Ad Code

Responsive Advertisement

TNPSC G.K - 206 | பொதுத்தமிழ் - மதுரைக்காஞ்சி.

மதுரைக்காஞ்சியின் உருவம் :


  • திணை = மருதம், புறத்திணை
  • பா வகை = வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா
  • அடி எல்லை = 782

பெயர்க்காரணம் :


  • மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள் நிலையற்றவை என்று காஞ்சித் திணையை விரித்துக் கூறுவது மதுரைக்காஞ்சி

வேறு பெயர்கள் :


  • மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)
  • கூடற் தமிழ்
  • காஞ்சிப்பாட்டு

புலவர், தலைவன் :


  • பாடிய புலவர் = மாங்குடி மருதனார்
  • பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
  • பாண்டியனின் போர் வெற்றி :
  • கோச்சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
  • குறுநில மன்னர்கள் ஐவர் = திதியன், எழினி, எருமையூரன், பொருளன், இருங்கோ வேண்மான் ஆகியவர்களை தோற்கடித்தான்
  • பாண்டியனின் முன்னோர் :
  • முந்நீர் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன்
  • பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி
  • நிலத்திரு திருவிற் பாண்டியன்

பொதுவான குறிப்புகள் :


  • நிலையாமையை உணர்த்தும் திணை காஞ்சித்திணை
  • தொல்காப்பியரின் காஞ்சித்திணை நிலையாமை பற்றியது; புறப்பொருள் வெண்பா மாலையின் காஞ்சித் திணை போர் பற்றியது.
  • பத்துப்பாட்டின் அதிக அடிகளை கொண்டது
  • பத்துப்பாட்டு வெண்பா இந்நூலை “பெருகுவளமதுரை காஞ்சி” எனப் போற்றுகிறது.
  • மதுரையின் நாள் அங்காடியும்(பகல் கடல்), அல் அங்காடியும் (இரவு நேரக்கடை) கூறப்பட்டுள்ளது.
  • இதனை “மாநகர்ப் பாட்டு” எனக் கூறியவர் ச.வே.சுப்பிரமணியன்
  • மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்கள் = திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா, திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா.
  • அமைச்சர்கள் காவிதி பட்டம் பெறுதல் பற்றி கூறுகிறது 354 அடிகள் மதுரையை பற்றி மட்டுமே சிறப்பித்துக் கூறுகிறது கொற்கை துறைமுகத்தின் முத்தினை சிறப்பாக கூறுகிறது பழந்தமிழரின் வணிகப் பொருள்களை பற்றி குறிப்புகள் உள்ளது பொறி மயிர் வாரணம் கூட்டுதுறை வய்மாப் புலியொடு குழும
  • இவ்வடிகள் மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை மதுரைகாஞ்சி மூலம் அறியலாம்

முக்கிய அடிகள் :


  • கரை பொருது இறங்கும் கணைஇரு முந்நீர்
  • திரையீடு மணலிலும் பலரே, உரைசொல்
  • மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே
  • அளந்து கடை அறியா வளம்கெழு தாரமொடு
  • புத்தேன் உலகம் கவினிக் காண்வர
  • மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement