Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TNPSC G.K - 205 | பொதுத்தமிழ் - நெடுநல்வாடை.

TNPSC-GENERAL-TAMIL   
கல்விச்சோலை
Sunday, October 09, 2022

நெடுநல்வாடையின் உருவம் :


  • திணை - முல்லைத்திணை, வஞ்சித்திணை(அகமும் புறமும் கலந்த நூல்)
  • பாவகை - ஆசிரியப்பா
  • அடி எல்லை - 188

பெயர்க்காரணம் :


  • தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் திகழ்வதால் நெடுநல்வாடை என் ஆயிற்று.
  • நெடுமை + நன்மை + வாடை - நெடுநல்வாடை

வேறு பெயர்கள் :


  • பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
  • மொழிவளப் பெட்டகம்
  • சிற்பப் பாட்டு
  • தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா)
  •  நக்கீரர் கண்ட தமிழ்ச்சுரங்கம்

புலவர், தலைவன் :


  • பாடிய புலவர் - நக்கீரர்( மதுரை கணக்காயனார் மகன்)
  • பாட்டுடைத் தலைவன் - தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

உரை :


  • கோதண்டபாணி பபிள்ளை உரை
  • வேங்கடா செட்டியார் உரை

திரு.வி.காவின் கூற்று :


  • நூலின் பெயர் காரணத்தை திரு.வி.க அவர்கள், “வாடை துன்பத்தைக் குறிக்கும்; நல்ல என்பது அன்பை குறிக்கும்; நெடு என்பது அழியாமையை குறிக்கும்; எனவே அழியாது நீளும் நல்வாடை” என்றார்.
  • திரு.வி.க அவர்கள்,”ஒரு சிறு புல் நுனியில் மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல சிறிய நெடுநல்வாடையில் பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன” என்றார்.
  • திரு.வி.க அவர்கள், “நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம்; நக்கீரர் கண்ட சுரங்கம்; தமிழ்ச்சுரங்கம்” என நூலை பாராட்டுகிறார்.

பொதுவான குறிப்புகள் :


  • நெடுநல்வாடை பாட்டு தலைவனாக பாண்டியன் நெடுஞ்செழியனை குறிக்கிறது எனக் கூறியவர் நச்சினார்கினியர் ஆவார்.
  • “கொற்றவை வழிபாடே பாட்டின் நடுமணியாகப் பதிந்துள்ள வைரம்” என்கிறார் மு.வரதராசனார்
  • பாண்டிமாதேவியைப் “புனையா ஓவியம்” என வருணிக்கின்றது இந்நூல்.
  • இதில் கூறப்பட்டுள்ள பாசறை - கூதிர் பாசறை
  • பேராசிரயர் சுந்தரம்பிள்ளை, இந்நூலை 
    • பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
    • எத்துணையும் பொருட்கிசையும் இலக்கிணமில் கற்பனையே எனப் புகழ்கிறார். 
  • கட்டிட சிற்பியை நூலறி புலவர் என்கிறார் புலவர் 12 ராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்திகளைக் கூறுகிறது

முக்கிய அடிகள் :


  • குன்று குளிர்ப்பன்னக் கூதிர்ப்பானாள்
  • வேம்புதலை யாத நோன்காழ் எஃகம்
  • சிலரொடு திரிதரும் வேந்தன்
  • பலரொடு முரணிய பாசறைத் தொழிலே
  • மா மேயல் மறப்ப மந்தி கூர
  • பறவை பதிவான வீழ, கறவை
  • கன்று கோள் ஒழியக் கடிய வீசி
TNPSC-GENERAL-TAMIL
கல்விச்சோலை

TNPSC-GENERAL-TAMIL

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger