்.

Answer: சென்னை மற்றும் விருதுநகர்.


[2] சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது?

a. காமராசர்.

b. அண்ணா.

c. பெரியார்.

d. அப்துல் கலாம்.

Answer: காமராசர்.


[3] கன்னியாகுமரியில் காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது?

a. 02-10-1976.

b. 02-10-1990.

c. 02-10-2000.

d. 02-10-2005.

Answer: 02-10-2000.


[4] ஆண்டுதோறும் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாள் என்ன நாளாகக் கொண்டாடப்படுகிறது?

a. கல்வி வளர்ச்சி நாள்.

b. மாணவர்கள் தினம்.

c. ஆசிரியர் தினம்.

d. குழந்தைகள் தினம்.

Answer: கல்வி வளர்ச்சி நாள்.


[5] பள்ளிக்கூடம் செல்லாததற்கு காமராசரிடம் ஆடு மேய்க்கும் குழந்தைகள் சொன்ன காரணம் என்ன?

a. பணம் இல்லை.

b. ஊரில் பள்ளிகூடம் இல்லை.

c. படிக்க விருப்பமில்லை.

d. வேலைக்குச் செல்ல வேண்டும்.

Answer: ஊரில் பள்ளிகூடம் இல்லை.


[6] பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

a. பசி + இன்றி.

b. பசியில் + இன்றி.

c. பசி + ன்றி.

d. பசி + இன்றி.

Answer: பசி + இன்றி.


[7] படிப்பறிவு என்பதைப் பிரித்து எழுதுக.

a. படிப்பு + அறிவு.

b. படி + அறிவு.

c. படிப்பு + அறிவு.

d. படி + அறிவு.

Answer: படிப்பு + அறிவு.


[8] காடு + ஆறு என்பதைச் சேர்த்து எழுதுக.

a. காடு ஆறு.

b. காட்டாறு.

c. காட்டாறு.

d. கா + ஆறு.

Answer: காட்டாறு.


[9] காமராசர் குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வு இன்றிப் படிக்க அறிமுகப்படுத்தியது எது?

a. மதிய உணவு.

b. இலவச கல்வி.

c. சீருடை.

d. புத்தகம்.

Answer: சீருடை.


[10] காமராசரைக் "கல்வி கண் திறந்தவர்" என மனதாரப் பாராட்டியவர் யார்?

a. பெரியார்.

b. அண்ணா.

c. அப்துல் கலாம்.

d. ராஜாஜி.

Answer: பெரியார்.


[11] ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது?

a. சென்னை.

b. மதுரை.

c. விருதுநகர்.

d. கன்னியாகுமரி.

Answer: சென்னை.


[12] ஆசியக் கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?

a. அண்ணா நூற்றாண்டு நூலகம்.

b. கன்னிமாரா நூலகம்.

c. சரஸ்வதி மகால் நூலகம்.

d. மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம்.

Answer: அண்ணா நூற்றாண்டு நூலகம்.


[13] அண்ணா நூற்றாண்டு நூலகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?

a. ஆறு.

b. ஏழு.

c. எட்டு.

d. ஒன்பது.

Answer: எட்டு.


[14] அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு எத்தனை ஏக்கர் ஆகும்?

a. 6 ஏக்கர்.

b. 7 ஏக்கர்.

c. 8 ஏக்கர்.

d. 9 ஏக்கர்.

Answer: 8 ஏக்கர்.


[15] ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?

a. சீனா.

b. இந்தியா.

c. ஜப்பான்.

d. அமெரிக்கா.

Answer: சீனா.


[16] நூலக விதிகளை உருவாக்கிய "இந்திய நூலகவியலின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?

a. இரா. அரங்கநாதன்.

b. உ.வே.சா.

c. காமராசர்.

d. அண்ணா.

Answer: இரா. அரங்கநாதன்.


[17] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பார்வை குறைபாடு உடையவர்களுக்கான பிரெய்லி நூல்களைக் கொண்ட பகுதி" எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?

a. தரைத்தளம்.

b. முதல் தளம்.

c. இரண்டாம் தளம்.

d. ஏழாம் தளம்.

Answer: தரைத்தளம்.


[18] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "குழந்தைகளுக்கான பகுதி" எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?

a. தரைத்தளம்.

b. முதல் தளம்.

c. இரண்டாம் தளம்.

d. ஏழாம் தளம்.

Answer: முதல் தளம்.


[19] அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது?

a. 10,000க்கும் மேற்பட்ட.

b. 15,000க்கும் மேற்பட்ட.

c. 20,000க்கும் மேற்பட்ட.

d. 25,000க்கும் மேற்பட்ட.

Answer: 20,000க்கும் மேற்பட்ட.


[20] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட" எத்தனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் முதல் தளத்தில் உள்ளது?

a. 40,000.

b. 50,000.

c. 60,000.

d. 70,000.

Answer: 50,000.


[21] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்" எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?

a. முதல் தளம்.

b. ஏழாம் தளம்.

c. எட்டாம் தளம்.

d. தரைத்தளம்.

Answer: ஏழாம் தளம்.


[22] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "சொந்த நூல் பதிப்பகம், பிரெய்லி நூல்கள்" எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?

a. தரைத்தளம்.

b. முதல் தளம்.

c. ஏழாம் தளம்.

d. எட்டாம் தளம்.

Answer: தரைத்தளம்.


[23] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "குழந்தைகள் பிரிவு மற்றும் பருவ இதழ்கள்" எந்தத் தளத்தில் அமைந்து உள்ளது?

a. தரைத்தளம்.

b. முதல் தளம்.

c. இரண்டாம் தளம்.

d. ஏழாம் தளம்.

Answer: முதல் தளம்.


[24] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "தமிழ் நூல்கள்" எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?

a. முதல் தளம்.

b. இரண்டாம் தளம்.

c. மூன்றாம் தளம்.

d. நான்காம் தளம்.

Answer: இரண்டாம் தளம்.


[25] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்" எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?

a. இரண்டாம் தளம்.

b. மூன்றாம் தளம்.

c. நான்காம் தளம்.

d. ஐந்தாம் தளம்.

Answer: மூன்றாம் தளம்.


[26] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி சார்ந்த நூல்கள்" எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?

a. மூன்றாம் தளம்.

b. நான்காம் தளம்.

c. ஐந்தாம் தளம்.

d. ஆறாம் தளம்.

Answer: நான்காம் தளம்.


[27] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "கணிதம், அறிவியல், மருத்துவம் சார்ந்த நூல்கள்" எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?

a. நான்காம் தளம்.

b. ஐந்தாம் தளம்.

c. ஆறாம் தளம்.

d. ஏழாம் தளம்.

Answer: ஐந்தாம் தளம்.


[28] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை சார்ந்த நூல்கள்" எந்தத் தளத்தில் உள்ளது?

a. ஐந்தாம் தளம்.

b. ஆறாம் தளம்.

c. ஏழாம் தளம்.

d. எட்டாம் தளம்.

Answer: ஆறாம் தளம்.


[29] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "வரலாறு, புவியியல், சுற்றுலா சார்ந்த நூல்கள்" எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?

a. ஆறாம் தளம்.

b. ஏழாம் தளம்.

c. எட்டாம் தளம்.

d. தரைத்தளம்.

Answer: ஏழாம் தளம்.


[30] அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் "நிர்வாகப் பிரிவு" எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?

a. ஆறாம் தளம்.

b. ஏழாம் தளம்.

c. எட்டாம் தளம்.

d. தரைத்தளம்.

Answer: எட்டாம் தளம்.


[31] நடமாடும் நூலகம் எனும் திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?

a. தமிழ்நாடு.

b. கேரளா.

c. ஆந்திரா.

d. கர்நாடகா.

Answer: தமிழ்நாடு.


[32] சிறந்த நூலகர்களுக்கு எவ்விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது?

a. ச.இரா.அரங்கநாதன் விருது.

b. அப்துல் கலாம் விருது.

c. அண்ணா விருது.

d. பாரதி விருது.

Answer: ச.இரா.அரங்கநாதன் விருது.


[33] போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான அனைத்து நூல்களும் எந்தத் தளத்தில் அமைந்துள்ளது?

a. ஆறாம் தளம்.

b. ஏழாம் தளம்.

c. எட்டாம் தளம்.

d. தரைத்தளம்.

Answer: ஏழாம் தளம்.


[34] நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்கள் யார்?

a. அறிஞர் அண்ணா, ஜவஹர்லால் நேரு.

b. அண்ணல் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ்.

c. a மற்றும் b.

d. அப்துல் கலாம்.

Answer: a மற்றும் b.


[35] ஒலிக்கும் முயற்சி பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

a. இன எழுத்துகள்.

b. முதல் எழுத்துகள்.

c. சார்பெழுத்துகள்.

d. மெய் எழுத்துகள்.

Answer: இன எழுத்துகள்.


[36] சொற்களில் "மெல்லின மெய் எழுத்தை அடுத்து பெரும்பாலும் அதன் இனமாகிய" எந்த எழுத்து வரும்?

a. வல்லின எழுத்து.

b. மெல்லின எழுத்து.

c. இடையின எழுத்து.

d. உயிர் எழுத்து.

Answer: வல்லின எழுத்து.


[37] மெய் எழுத்துகளைப் போலவே எந்த எழுத்துக்களில் இன எழுத்துக்கள் உண்டு?

a. உயிர் எழுத்துகள்.

b. மெய் எழுத்துகள்.

c. சார்பு எழுத்துகள்.

d. ஆய்த எழுத்துகள்.

Answer: உயிர் எழுத்துகள்.


[38] எந்த எழுத்துக்களில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்?

a. உயிர்.

b. மெய்.

c. சார்பு.

d. ஆய்தம்.

Answer: உயிர்.


[39] ஐ என்ற நெடில் எழுத்துக்கு இணையான எழுத்து எது?

a. இ.

b. ஈ.

c. அ.

d. ஆ.

Answer: இ.


[40] ஒள என்னும் எழுத்துக்கு இணையான எழுத்து எது?

a. உ.

b. ஊ.

c. அ.

d. ஆ.

Answer: உ.


[41] தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை?

a. உயிர் எழுத்து.

b. மெய் எழுத்து.

c. ஆய்த எழுத்து.

d. உயிர்மெய் எழுத்து.

Answer: ஆய்த எழுத்து.


[42] யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு என்ற வரிகள் இடம்பெற்று உள்ள நூல் எது?

a. நாலடியார்.

b. திருக்குறள்.

c. பழமொழி நானூறு.

d. மூதுரை.

Answer: திருக்குறள்.


[43] ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை அந்நாடு வேற்றுநாடு ஆகர் தமவேஆம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

a. நாலடியார்.

b. திருக்குறள்.

c. பழமொழி நானூறு.

d. மூதுரை.

Answer: பழமொழி நானூறு.


[44] காமராசர் பிறந்த நாள் விழா எப்போது?

a. செப்டம்பர் 5.

b. அக்டோபர் 15.

c. ஜனவரி 12.

d. ஜூலை 15.

Answer: ஜூலை 15.


[45] டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் எப்போது?

a. செப்டம்பர் 5.

b. அக்டோபர் 15.

c. ஜனவரி 12.

d. ஜூலை 15.

Answer: செப்டம்பர் 5.


[46] அப்துல் கலாம் பிறந்த நாள் எப்போது?

a. செப்டம்பர் 5.

b. அக்டோபர் 15.

c. ஜனவரி 12.

d. ஜூலை 15.

Answer: அக்டோபர் 15.


[47] விவேகானந்தர் பிறந்த நாள் எப்போது?

a. செப்டம்பர் 5.

b. அக்டோபர் 15.

c. ஜனவரி 12.

d. ஜூலை 15.

Answer: ஜனவரி 12.


[48] ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் எப்போது?

a. செப்டம்பர் 5.

b. அக்டோபர் 15.

c. நவம்பர் 14.

d. ஜூலை 15.

Answer: நவம்பர் 14.


[49] இரசீது என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் என்ன?

a. பற்றுசீட்டு.

b. நூலகம்.

c. மின் தூக்கி.

d. அஞ்சல்.

Answer: பற்றுசீட்டு.


[50] Education என்பதன் தமிழ்ச் சொல் என்ன?

a. கல்வி.

b. தொடக்கப்பள்ளி.

c. மேல்நிலைப்பள்ளி.

d. நூலகம்.

Answer: கல்வி.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement