Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

TAMIL G.K MCQ FOR TNPSC | TRB | 51-100

TAMIL G.K MCQ FOR TNPSC | TRB | 51-100

51. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகத்தின் இடம் என்ன?

A. 5.

B. 2.

C. 1.

D. 4.

Answer: B. 2.


52. குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்று எது?

A. நைட்ரஜன் டை ஆக்சைடு.

B. கந்தக டை ஆக்சைடு.

C. ஓசோன்.

D. குளோரோ புளோரோ கார்பன்.

Answer: D. குளோரோ புளோரோ கார்பன்.


53. உலக காற்று நாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?

A. ஜூன் 5.

B. ஜூலை 15.

C. ஜூன் 15.

D. ஆகஸ்ட் 15.

Answer: C. ஜூன் 15.


54. "காற்றே,வா மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா" என்ற பாடலை பாடியவர் யார்?

A. க.சச்சிதானந்தன்.

B. பாரதியார்.

C. அப்துல் ரகுமான்.

D. தேவகோட்டை வா. மூர்த்தி.

Answer: B. பாரதியார்.


55. சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப்பட்டவர் யார்?

A. கம்பர்.

B. குமரகுருபரர்.

C. பாரதியார்.

D. கபிலர்.

Answer: C. பாரதியார்.


56. வசனக் கவிதை வடிவம் தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

A. பாரதிதாசன்.

B. பாரதியார்.

C. மு.வரதராசனார்.

D. எழில் முதல்வன்.

Answer: B. பாரதியார்.


57. முல்லைப்பாட்டை இயற்றியவர் யார்?

A. கபிலர்.

B. கீரந்தையார்.

C. நப்பூதனார்.

D. மாணிக்கவாசகர்.

Answer: C. நப்பூதனார் (காவேரிபூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகன்).


58. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது எது?

A. இளவேனிற் காலம்.

B. பின்பனிக் காலம்.

C. கார்காலம்.

D. குளிர்காலம்.

Answer: C. கார்காலம்.


59. முல்லை நிலத்தின் உரிபொருள் என்ன?

A. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.

B. இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

C. ஊடலும் ஊடல் நிமித்தமும்.

D. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.

Answer: B. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்).


60. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?

A. பட்டினப்பாலை.

B. மலைபடுகடாம்.

C. முல்லைப்பாட்டு.

D. மதுரைக்காஞ்சி.

Answer: C. முல்லைப்பாட்டு.


61. நேமி என்பதன் பொருள் என்ன?

A. அகன்ற உலகம்.

B. மலை.

C. சக்கரம் (வலம்புரிச்சங்கு).

D. நறுமணமுடைய மலர்கள்.

Answer: C. சக்கரம் (வலம்புரிச்சங்கு).


62. தொங்கான் என்பதன் பொருள் என்ன?

A. தலைமை மாலுமி.

B. புயல்.

C. கப்பல்.

D. சுழற்சி.

Answer: C. கப்பல்.


63. புயல்களின் சுழற்சி விளைவை 1835-ல் கண்டுபிடித்தவர் யார்?

A. ஹிப்பாலஸ்.

B. ஜான் வீலர்.

C. காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்.

D. எட்வின் ஹப்பிள்.

Answer: C. காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்.


64. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி வெளியான முதல் புதினம் எது?

A. கோபல்லபுரத்து மக்கள்.

B. சாயாவனம்.

C. புயலிலே ஒரு தோணி.

D. மழையும் புயலும்.

Answer: C. புயலிலே ஒரு தோணி.


65. ப. சிங்காரம் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் எங்கு பிறந்தார்?

A. இடைசெவல்.

B. கொற்கை.

C. சிங்கம்புணரி.

D. கருவூர்.

Answer: C. சிங்கம்புணரி.


66. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

A. 5.

B. 6.

C. 8.

D. 9.

Answer: B. 6.


67. காலம் கரந்த பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும்?

A. வினைமுற்று.

B. பெயரெச்சம்.

C. வினைத்தொகை.

D. பண்புத்தொகை.

Answer: C. வினைத்தொகை.


68. உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. வினைத்தொகை.

B. பண்புத்தொகை.

C. உம்மைத்தொகை.

D. உவமைத்தொகை.

Answer: D. உவமைத்தொகை.


69. 'பாடு இமிழ் பனிக் கடல் பருகி' என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி என்ன?

A. காற்று வீசுதல்.

B. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்.

C. புயல் உருவாவதற்கான காரணம்.

D. மழை பொழிதல்.

Answer: B. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்.


70. பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்தி என்ற நூலின் ஆசிரியர் யார்?

A. பாரதியார்.

B. ச. முகமது அலி.

C. கோவை இளஞ்சேரன்.

D. எஸ்.ராமகிருஷ்ணன்.

Answer: C. கோவை இளஞ்சேரன்.


71. விருந்தே புதுமை என்று கூறியவர் யார்?

A. திருவள்ளுவர்.

B. இளங்கோவடிகள்.

C. கம்பர்.

D. தொல்காப்பியர்.

Answer: D. தொல்காப்பியர்.


72. கோவலனைப் பிரிந்துவாழும் கண்ணகி விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாகக் கூறும் நூல் எது?

A. மணிமேகலை.

B. சிலப்பதிகாரம்.

C. கம்பராமாயணம்.

D. கலிங்கத்துப்பரணி.

Answer: B. சிலப்பதிகாரம்.


73. உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே" என்ற புறநானூறு பாடலை பாடியவர் யார்?

A. இளங்கோவடிகள்.

B. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.

C. ஔவையார்.

D. கபிலர்.

Answer: B. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.


74. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு எனக் கூறும் நூல் எது?

A. குறுந்தொகை.

B. நற்றிணை.

C. புறநானூறு.

D. பொருநராற்றுப்படை.

Answer: B. நற்றிணை.


75. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்று கூறியவர் யார்?

A. பாரதியார்.

B. இளம்பெருவழுதி.

C. ஔவையார்.

D. இளையான்குடி மாறநாயனார்.

Answer: C. ஔவையார்.


76. அமெரிக்காவின் எந்த தமிழ்ச்சங்கம் வாழை இலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது?

A. ஹூஸ்டன் தமிழ்ச் சங்கம்.

B. மினசோட்டா தமிழ்ச் சங்கம்.

C. நியூயார்க் தமிழ்ச் சங்கம்.

D. சிகாகோ தமிழ்ச் சங்கம்.

Answer: B. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்.


77. காசிகாண்டம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A. செயங்கொண்டார்.

B. அதிவீரராம பாண்டியர்.

C. குமரகுருபரர்.

D. பரஞ்சோதி முனிவர்.

Answer: B. அதிவீரராம பாண்டியர்.


78. அதிவீரராம பாண்டியர் எழுதிய வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நூல் எது?

A. காசிகாண்டம்.

B. கூர்ம புராணம்.

C. நறுந்தொகை.

D. வாயுசம்கிதை.

Answer: C. நறுந்தொகை.


79. மலைபடுகடாம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A. கபிலர்.

B. நப்பூதனார்.

C. பெருங்கௌசிகனார்.

D. குமரகுருபரர்.

Answer: C. பெருங்கௌசிகனார்.


80. மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?

A. கூத்தராற்றுப்படை.

B. பொருநராற்றுப்படை.

C. பெரும்பாணாற்றுப்படை.

D. சிறுபாணாற்றுப்படை.

Answer: A. கூத்தராற்றுப்படை.


81. மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்?

A. பாண்டியன்.

B. கரிகால் வளவன்.

C. நன்னன்.

D. சேரன்.

Answer: C. நன்னன்.


82. கரிசல் இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கியவர் யார்?

A. கி.ராஜநாராயணன்.

B. கு.அழகிரிசாமி.

C. பூ. மணி.

D. வேல.ராமமூர்த்தி.

Answer: B. கு.அழகிரிசாமி.


83. கோபல்லபுரத்து மக்கள் என்ற நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆண்டு எது?

A. 1920.

B. 1997.

C. 1991.

D. 2004.

Answer: C. 1991.


84. ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்வகைப்படும்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்துவது எவ்வாறு அழைக்கப்படும்?

A. தொகைநிலைத் தொடர்.

B. தொகாநிலைத் தொடர்.

C. எழுவாய்த் தொடர்.

D. வேற்றுமைத் தொடர்.

Answer: B. தொகாநிலைத் தொடர்.


85. "பாடினாள் கண்ணகி" என்பது எவ்வகைத் தொடர்?

A. எழுவாய்த் தொடர்.

B. விளித் தொடர்.

C. பெயரெச்சத் தொடர்.

D. வினைமுற்றுத் தொடர்.

Answer: D. வினைமுற்றுத் தொடர்.


86. 'அன்பால் கட்டினார்' என்பது எவ்வகைத் தொடர்?

A. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

B. நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

C. மூன்றாம் வேற்றுமைத்தொகை.

D. நான்காம் வேற்றுமைத்தொகை.

Answer: A. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.


87. காசிக்காண்டம் என்பது எதன் பெருமையை பாடும் நூல்?

A. கொற்கை நகரத்தின்.

B. மதுரை நகரத்தின்.

C. காசி நகரத்தின்.

D. திருவாலவாய் நகரத்தின்.

Answer: C. காசி நகரத்தின் பெருமையை பாடும் நூல்.


88. "மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து "என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

A. திருக்குறள்.

B. கம்பராமாயணம்.

C. முக்கூடற்பள்ளு.

D. சிலப்பதிகாரம்.

Answer: C. முக்கூடற்பள்ளு.


89. திருக்குறள் தெளிவுரை என்ற நூலின் ஆசிரியர் யார்?

A. அறிவுமதி.

B. வ.உ.சிதம்பரனார்.

C. கி.ராஜநாராயணன்.

D. மருத்துவர்.கு சிவராமன்.

Answer: B. வ.உ.சிதம்பரனார்.


90. 'உரை (றை) ஊற்றி ஊற்றிப் பார்த்தலும் புளிக்காத பால்! தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்' என்று திருக்குறள் பற்றிய கவிதை எழுதியவர் யார்?

A. பாரதியார்.

B. பாரதிதாசன்.

C. அறிவுமதி.

D. மு.வரதராசனார்.

Answer: C. அறிவுமதி.


91. ஒழுக்கம் எல்லோர்க்கும் சிறப்பைத் தருவதால் அவ்வொழுக்கத்தை எதைக் காட்டிலும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?

A. செல்வத்தைக் காட்டிலும்.

B. உயிரினும் மேலானதாக.

C. புகழைக் காட்டிலும்.

D. அறிவைக் காட்டிலும்.

Answer: B. உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்.


92. இரக்கமில்லா கண்கள் எதனைப் போன்று பயனற்றது என வள்ளுவர் கூறுகிறார்?

A. பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை அதைப் போல.

B. நச்சு மரம் பழுத்ததைப் போல.

C. வேலோடு நின்றவன் போன்றது.

D. தன் கருங்கோட்டுச் சீறியாழை அடகு வைத்தது போல.

Answer: A. பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை அதைப் போல.


93. இந்தியாவின் பெரிய வங்கியான 'இலா' என்னும் உரையோடு மென்பொருளை (Chatbot) உருவாக்கியிருக்கிறது?

A. ரிசர்வ் வங்கி.

B. இந்தியன் வங்கி.

C. கனரா வங்கி.

D. பாரத ஸ்டேட் வங்கி.

Answer: D. பாரத ஸ்டேட் வங்கி.


94. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் என்ன?

A. வாட்சன்.

B. வேர்டு ஸ்மித்.

C. பெப்பர்.

D. ரோபோ.

Answer: C. பெப்பர்.


95. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் எத்தனையாவது திருமுறையாக உள்ளது?

A. நான்காம் திருமொழி.

B. ஐந்தாம் திருமொழி.

C. மூன்றாம் திருமொழி.

D. இரண்டாம் திருமொழி.

Answer: B. ஐந்தாம் திருமொழி.


96. பெருமாள் திருமொழியை இயற்றியவர் யார்?

A. மாணிக்கவாசகர்.

B. நம்மாழ்வார்.

C. குலசேகராழ்வார்.

D. கீரந்தையார்.

Answer: C. குலசேகராழ்வார்.


97. குலசேகர ஆழ்வார் வித்துவக்கோடில் உள்ள எந்த தெய்வத்தை அன்னையாக உருவகித்து பாடுகிறார்?

A. உய்யவந்த பெருமானை.

B. திருமாலை.

C. முருகனை.

D. சிவனார்.

Answer: A. உய்யவந்த பெருமானை.


98. விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி " என்ற பாடலின் ஆசிரியர் யார்?

A. மாணிக்கவாசகர்.

B. குலசேகராழ்வார்.

C. கீரந்தையார்.

D. கபிலர்.

Answer: C. கீரந்தையார்.


99. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்க சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" என்ற திருவாசகப் பாடலை பாடியவர் யார்?

A. குலசேகராழ்வார்.

B. மாணிக்கவாசகர்.

C. கீரந்தையார்.

D. நப்பூதனார்.

Answer: B. மாணிக்கவாசகர்.


100. சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது?

A. அகநானூறு.

B. புறநானூறு.

C. பரிபாடல்.

D. முல்லைப்பாட்டு.

Answer: C. பரிபாடல்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement